பிரஜாபதி சொல்கிறார்: கணவனின் பாதி உடம்பும் ஆன்மாவும் அவனின் மனைவிதான் என்கிறார். கணவன் இறந்தபின், அவனின் மறுபாதியான மனைவி இறக்காமல் இருக்கும்போது, எப்படி அவனின் சொத்து மற்றவர்களுக்குப் போகும்? என்கிறார்.
பதிவிரதைக்கு மட்டுமே அவள் கணவனின் சொத்தில் பங்கு:
மைனர் இராமையாக் கோனார் v. முத்தையா முதலியார்,
AIR 1951 Mad 954 : (1951) II MLJ 314
Author: Chief Justice Rajamannar, Justice Viswanatha Sastri, Justice Panchapakesa Iyer.
சென்னை உயர்நீதிமன்றம் 1951-ல் வழங்கிய தீர்ப்பு
சபாபதி படையாச்சியும் முத்துவேலு படையாச்சியும் பாகம் பிரியாத இந்து சகோதரர்கள். இதில், முத்துவேலு படையாச்சி 1943-ல் இறந்து விடுகிறார். முத்துவேலு படையாச்சிக்கு அலமேலு என்று ஒரு மனைவி உண்டு. மகன் இல்லை. இரு சகோதரர்களுக்கும் கூட்டுக் குடும்பச் சொத்துக்கள் இருக்கின்றன. பழைய இந்து சாஸ்திர சட்டப்படி கூட்டுக்குடும்ப சொத்தில், ஒரு சகோதரர் இறந்து விட்டால், அவரின் பங்கானது அவரின் மற்றொரு சகோதரருக்குப் போய் சேரும்.
ஆனால், இங்கு, அந்த அலமேலு தன் இறந்த கணவரின் பாதி பாகச் சொத்தை, இராமையாக் கோனாருக்கு விற்று விடுகிறார். பழைய இந்து சட்டப்படி, இந்து கூட்டுக் குடும்பச் சொத்துக்களில் விதவை மனைவிகளுக்கு பங்கு கிடையாது. பங்காளிகள் (Coparceners) மட்டுமே கூட்டுக் குடும்பச் சொத்தை எடுத்துக் கொள்வார்கள். விதவை மனைவி அவர் கணவரின் பங்காளிகளின் பராமரிப்பில் இருந்து வர வேண்டும். இப்படியான, பழைய இந்து சட்டத்துக்குப் பின்னர், இந்து விதவைகளுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டும் என கருதி, ஒரு புதிய சட்டத்தை பிரிட்டீஸ் அரசு இந்தியாவில் கொண்டு வருகிறது. அந்தச் சட்டத்தின் பெயர் The Hindu Women’s Rights to Property Act, 1937. இந்த 1937 சட்டம் வந்தபின்னர், விதவை மனைவிகளுக்கு தன் கணவரின் சொத்தில் பங்கு கிடைக்கிறது. அது எப்படி என்றால்: இறந்த இந்து ஆணுக்கு கூட்டுக் குடும்பச் சொத்து இருந்து, அவர் மனைவியையும், மகனையும் விட்டுவிட்டு இறந்து விட்டால், இறந்தவருக்கு ஒரு பங்கும், அவரின் மகனுக்கு ஒரு பங்கும் கிடைக்கும். இறந்தவரின் பங்கை, அவரின் விதவை மனைவி அவளின் ஆயுட்காலம் வரை அனுபவித்து வரலாம். அடமானம் வைத்து கடன் பெறலாம். விற்பனையும் செய்யலாம். ஆனால் அந்த விற்பனையானது அவளின் ஆயுட்காலம் வரை செல்லும். அவள் காலத்துக்குப் பின்னர் அந்தப் பாகச் சொத்து, அவளின் மகனுக்குப் போய்ச் சேரும்.
