கரவாடும் வன்நெஞ்சர்க்கு
அரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை
விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில்
அனல்ஏந்தி
இரவாடும் பெருமானை
என்மனத்தே வைத்தேனே.
--திருநாவுக்கரசு நாயனார் தேவராம்:
கரவு = வஞ்சனை
ஆடும் = பொருந்திய
வன்னெஞ்சர் = கொடிய
மனத்தை உடையவர்.
அரியான் = அடையமுடியாதவர்.
கரவார்பால் = வஞ்சகம்
இல்லாதவனிடத்து.
விரவாடும் = கலந்திருக்கும்.
விடை = இடபம்.
வித்தகன் = அறிஞர்.
அரவு = பாம்பு.
அங்கை = உள்ளங்கை.
அனல் = தீ.
இரவாடும் = ஊழிக்காலத்து இருளில் கூத்தாடும்.
No comments:
Post a Comment