Wednesday, April 9, 2014
Tuesday, April 8, 2014
செய்யுள் அலங்காரம் 28
தமிழ்ச் செய்யுளில் 28 வகை அலங்காரம்:
1. உருவகம்
2. உவமை
3. அடிமடக்கு
4. தீபகம்
5. நிலைமடக்கு
6. வேற்றுமை
7. வெளிப்படை
8. நோக்கு
9. உட்கோள்
10. தொகைமொழி
11. மிகைமொழி
12. சொற்பின் வருநிலை
13. தன்மை
14. வேற்றுப் பொருள் வைப்பு.
15. சிறப்பு
16. சிலேடை
17. மறுத்துமொழிநிலை
18. உடனிலைக்கூட்டம்
19. உவமாரூபகம்
20. மகிழ்ச்சி
21. நுவலாநுவற்சி
22. ஒப்புமைக்கூட்டம்
23. நிதர்சனம்
24. புகழ்ச்சி
25. ஒருங்கியனிலை
26. ஐயம்
27. கலவை
28. வாழ்த்து
1. உருவகம்
2. உவமை
3. அடிமடக்கு
4. தீபகம்
5. நிலைமடக்கு
6. வேற்றுமை
7. வெளிப்படை
8. நோக்கு
9. உட்கோள்
10. தொகைமொழி
11. மிகைமொழி
12. சொற்பின் வருநிலை
13. தன்மை
14. வேற்றுப் பொருள் வைப்பு.
15. சிறப்பு
16. சிலேடை
17. மறுத்துமொழிநிலை
18. உடனிலைக்கூட்டம்
19. உவமாரூபகம்
20. மகிழ்ச்சி
21. நுவலாநுவற்சி
22. ஒப்புமைக்கூட்டம்
23. நிதர்சனம்
24. புகழ்ச்சி
25. ஒருங்கியனிலை
26. ஐயம்
27. கலவை
28. வாழ்த்து
பேடிக்குரிய 25 வகை இலக்கணம்:
பேடிக்குரிய 25 வகை இலக்கணம்:
1. நச்சப்பேசல்
2. நல்லிசையோர்தல்
3. ஆண்பெண்ணாமடைவியற்றல்.
4. உச்சியிற் கையைவைத்தல்
5. ஒரு கை வீசி நடத்தல்
6. விழிகளை வேறாச் செய்தல்
7. முலையைவருத்திநிற்றல்
8. கண் சுழல நோக்குதல்
9. நாணுதல்.
10. தொந்தோமென்று தாளமிடல்
11. நடித்தல்
12. காரணமின்றிக் கோபித்தல்
13. அழுதல்
14. ஒருபக்கம் பார்த்தல்
15. இரங்குதல்
16. வருந்தல்
17. யாவரும் இரங்கும்படி பேசுதல்
18. வளைதல்
19. கோதாடல்
20. கூடல்
21 கூவிளி கொள்ளல்
22. மருங்கில் கையை வைத்தல்
23. அதனை எடுத்தல்
24. பாங்கியை நோக்கல்
25. ஏலேலேன்று பாடல்.
முப்பத்திரண்டு அறம்
முப்பதிரண்டு அறம்:
1. ஆதுலரக்குச் சாலை
2. ஐயம்
3. அறுசமயத்தார்க்கு உண்டி.
4. ஓதுவார்க்கு உணவு
5. சேலை
6. ஏறு விடுதல்
7. காதோலை
8. பெண்போகம்
9. மகப்பால்
10. மகப்பேறு
11. மகவளர்த்தல்
12. மருந்து
13. கொல்லாமல் விலைகொடுத்து உயிர்நோய் தீர்த்தல்.