ஒருவேளை, அந்த இறந்து இந்து ஆணுக்கு, மகனே இல்லாமல் இருந்தால், அவரின் விதவை மனைவி அவரின் பங்கை முழு உரிமையுடன் அடைந்து கொள்வாள். எனவே இந்த வழக்கில், இறந்த முத்துவேலு படையாச்சிக்கு மகன் இல்லை. விதவை மனைவி மட்டுமே இருக்கிறாள். எனவே முத்துவேலு படையாச்சிக்குச் சேர வேண்டிய சொத்து, அவரின் விதவை மனைவிக்கு முழு உரிமையுடன் வருகிறது. ஆகவே அவள் அந்தச் சொத்தை இராமையாக் கோனாருக்கு விற்று விடுகிறாள். தான் விற்றது 1937 பெண்களின் சொத்துரிமைச் சட்டப்படி செல்லும் என்கிறாள்.
ஆனால், இறந்த முத்துவேலு படையாச்சியின் சகோதரர் சபாபதி படையாச்சியோ, இந்த சொத்து முழுவதும் தனக்கே வந்து சேரும் என்று மொத்த சொத்தையும் முத்தையா முதலியாருக்கு விற்று விடுகிறார். அவர் கூற்றுப்படி, கணவர் இறப்பதற்கு முன்னரே அலமேலு அம்மாள், கும்பகோணத்தில் வேறு ஒரு நபருடன் வாழ்க்கை நடத்தி்க் கொண்டு இருக்கிறாள் என்கிறார். அது இங்கு மறுக்கப்படவில்லை.
பழைய இந்து சாஸ்திர சட்டப்படி, விதவை மனைவி நடத்தை கெட்டவளாக (Unchaste wife) இருந்தால் இறந்த கணவரின் பங்கைப் பெற முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது என்றும், மேலும், 1937-ல் வந்த பெண்கள் சொத்துரிமை சட்டத்திலும், நடத்தை கெட்ட விதவை மனைவி, கணவரின் சொத்தில் பங்கு கேட்க முடியாது என்றும் மறைமுகமாகவே சொல்லப் பட்டுள்ளது என்றும் சொத்தை வாங்கிய முத்தையா முதலியார் வாதம் செய்கிறார்.
பழைய இந்து சாஸ்திர சட்டத்தில் நடத்தைகெட்ட விதவை, கணவரின் சொத்தில் பங்கு கேட்க முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், 1937-ல் வந்த பெண்கள் சொத்துரிமை சட்டத்தில் அவ்வாறு குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றும். “Notwithstanding any rule of Hindu Law or custom to the contrary, the provisions of Sec.3 shall apply where a Hindu dies intestate…..” என்று குறிப்பிட்டுள்ளதாகவும், எனவே பழைய இந்து சாஸ்திர சட்டம் எப்படி இருந்தபோதிலும், நடத்தை கெட்ட விதவையும் அவள் கணவனின் சொத்தில் பங்கு பெறலாம் என்று உள்ளதாக இராமையாக் கோனார் வாதம் செய்கிறார்.
கோர்ட்டின் தீர்ப்பு:
Justice Rajamannar:
பழைய இந்து சாஸ்திர சட்டப்படி, நடத்தை கெட்ட விதவை, கணவரின் சொத்தில் பங்கு கேட்க முடியாது என்பது சரியே. 1937-ல் வந்த “பெண்கள் சொத்துரிமை சட்டத்திலும்” அப்படியே சொல்லப்பட்டுள்ளதா என்பதே கேள்வி. 1937-ல் இந்தச் சட்டம் வரும் போது, பெண்களுக்கு குறிப்பாக விதவைகளுக்கு கணவரின் சொத்தில் பங்குரிமை வேண்டும் என்று நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
1937-சட்டத்தில், இந்து கூட்டுரிமை சொத்தில், இறந்த ஆணின் பங்கு, அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் இவர்களுடன், விதவை மனைவியும் சேர்ந்து பங்கு பெறுவாள் என்றும், இறந்த கணவருக்கு கிடைக்கும் ஒரு பங்கை, அவரின் விதவை மனைவி அடைந்து கொள்ளலாம் என்றும், ஆனால் அவள் அதை அவளின் ஆயுட்காலம் வரை அனுபவிக்க மட்டுமே உரிமை உண்டு என்றும் அந்தச் சட்டம் சொல்கிறது. ஒருவேளை இறந்த இந்து ஆணுக்கு மகன்கள் இல்லாதபோது, விதவை மனைவி மட்டுமே மொத்த சொத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அதில் நடத்தை கெட்ட மனைவி சொத்தை அடைய முடியாது என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 1937 சட்டத்தில் “Notwithstanding any rule of Hindu law or custom to the contrary….” என்று சொல்லப்பட்டுள்ளதை வைத்துப் பார்த்தால், பழைய இந்து சாஸ்திர சட்டத்தில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றே கருத வேண்டும்.
