Play ducks and drakes
குளத்தில் விளையாடும்போது, ஒரு உடைந்த மண் பானை ஓடு அல்லது தட்டையான கல்லைக்
கொண்டு, அந்த நீரின் மேலே, அது குதித்து குதித்து ஓடுவது போல எறிவார்கள் சிறுவர்கள்.
இது ஒரு வகை விளையாட்டு. “சில்லு விளையாட்டு” என்று ஒரு பகுதியில் உள்ள மக்கள் இதற்குப்
பெயர் சொல்லுவார்கள். மற்ற பகுதிகளில் இதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.
ஐரோப்ப நாடுகளிலும் இந்த விளையாட்டு மிகவும் பிரபலம் என்கிறார்கள். இந்த
விளையாட்டுக்குப் பெயர் “டக்ஸ் அண்டு டிராக்ஸ் விளையாட்டு” “Play ducks and drakes” என்கிறார்கள். இந்த விளையாட்டில், சிறுவர்கள், குளத்தின் நீரின் மேல் மட்டத்தில்
இந்த சில்லு ஓட்டை லாவகமாக எறிந்தால், அந்த ஓடு, அதிகபட்சம் 10 முறை குதித்துத் துதித்து
(தத்தி தத்தி) செல்லும். ஆனாலும், வெளிநாட்டுக்காரர் ஒருவரான Kurt Steiner குர்த் ஸ்டெய்னர் என்பவர் 40 முறை தத்திச் செல்வது
போல உலக சாதனை படைத்துள்ளாராம். அது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளதாம்.
Duck and Drake என்பது பெண் வாத்தும் ஆண் வாத்தும் என்று பொருள். அவைகள் நீரில் தன் இறக்கைகளை
விரித்து நீர் மட்டத்துக்கு மேலேயே தத்தி-தத்தி பறப்பதுபோலச் செல்லும். அதனால்தான்
அதற்கு இந்தப் பெயரை வைத்துள்ளார்கள். அமெரிக்காவில் இந்த விளையாட்டுக்கு ஸ்டோன் ஸ்கிப்பிங்
Stone Skipping என்கிறார்கள். இங்கிலாந்தில் இந்த விளையாட்டுக்கு ஸ்டோன் ஸ்ம்மிங் Stone Skimming என்கிறார்கள்.
ஒரு நிறுவனம், எந்த வரைமுறையும் இல்லாமல் பணத்தை அள்ளி அள்ளிச் செலவு செய்கிறது
என்றால் அது டக்ஸ் அண்டு டிராக்ஸ் விளையாட்டு செய்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
அதேபோல ஒரு மாணவன் கவனம் செலுத்தி படிக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்தால் அவனையும்
டக்ஸ் அண்ட் டிராக்ஸ் விளையாட்டு போல இருக்கிறான் என்கிறார்கள். கவனக்குறைவாக அல்லது
ஏனோ தானோ என்று பொறுப்பில்லாமல் இருப்பவர்களை இப்படியான அடைமொழியில் குறிப்பிடுகிறார்கள்.
I don’t think you’ll ever achieve it
if you keep playing ducks and drakes like you’re doing now.
I think you actually need to work
harder. You’re always off playing ducks and drakes.
ஆக, ஒருவர் பொறுப்பில்லாமல் காரியங்களைச் செய்தாலும், பொறுப்பில்லாமல்
செலவு செய்து வந்தாலும், இந்த பொருள்படும்படி இந்த வாக்கியமான Play ducks and drakes என்று குறிப்பிடுகிறார்கள்.
**