14. கண்ணாடி
15. பிறரிற்காத்தல்
16. கன்னிகாதானம்
17. சோலை
18. வண்ணார்
19. நாவிதர்
20. சுண்ணம்
21. மடம்
22. தடம்
23. கண்மருந்து
24. தண்ணீர்பந்தர்
25. தலைக்கு எண்ணெய்
26. சிறைச்சோறு
27. விலங்கிற்கு உணவு
28. பசுவுக்கு வாயுறை
29. அறவைப் பிணமடக்கல்
30. அறவைத்தூரியம்,
31. தின்பண்ட நல்கல்
32. ஆவுரிஞ்சுதறி.
உயிர்களின் அறிவுகள் ஐந்து
1. ஓர் அறிவு உயிர் = புல், மரம் முதலியன. இவைகள் தனது உடம்பால் தொடுதலை (பரிசத்தை) அறியும் அறிவுடையது.
2. ஈரறிவு உயிர் = முரள், நந்து முதலியன; இவை தொடு உணர்ச்சியுடன், நாக்கால் (நாவால்) சுவையும் அறியும். (முரள் என்பது = அட்டை).
3. மூவறிவு உயிர் = கறையான், எறும்பு முதலியன; இவை மேற்கண்ட இரண்டு அறிவோடு,
மூக்கினால் சுவையைநும் அறியும்.
4. நாலறிவு உயிர் = தும்பி, வண்டு முதலியன; இவை மேற்சொன்ன மூன்று அறிவுடன்,
கண்ணால் உருவத்தையும் அறியும்.
5. ஐயறிவு உயிர் = வானவர், மனிதர், நரகர், விலங்கு,
புள்ளு; இவர் மேற்சொன்ன நான்கு அறிவோடு,
செவியினால் ஒலியையும் அறிவர். இவர்களுக்கு மனதினால் அறிவும் சிறப்பான
அறிவும் உண்டு.
ஒன்று, இரண்டு, மூன்று....
அதியுகம் = நூராயிரம் கோடி கொண்டது.
பிரமம் = அதியுகம் நூறாயிரம் கொண்டது.
கோடி = பிரமம் நூறாயிரம் கொண்டது.
அர்ப்புதம் = கோடி பத்துக் கொண்டது.
கணகம் = கோடி நூறு கொண்டது.
கற்பம் = கணிகம் பத்துக் கொண்டது.
நிகற்பம் = கற்பம் பத்துக் கொண்டது.
சங்கம் = நிகற்பம் பத்து கொண்டது.
சமுத்திரம் = சங்கம் பத்து கொண்டது.
பன்னிரு திருமுறைகள்
பன்னிரு
திருமுறைகள்;
தேவாரம் = 1 முதல் 7 திருமுறைகள்.
திருவாசகம், திருக்கோவையார் = 8-ம்
திருமுறை
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு = 9-ம்
திருமுறை.
திருமந்திரம் =
10-ம் திருமுறை.
பொன்வண்ணத்தந்தாதி
முதலிய 40 பிரபந்தங்கள் = 11-ம் திருமுறை.
பெரியபுராணம் =
12-ம் திருமுறை.
சைவசமய குரவர்கள்
நான்குபேர்.
1.
திருஞானசம்மந்தமூர்த்தி நாயனார் = தேவாரத்தில் 1,2,3 திருமறைகளை தந்தவர்.
2.
திருநாவுக்கரசு நாயனார்= தேவாரத்தில் 4,5,6 திருமுறைகளை தந்தவர்.
3.
திருசுந்தரமூர்த்தி நாயனார் = தேவாரத்தில் 7-ம் திருமறை தந்தவர்.
4.
திருமாணிக்கவாசக சுவாமிகள் = திருவாசகம், திருக்கோவையார் என்கின்ற 8-ம் திருமறை தந்தவர்.
Friday, April 4, 2014
பிரபஞ்ச சிருஷ்டி ரகசியம்
சிருஷ்டி;
மூலப் பிரகிருதியிலிருந்து
இந்த பிரபஞ்சம் தோன்றுவதை சிருஷ்டி என்பர். பஞ்சபூதங்களும் தம்மில் கூடி சிருஷ்டியை
உண்டுபண்ணும்.