ஏனென்றால், பழைய இந்து சாஸ்திர சட்டத்தில், ஊமை, மனநிலை சரியால்லாதவன், குஷ்டரோகி இவர்கள் வாரிசாக இருந்தால், அவர்கள் கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கு பெற முடியாது என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், 1928-ல் ஒரு சட்டம் கொண்டு வந்து இந்த குறையை நீக்கி விட்டார்கள். அந்தச் சட்டத்துக்குப் பெயர் The Hindu Inheritance (Removal of Disabilities) Act XII of 1928.
1928 சட்டத்திலும், நடத்தை கெட்ட மனைவிக்கு பங்கு இல்லை என்பதைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. எனவே 1928 சட்டத்திலும், 1937 சட்டத்திலும் நடத்தை கெட்ட விதவை மனைவி கணவனின் சொத்தில் பங்கு பெறலாம் என்று எந்தவிதத்திலும் சொல்லப்படவில்லை.
Justice Viswanatha Sastri:
It is the general rule of Hindu law that a son excludes the widow in respect of separate property; and the surviving coparceners exclude the widow in respect of joint family property. The point for determination is whether a Hindu married woman living in adultery at the time of her husband’s death is disqualified by reason of her unchastity from succeeding to his interest in joint family property under Sec.8 of the Hindu Women’s Rights to Property Act XVIII of 1937.
பழைய இந்து சாஸ்திரங்கள், “இந்து விதவை, அவள் கணவர் இறக்கும்போதும் பதிவிரதையாக இருக்க வேண்டும்; அவன் இறந்த பின்னரும் அவ்வாறே இருக்க வேண்டும்” என்கிறது.
மனு சாஸ்திரம்: “The wife alone, being sonless and keeping the bed of her lord unsullied and leading a life of religious observance, may take his entire estate.” என்கிறது. மகன் இல்லாமல் இறந்த இந்து ஆணின் சொத்தை அவனின் விதவை மனைவி முழுவதுமாக அடையலாம். ஆனால் அவளின் கணவன் இறப்பதற்கு முன்னரும், பின்னரும் அவள் பதிவிரதையாகவும் இருக்க வேண்டும்.
காட்டாயனா இந்து சாஸ்திரம்: Let the sonless widow, preserving unsullied the bed of her lord and bidding with her venerable protector, enjoy with moderation he (husband’s) property until her death.
மற்ற இந்து சாஸ்திரங்களில்: Other texts state that “half the body” of her deaceased husband the widow takes his property in default of male issue. The above texts show that not only that the sonless widow’s right in her husband’s property is a mere right of enjoyment but that the exercise of that right is dependent on her chastity. The chastity is imposed as a permanent condition of the widow’s enjoymnet of her husband’s estate; and that a violation of that condition would involve a forfeiture of the right.
ஆனால், ஐரோப்பிய பண்டிதர் கூல்புரூக் மற்றும் ஐரோப்பிய நீதிபதிகள் இந்த இந்து சாஸ்திர சட்டத்தை வேறு மாதிரி விளக்கி உள்ளார்கள். “கணவர் இறக்கும் தருவாயில் அவனின் மனைவி பதிவிரதையாக இருந்தால் போதும். அவனின் சொத்துக்களை அவள் அடையலாம். அதன் பின்னர், அவள் தொடர்ந்து பதிவிரதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இல்லாத போதும், அவள், கணவரின் சொத்தை தொடர்ந்து அனுபவிக்கலாம்” என்று சட்ட வியாக்கியானம் செய்துள்ளனர்.
