Monday, May 24, 2021

இராமநாதபுரம் ஜமீன் வழக்கு

 இராமநாதபுரம் ஜமீன் வழக்கு

The Ramnad Zamindar and another vs Doraisami (1882) ILR 7 Mad 341 Madras High Court

Bench: Justice C.A.Turner and Justice Kt. Kindersley

 

இராமநாதபுரம் ஜமீன் உரிமை தனக்கும் இருப்பதாக கூறிசிவசாமி தேவர் என்பவர் ஜமின்தாரைக் கேட்கிறார். அவர்களுக்குள் ஒரு உடன்பாடு எற்படுகிறது. அதன்படி ஜமீன் உரிமையை சிவசாமி விட்டுக் கொடுத்து விடுகிறார். அதற்க ஈடாஅவருக்கு மாதம் ரூ.200 மாத அலவன்ஸ் மறும் சில கிராமங்களின் நிர்வாகங்களும் சிவசாமிக்கு கொடுக்கப்படுகிறது. 

 

பின்னர்சிவசாமி தேவர் இறந்து விடுகிறார். அவருக்கு முதல் மனைவி குழந்தை நாச்சியார். இரண்டாவது மனைவி ரமாமணி அம்மாள். இந்த ரமாமணிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் பெயர் துரைச்சாமி தேவர். மகளைத் திருமணம் செய்து கொடுத்து அவளுக்கு குழந்தைகள் உள்ளன. அவள் இறந்து விடுகிறாள்.

 

ஜமீனில் மூலம்இறந்த சிவசாமித் தேவருக்கு கிடைத்து வந்த மாத அலவன்ஸ் ரூ.200ஐ இராமநாதபுரம் ஜமின்தார் நிறுத்தி விட்டார். அது சிவசாமித் தேவருக்கு தனிபட்ட முறையில் கொடுக்கபட்ட அலவன்ஸ் என்றும்அவர் இறந்த பின்னர் அவரின் வாரிசுகளுக்கு அந்த பணத்தை தொடரந்து பெற்றுக் கொள்ள எந்த உரிமை இல்லை என்றும் ஜமின்தார் சொல்லிவிட்டார். ஆனாலும் மூத்த மனைவி குழந்தை நாச்சியார் வழக்குப் போட்டு அதை பெறும் உரிமையைப் கோர்ட் மூலம் பெற்று விட்டார். அந்த வழக்கு லண்டன் பிரைவி கவுன்சில் வரை சென்றது.

 

இதற்கிடையில்இறந்த சிவசாமித் தேவர் சொத்திலும்ஜமீன் மூலம் கிடைக்கும் மாத அலவன்ஸ் ரூ.200 இவைகளில் இரண்டாவது மனைவியும் அவர் மகன் துரைசாமியும் பங்கு இருப்பதாக வழக்குப் போடுகிறார்கள்.

 

ஆனால் முதல் மனைவி குழந்தை நாச்சியார்,  இறந்த சிவசாமித் தேவருக்கு தான் மட்டுமே மனைவி என்றும்ரமாமணி அவரின் மனைவி இல்லை என்றும்ரமாமணி திருச்சுழி கோயிலில் நாட்டியக்காரியாக இருந்தவர் என்றும்அவளை திருமணம் செய்யவில்லை என்றும்அப்படி ஏதேனும் திருமணம் செய்திருந்தாலும் அவள் நாட்டியக்காரி என்பதால் அந்த திருமணம் செல்லாது என்றும்எனவே அவருக்கு பிறந்த மகனான துரைச்சாமிக்கும் எந்த பங்கும் இல்லை என்றும் மறுத்து விட்டார்.

 

வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. பல சாட்சிகள் விசாரிக்கப்படுகிறார்கள். அதில்ரமாமணியை சிவசாமித் தேவர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார் என்றும்அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர் என்றும் சாட்சி சொன்னார்கள். மேலும்சிவசாமித் தேவர் இறந்தபோதுரமாமணியும் வந்திருந்தார் என்றும்அவரும் மனைவியாக எல்லா சடங்குகளும் செய்தார் என்றும்இறந்த சிவசாமித் தேவரின் தாயார் முன்னிலையில்ரமாமணியின் கழுத்தில் இருந்த தாலியை இந்து முறைப்படி அறுத்துவிட்டுஅவளுக்கு ஒரு தங்க சங்கிலியை மாமியார் போட்டார் என்றும் சாட்சிகள் சொல்கிறார்கள். மேலும்இரண்டாம் மனைவி ரமாமணியின் மகளைமுதல் மனைவி குழந்தை நாச்சியார் சொந்தக்காரருக்கே திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள் என்றும் சாட்சிகள் சொல்கிறார்கள்.

 

சாட்சியங்களை வைத்து கோர்ட்டுரமாமணியும் ஒரு மனைவிதான் என்றும்அவளுக்கு பிறந்த மகன் துரைசாமிஇறந்த சிவசாமித் தேவரின் மகன் தான் என்றும்எனவே ஜமீன்தார் கொடுக்கும் மாத அலவன்ஸ் பணத்திலும்சிவசாமித் தேவரின் சொத்துக்களிலும் இரண்டாம் மனைவிக்கும்அவளின் மகனுக்கும் பங்கு உண்டு என்று சென்னை ஐகோர்ட் 1881-ல் இந்த தீர்ப்பை கூறியுள்ளது.

**

 

 

 

 

No comments:

Post a Comment