பிரபஞ்சம் அனைத்தும்
சித்தும், சடமும் ஆகிய இரு கூறில் அடங்கும். சித்தின்றி
சடம் இயங்காது. ஆகவே, தோற்றம், திதி,
நாசம். என்னும் மூன்றாய் தோன்றும்.
தோற்றுவிக்கும் சக்திக்கு
பிரமா எனப் பெயர்.
திதி செய்யும் சக்திக்கு
விஷ்ணு என்று பெயர்.
நாசம் செய்யும் சக்திக்கு
ருத்திரன் என்று பெயர்.
ஒவ்வோரு அணுவையும்
இந்த மூன்று சக்திகளும் பற்றிக் கொண்டு நின்று தனது தனது முறையில் தமது தமது தொழிலைச்
செய்யும். இதைத்தான் ஆங்கிலேய விஞ்ஞானிகள் 'ஆற்றல்'
என்கிறார்கள். ஆரியர்கள் இந்த மூன்று சக்திகளையும் தனித்தனி
'கடவுள்' என்கிறார்கள்.
இப்போதுள்ள சிருஷ்டி
தொடங்கி 27 சதுர் யுகங்கள் முடிந்து 28-வது சதுர்யுகம் நடந்து வருகிறது. இந்த சிருஷ்டியிலே
இதுவரை ஆறு மனுக்கள் இறந்து ஏழாவது மனுவாகிய வைவசுவத மனு அந்தரம் நடக்கிறது.
ஒவ்வொரு மனு அந்தரத்திலும்
மனிதரின் வடிவமும், குணமும் வேறுபட்டு உயர்ந்து வருகிறது.
முன் இருந்த மனுவின்
காலத்தில், மனிதர்கள் நம்மைக் காட்டிலும் வடிவத்திலும்
குணத்திலும் குறைந்தவர். இனி வரப்போகும் சாவர்ணி மனுவின் காலத்தில் வரும் மனிதர்கள்
நம்மைவிட சிறந்தவர்கள். மனு என்று சொல்வது மனித கணத்தையே. ஒவ்வொரு மனித காலத்திலும்
மனிதனின் தலைவனுக்கு மனு என்று பெயர்.
ஆன்மாக்கள் எல்லாம்
தனது செயலுக்கு ஏற்ப மேல்பிறவிகளில் செல்லும். சிருஷ்டியும் ஆன்மாக்களின் பொருட்டாக
நிகழ்வதுதான்.
வாயு உலகம் = சனி
தேயு உலகம் = சூரியன்
அப்பு உலகம் = சுக்கிரன்
பிருதிவி உலகம் =
பூமி.
ஒவ்வொரு பூதத்திலும்
மற்றைய நான்கும் கூடி இருக்கும்.
எனவே இந்த பிரபஞ்சமானது 'தோன்றி,
நின்று, ஒடுங்கும், இயல்புடையது.ஏழாவது மனு அந்தரத்தில் நாம்.....
மனு
சிருஷ்டி ஆரம்பத்திலே
பூமி பரிபாலனம் செய்யுமாறு தெய்வ ஆஞ்ஞையால் பிறந்தவர் மனு. மனுக்கள் மொத்தம் 14 பேர்கள்.
1)சுவாயம்புவன்,
2)சுவாரோசிஷன்,
3)உத்தமன்,
4)தாமசன்,
5)ரைவதன்,
6)சாக்ஷூசன்,
7)வைவசுவதன்,
8)சூரியசாவர்ணி,
9)தக்ஷசாவர்ணி,
10)பிரம்மசாவர்ணி,
11)ருத்திரசாவர்ணி,
12)தர்மசாவர்ணி,
13) ரௌசியன்,
14) பௌசியன்.