ஆனால், இந்திய நீதிபதிகள் வேறு மாதிரி சட்ட வியாக்கியானம் செய்துள்ளனர். கூட்டுக் குடும்ப சொத்தில், கணவன் இறந்து விட்டால், அவனின் விதவை, அவளின் வாழ்நாள் வரை ஜீவனாம்ச உரிமை பெற தகுதி உடையவள். ஆனால் அவள் பதிவிரதை தன்மையை பின்னர் இழந்து விட்டால், அவளுக்கு ஜீவனாம்ச உரிமை நிறுத்தப்படும். அப்படி இருக்கும்போது, மகன் இல்லாத விதவை, தன் கணவரின் சொத்தை முழுவதுமாக அடைந்து அனுபவிக்க அவள் பதிவிரதையாக இருக்க வேண்டும். கணவன் இறக்கும்போதும் பதிவிரதையாகவும், இறந்த பின்னரும் பதிவிரதையாகவும் இருக்க வேண்டும். சொத்துக் கிடைத்த பின்னர் அவள் அதை மீறினால், அவளின் உரிமை பறிக்கப்படும் என்கிறார்கள்.
கந்தசாமி பிள்ளை v. முருகம்மாள் என்ற வழக்கில் (இது 1895-ல் சென்னை உயர்நிதிமன்றம் வழங்கிய தீர்ப்பு (1896) ILR 19 Mad 6. Justice சுப்பிரமணிய ஐயர் வழங்கிய தீர்ப்பு) விதவை மனைவி பதிவிரதையாக இல்லாமல் இருந்தால், அதற்காக அவளை தெருவில் விட முடியுமா? அவள் வாழ்நாள் ஜீவனத்துக்கு என்ன செய்வாள்? இந்த விஷயத்தைப் பொறுத்து முடிவு எடுப்பது கஷ்டம்தான். As a rule of conduct, for husband, that even the wife who has been guilty of unchastity should not be left in a state of perfect destitution. But it has still be determined in what cases and to what extent the Court will enforce them.
எனவே கணவன் இறக்கும்போது, விதவை பதிவிரதையாக இருந்தால் போதும். அவள், கணவன் சொத்தில் பங்கு பெறலாம். அதற்குப் பின்னர் அவள் பதிவிரதையாக இருக்க கட்டாயப் படுத்து முடியாது. The condition of chastity however attaches to the estate only at its commencement. Though the Act (1937 Act) conferred new rights of succession on Hindu widows in the two classess of cases, it did not purport to abrogate the pre-existing rule of Hindu law excluding an unchaste widow from succession to the property of her husband.
1946-ல் ஒரு சட்டம் வந்தது. The Hindu Married Women’s Rights to Separate Residence and Maintenance Act 1946.அதில் பதிவிரதையாக இல்லாத மனைவி, கணவனை விட்டு தனித்து வாழ உரிமை கோர முடியாது என்றும், அது ஒரு சிறு குற்றம் என்று எடுத்துக் கொள்ள முடியாது (That an adulterous conduct or unchastity in a marrried woman was not a minor or negligible misdemeanour) என்று கூறியுள்ளது.
எனவே, விதவை அலமேலு, அவள் கணவர் இறப்பதற்கு முன்பே வேறு ஒருவருடன் வாழ்கிறாள். பதிவிராத தன்மையை இழந்தவள் கணவன் சொத்தில் பங்கு பெற முடியாது. எனவே அலமேலு எழுதிக் கொடுத்த கிரயம் செல்லாது.
Justice Panchapakesa Iyer:
Chastity is considered by all schools of Hindu law, and by all Hindus as Truth in Action, and this is a land where it is proclaimed that God is Truth and Truth is God. For the Hidus, chastity in wife is the first thing required, all other qualities paling into insignificance beside it.
வேதம் என்ன சொல்கிறது என்றால்: அர்தா வா ஏச ஆத்மனே யஞ்யேதா. She….the wife…is born as half of the self. Sati Savitri leaped across death with chastity as her sole armour and shield, and got back the life of her husband, Satyawan, from Yama who had to yield her husband’s body, the submerged half of the wand of life of the couple, when it was pulled by her, his half standing out of the waters of death.