இந்த மனுக்களே அந்தந்த
சிருஷ்டிதோறும் மனித வர்க்க்கத்தைத் தோற்றுவிப்பவர்கள். அவரே மனித வர்கத்துக்கு மூல
பிதாக்கள்.
இப்போதுள்ள சிருஷ்டிக்கு
மூலபிதா 'வைவசுவத மனு'. இது ஏழாவது
மனு அந்தரம். ஒரு மனு அந்தரம் என்பது 43,20,000 மானுட வருடங்களைக் கொண்டது. இப்படியாக மனு அந்தரங்கள் ஆறு அந்தரங்கள் சென்று
விட்டன. இது ஏழாவது. இனி வருவது எட்டாவது மனு
அந்தரம்; அதன் மனு சூரியசாவர்ணி.
சூரியசாவர்ணி
சூரியனுக்கு சாயாதேவியிடத்து
பிறந்த புத்திரன். இவனே எட்டாவது மனு. இனி வரப்போகும் மனு இவனே. இவனுக்கு முன்னர் இருந்த
மனுவுக்கு சமமானவன் என்பதால் இவனுக்கு 'சாவர்ணி'
என்று பெயர்.
இவனின் காலத்திலே சுதபர், அமிதாபர்,
முக்கியர், என தேவகணங்கள் மூன்று பிரிவு ஆவர்.
அக்காலத்திலே தீப்திமான், காலவன், ராமன்,
கிருபன், அசுவத்தாமன், வியாசன்,
சிருங்கன் என்பர்களே சப்த ரிஷிகள் ஆவார்கள். பாதாலத்திலே தவம் செய்யும்
பலி சக்கரவர்த்தியே தேவேந்தரன் பதவியை பெறுவார். விரஜன், சர்வரீவான்,
நிர்மோகன், முதலியோர் பூலோகத்து மானிட வர்க்கங்களாக
ஆவார்கள்.நீடாழி உலகத்து....
வில்லிபுத்தூராழ்வாரின்
மகன் 'வரந்தருவான்' என்றுபெயர்.
இவர் தன் தந்தை வில்லிபுத்தூராழ்வாரிடமே
பாடம் கற்றுக் கொண்டு வந்தார். ஒருநாள் தன் தந்தை சொன்ன பொருளை விட்டு வேறு பொருள்
உள்ளது என மறுப்புச் சொன்னதால், அவரின் தந்தைக்கு கோபம்
வந்து மகனை விரட்டி விட்டார். மகன் வரந்தருவான் வேறு ஊருக்குச் சென்று வேறு ஒரு ஆசிரியரைக்
கொண்டு பாடம் கேட்டு வந்தார். தன் தந்தையின் கண்ணில்படாமல் வாழ்ந்து வந்தார்.
ஒருநாள், தந்தையான வில்லிபுத்தூராழ்வார் தான் இயற்றிய பாரதத்தை சபையில்
அரங்கேற்றினார். அப்போது அந்த நூலின் முதல் வார்த்தையான 'ஆக்குமாறயனாம்'
என்னும் கவியைக் காப்பாக எடுத்து பாடினார்.
அரங்கேற்ற சபையில்
இருந்தவர்கள், வில்லிபுத்தூராரை நோக்கி, 'நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு பின்னர் உங்களின்
அரங்கேற்றத்தை தொடங்குங்கள்' என்றனர். என்ன கேள்வி என்றதற்கு,
'நீங்கள் அரங்கேற்றுவதோ வியாசரின் பாரதம்; அந்த
நூலில் முதலில் விநாயகரை வணங்கும் பாடலை முதலில் பாடியே ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது;
அப்படி இருக்க, நீங்களோ, பொதுவான வணக்கம் மட்டுமே சொல்லி கவியை தொடங்குகிறீர்கள்; ஏன் விநாயகரை வணங்கும் கவியை சொல்லவில்லை' என்று கேட்டனர்.
அப்போது வில்லிபுத்தூரார்
பதில் சொல்ல முடியாமல் தவித்தபோது, அவரின் மகன்
வரந்தருவான் எழுந்து சபையோரைப் பார்த்து, 'இங்கு பல சமயத்தை சேர்ந்தவர்கள்
கூடி இருக்கிறார்கள்; எனவே பொதுவணக்கம் செய்வதே முறை;
மேலும் விநாயகர் வணக்கத்தை, கவி தனக்குத்தானே கூறிவிட்ட
பின்னரே, இந்த பொதுவணக்கத்தை சபையில் கூறினார்' என்று கூறி
சமாளித்தார்.
சபையில் இருந்தவர்கள், 'நீ யார்? என்று கேட்க, அவனும், நானே வில்லிபுத்தூராரின் புத்திரன் என்று கூறினார்.
அப்போதுதான் வில்லிபுத்தூராரும், வந்தது தன் மகன்தான் என்று தெரிந்து
மகிழ்ச்சி கொண்டார்.
சபையில் இருந்தவர்கள், 'அதுசரி, உனக்கு உன் தகப்பன் மனதுக்குள்,
விநாயகர் துதி பாடினார் என்று எப்படித் தெரியும் என்று கேட்டனர்.
இவர் பாடிய விநாயகர்
காப்பு இதுதான் என்று கூறி இந்த கவியை பாடினார்.
'நீடாழி யுலகத்து
மறைநாலொடைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராசன்
மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக மேமேரு வெற்பாகங்
கூரெழுத்தாணி தன்
கோடாக வெழுதும்பிரானைப்
பணிந்தன்புகூர்வாமரோ'
பின்னர், வில்லிபுத்தூரார் பாரதத்தை அரங்கேற்றி, தன்
மகனை அதற்கு சிறப்பாயிரம் செய்யும்படி பணித்தார்.
ஆனந்தத் தாண்டவம்
வியாக்கிரபாதர்
மத்தியந்தின முனிவரின் குமாரர் வியாக்கிரபாதர். இவரின் சிறுவயது பெயர் பாலமுனிவர். இவர் சிவ பூஜை செய்வதற்காக மலர்களை கொய்து வழிபாடு செய்து வருவது வழக்கம். பகல் பொழுதில் அந்த மலர்களில் வண்டுகள் வந்து உட்கார்ந்து தேன் அருந்துவதால் அந்த மலர்கள் எச்சில்படுத்த படுவதாகவும், அதைக் கொண்டு சிவபூஜை செய்ய முடியாது என்று எண்ணினார்.
எனவே இவர் சிவனிடம் வேண்டி, தனக்கு புலியின் கண்ணும், புலியின் காலும் வேண்டி அதைப் பெற்றுக் கொண்டாராம். இரவில் புலிக்கு கண் நன்றாகத் தெரியும். அதைக் கொண்டு இரவில் தில்லைவனம் சென்று அங்குள்ள பூக்களை பறித்து வந்து வைத்துக்கொண்டு, பகலெல்லாம் பூஜை செய்வாராம். இதனால்தான் இவருக்கு 'வியாக்கிரபாதர்' என்று பெயர் ஏற்பட்டதாம்.
இவர் சிதம்பரத்திலே கனகசபையிலே சிவபெருமான் செய்கின்ற ஆனந்தத் தாண்டவத்தை தன் கண்களாலேயே நேரில் பார்த்தவர்.
மத்தியந்தின முனிவரின் குமாரர் வியாக்கிரபாதர். இவரின் சிறுவயது பெயர் பாலமுனிவர். இவர் சிவ பூஜை செய்வதற்காக மலர்களை கொய்து வழிபாடு செய்து வருவது வழக்கம். பகல் பொழுதில் அந்த மலர்களில் வண்டுகள் வந்து உட்கார்ந்து தேன் அருந்துவதால் அந்த மலர்கள் எச்சில்படுத்த படுவதாகவும், அதைக் கொண்டு சிவபூஜை செய்ய முடியாது என்று எண்ணினார்.