பிரஜாபதி சொல்கிறார்: கணவனின் பாதி உடம்பும் ஆன்மாவும் அவனின் மனைவிதான் என்கிறார். கணவன் இறந்தபின், அவனின் மறுபாதியான மனைவி இறக்காமல் இருக்கும்போது, எப்படி அவனின் சொத்து மற்றவர்களுக்குப் போகும்? In Vedas and Smritis and popular usage, the wife is declared to be half of the body of her husband and to be sharing equally the furits of her husband’s good and bad acts. Of him whose wife is not dead, half the body survives. When half his body survives, how can any one else inherit his property?
யஞ்ஞவாக்கியர் சொல்கிறார்: ஒரு இந்து, அவனின் மகன் இல்லாமல் இறந்து விட்டால், அவனின் மனைவி, மகள், பெற்றோர், சகோதரன்கள் அவனின் சொத்து அடைவார்கள்.
விஷ்ணு சொல்கிறார்: ஒரு இந்து, அவனின் மகன் இல்லாமல் இறந்து விட்டால், அவனின் மனைவி அந்தச் சொத்தை அடைவாள்.
பிரபஸ்பதியும் இதேயே சொல்கிறார். மேலும், Performing religious ceremonies and observing fasts, chaste, virtuous, and always making gifts for the benefit of her husband’s soul, even a childless widow goes to heaven. ஒரு இந்து ஆணுக்கு மகன் இல்லை என்றால், அவனுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. ஆனால், அ்வன் மனைவி பதிவிரதையாக இருந்து அவனுக்காக தான தர்மம் செய்து வந்தால், அவளும் சொர்கத்தை அடைவாள்.
திருவள்ளுவர் சொல்கிறார். பதிவிரதை சொன்னால் உடனே மழை பெய்யும். (பெய் எனப் பெய்யும் மழை). “Is there anything greater than a wife with the armour and shield of chastity? She workships no other God than her husband. Verily, at her bidding the rain fall. Her chastity is her armour and her shield. A home with a chaste wife lacks nothing. If a wife lacks chastity, the home is doomed.
And this was only natural, seeing that the patriarchal Hindu law, of Sapindas and Samanodhakas, depended on the chastity of the cornerstone of its edifice.
எனவே, 1937 சட்டமானது விதவைகளுக்கு கணவன் சொத்தில் பங்குரிமை அளிப்பதற்காக கொண்டு வரப் பட்டது. அதில் பழைய இந்து சாஸ்திர சட்டத்தில் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை. (பிறவி புத்தி சுவாதீனம் இல்லாதவர், பிறவிப் பைத்தியம், கணவனைக் கொலை செய்தவள், பதிவிரதை தன்மையை இழந்தவள் இவர்களுக்குச் சொத்தில் பங்கு இல்லை).
ஜிமூக்தவாகனர் கொள்கை: A hundred texts cannot annul a settled fact. In other words, it is only a rule of prudence recognising ‘a fait accompli’ and cannot be applied before the fact occurs.
எனவே, கணவன் சொத்தில் விதவை மனைவிக்கு பங்கு கொடுக்கும்போது, அவள் பதிவிரதை என்று பார்ப்பதில் தவறில்லை. It is only a ‘quid pro quo’. சரிக்குச் சரி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வழக்கில், விதவை அலமேலு, கணவனை விட்டுவிட்டு, ஒரு கள்ளக் காதலனுடன் ஓடி விட்டாள். பின்னர் கணவன் சென்று அழைத்து வருகிறான். சில நாட்கள் கழித்து மறுபடியும் அவனிடமே ஓடிப் போகிறாள். இப்போதும் அவனுடன் தான் வாழ்ந்து வருகிறாள். அவள் கணவன் இறக்கும்போதும், அவள் அந்த காதலடனுடன் தான் வாழ்கிறாள்.
Neither equity not good conscience can be invoked on behalf of such a wife for inheriting the property of her husband she had wronged so grieviously. நியாயப்படியும், மனச்சாட்சிப் படியும் அவள் கணவன் சொத்தில் பங்கு பெற முடியாது.
**