எனவே இவர் சிவனிடம் வேண்டி, தனக்கு புலியின் கண்ணும், புலியின் காலும் வேண்டி அதைப் பெற்றுக் கொண்டாராம். இரவில் புலிக்கு கண் நன்றாகத் தெரியும். அதைக் கொண்டு இரவில் தில்லைவனம் சென்று அங்குள்ள பூக்களை பறித்து வந்து வைத்துக்கொண்டு, பகலெல்லாம் பூஜை செய்வாராம். இதனால்தான் இவருக்கு 'வியாக்கிரபாதர்' என்று பெயர் ஏற்பட்டதாம்.
இவர் சிதம்பரத்திலே கனகசபையிலே சிவபெருமான் செய்கின்ற ஆனந்தத் தாண்டவத்தை தன் கண்களாலேயே நேரில் பார்த்தவர்.
Thursday, April 3, 2014
காளிதாசனின் விக்கிரமோர் வசியம்
காளிதாசனின் விக்கிரமோர்
வசியம்
இது மகாகவி காளிதாசன்
செய்த ஒரு நாடக நூல். இதை சமஸ்கிருதத்தில் காளிதாசன் செய்தான்.
இது ஒரு காதல் கதையாம்.
இதில் புரூரவன், ஊர்வசிமேல் வைத்த காதல் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
புரூரவன்
வைவசுவதமனு புத்திரியாகிய
இளையிடம் புதனுக்கு பிறந்த புத்திரன். இவன் பிரசித்தி பெற்ற ஒரு சக்கரவர்த்தி. இவன்
ஈகையிலும் தெய்வபக்தியிலும் அழகிலும் சிறந்தவன். இவன் ஒரு நாள் ஊர்வசியைக் கண்டு மயங்கி
அவளைத் தனக்கு மனைவியாகும்படி கேட்க, அவளோ,
'நீர், என்னை ஒருநாள்கூட பிரிந்திருப்பதில்லை என்று
வாக்குக் கொடுத்தால் மட்டுமே, உம்மோடு கூடி இருப்பேன்' என்று கேட்டாள். அவனும் இதற்கு சம்மதித்து இவரும் கூடி வாழ்ந்தனர். இந்த விபரம்
ரிக் வேதத்திலும் கூறப்பட்டுள்ளது.
ஊர்வசி
இவள் ஒரு அப்சரப்
பெண். நரநாராயணர்கள் பதரிகா ஆசிரமத்தில் தவம் செய்து கொண்டிருக்கையில், அவர்களின் தவத்தை கலைக்க நினைத்த தேவதாசிகள் அங்கு சென்று எவ்வளவோ
முயன்றும் அவர்களின் தவத்தைக் கலைக்க முடியவில்லையாம். இதைக் கண்ட நாராயணன், இவர்களின் அழகைக் குறைக்க நினைத்தார். இவர்களைக் காட்டிலும் மிக அழகான ஒரு பெண்ணை தனது தொடையிலிருந்து தோற்றுவித்து அதைப்பார்த்து அந்த பெண்களே நாணும்படி செய்தார். இந்த ஊர்வசி, நாராயணனின் தொடையில் இருந்து
பிறந்தமையால், ஊர்வசி என்று காரணப் பெயர் பெற்றாள்.
விதுரன்
விதுரன்
திருதராஷ்டிரனின்
மந்திரி விதுரன். (திருதராஷ்டிரனுக்கு விதுரன் தம்பியும் கூட). அம்பிகையினது தோழியினிடத்து வியாசருக்குப் பிறந்த புத்திரன்.
இவன் மாண்வியர் சாபத்தால் சூத்திரனாக பிறந்த யமன். இவன் மகா தரும சீலன். திருதராஷ்டிரன்
பாண்டவர்களை வஞ்சிக்கத் துணிந்தபோது, அது கூடாது என்று வாதாடியவன். திருதராஷ்டிரன் செய்த
வஞ்சனைகளை எல்லாம் பாண்டவர்களுக்கு உணர்த்தி அவர்களை அவ்வப்போது தப்பிக்க உதவியவனும், அரக்கு மாளிகையை தீவைத்து பாண்டவர்களை அழிக்க எத்தனித்தபோது,
இந்த விதுரனே அங்கு இரகசியமாக சென்று பாண்டவர்கள் தப்பிக்க உதவினான்.
திருமகளும் மாதவாசாரியாரும்
துங்கபத்திரை
நதிக்கரை ஓரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் இந்த மாதவாசாரியர் ( வித்தியாரண்ணியர்).
இவர் வறிய குடும்பத்தில்
பிறந்தவர். இளமையிலேயே செல்வந்தராக வேண்டும் என்ற பேர அவா கொண்டவர். அதனால் கல்வி
கற்று தெளிந்தார். இருந்தபோதும் இவர் செல்வந்தர் ஆகவே முடியவில்லை. எனவே காட்டில்
சென்று திருமகளையும், கலைமகளையும் வேண்டி கடும் தவம் புரிந்தார்.
ஒருநாள், காட்டிலே அரசனின் மாடுகளை மேய்த்துத் திரிபவனாகிய புக்கணன்
என்பவனைக் கண்டு, தான் அனுபவித்துவரும் கஷ்டங்களை எடுத்துச்
சொன்னார். புக்கணன், அவர்மீது இரக்கம் கொண்டு, அவருக்கு தினமும் பசும்பால் தருவதாக வாக்களித்தான். ஆனால், அவரோ, இது அரசருக்குச் சேரவேண்டிய பால், இதை நான் எடுத்துக் கொள்வது துரோகம் என்று மறுத்தார். ஆனால், புக்கணனோ, 'அரசரின் மாடுகளிலிருந்து மிக அதிகமாக
பால் கிடைக்கிறது, அவருக்கு தேவைக்கும் மேலாகவே உள்ளது;
எனவே அதில் ஒரு சிறு பகுதியை உம்மைப் போல தவம் இருப்பவருக்கு
கொடுப்பது, உண்மையில் அரசருக்கு ஒரு புண்ணியமே' என்று சமாதானம் கூறினான். அவரும் அதற்கு உடன்பட்டு, தினமும்
பாலை பெற்று அருந்தி வந்தார். அவரின் வயிற்றுப் பிரச்சனை தீர்ந்தாலும், அவரின் செல்வந்தர் கனவு நிறைவேறாமல் இருப்பது கண்டு மனம் வருந்தினார்.
வெகுகாலம்
தவத்துக்குப் பின்னர் திருமகளும், கலைமகளும் இவர் முன்
தோன்றி, 'மாதவரே இந்தப் பிறவியில் உமக்கு செல்வந்தர் ஆகும் கொடுப்பினை இல்லை' என்று கூறி மறைந்தனர். ஆனாலும் மாதவர் விடாது கடும் தவத்தில் இருந்தார்.
ஒரு நேரத்தில் அவர் அதிக கோபம் கொண்டு, தாம் அணிந்திருந்த
பூணூலை கழற்றி வீசிவிட்டுச் சந்நியாசி ஆனார்.
இதை அறிந்த
திருமகளும், கலைமகளும் மறுபடியும் அவர் முன் தோன்றி,
'உனக்கு என்னதான் வேண்டும் கேள்’ என்றனர். எனக்கு கலைமகளின் அநுகிரகம் மட்டும் போதும்;
இனி எனக்கு திருமகள் அநுகிரகம் வேண்டாம்' என்று
வெறுப்பாக சொல்லி விட்டார். ஆனாலும் திருமகளிடம் ஒன்றை மட்டும் வேண்டிக் கேட்டுக்
கொண்டரார். 'எனக்கு கிடைக்காத திருமகளின் அநுகிரகம், எனக்கு பால் தந்த மாடுமேய்க்கும் புக்கணனுக்கு கிடைக்க அருள்புரிக'
என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறே ஆகுக என்று இருவரும் கூறி
மறைந்தனர்.
இந்த நிகழ்ச்சி
நடந்த சில நாட்களில், ஹஸ்தினாபுரத்தின் அரசன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டான்.
மந்திரிகள், மாற்று அரசனை தேர்ந்தெடுக்க வேண்டிய
நிர்பந்தத்தில், பட்டத்து யானையை அலங்கரித்து, அதன் துதிக்கையில் ஒரு பூமாலயைக் கொடுத்து, அரசனை
தேர்ந்தெடுத்துவர அனுப்பி வைத்தனர். அது பல நாடு, காடுகளில்
திரிந்து, புக்கணன் மாடு மேய்த்துவரும் காட்டை அடைந்தது.
புக்கணன் அப்போது
காட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். யானை அவனுக்கு கங்கைநீரைச் சொரிந்து மாலையை
இட்டது. அவனை தூக்கிக் கொண்டு வந்து அரசனாக்கியது.
சில நாட்கள்
கழித்து, மாதவாசாரியர், புதிதாக
அரசனாக மாறிய மாடுமேய்த்த புக்கணனை காண்பதற்காக அவன் இருக்கும் அரண்மனைக்கு
சென்றார். நிச்சயம், புக்கணன் தன்னை அதே அன்புடன் வரவேற்பான் என்று எண்ணிக்
கொண்டார். அவனும் அவ்வாறே மிக்க அன்புடன், தானே நேரில் வந்து மாதவாசாரியாரை
எதிர்கொண்டு வரவேற்று அதே அன்பு, மரியாதையுடன் நடத்தினான். இருவரும் அவ்வாறு
நட்புடன் இருந்து வந்தபோது, ஒருநாள் புக்கணன், மாதவாசாரியாரிடம், ‘உலகில்
நிரந்தரமாக நிலைத்து நிற்கும் நூல்களை செய்து மக்கள் பயன் பெற உதவ வேண்டும்’ என்று
கேட்டுக் கொண்டான். அதன்படி மாதவாசாரியாரும் எண்ணில்லாத வியாக்கியானங்களை எழுதிப்
பிரகடனப்படுத்தினார். அவைகளில் இவர் செய்த ‘சங்கரவிலாசம்’ நாற்பதினாயிரம்
சுலோகங்களை உடையது. இதன் பின்னரே மாதவாசாரியருக்கு ‘வித்தியாரண்ணியர்’ என்ற பட்டப்
பெயரும் ஏற்பட்டது.
Wednesday, April 2, 2014
வியாசர்
வியாசர்
இவரின் பெயர் கிருஷ்ணத்துவைபாயனர்.
பரசுராமருக்கும் சத்தியவதிக்கும் பிறந்த புத்திரன்.
இவர், வேதங்களை வகுத்ததால் 'வியாசர்' எனப் பெயர் பெற்றவர். இவர் கங்கையில் உள்ள ஒரு தீவில் பிறந்ததால் 'துவைபாயனர்' என்றும் பெயர் பெற்றவர். (துவீபம்=தீவு; அயனர்=அதில் பிறந்தவர்).
வேதாந்த சூத்திரம் செய்தவரும், மகாபாரதத்தை விநாயகரைக் கொண்டு எழுதுவித்தவரும் இவரே.
இவர் புராணங்களை பதினெட்டாக வகுத்தவர்.
இவரே, பாண்டு, திருதராஷ்டிரன் இவர்களுக்கு இயற்கை தந்தையும் ஆவார்.
இவரின் பெயர் கிருஷ்ணத்துவைபாயனர்.
பரசுராமருக்கும் சத்தியவதிக்கும் பிறந்த புத்திரன்.
இவர், வேதங்களை வகுத்ததால் 'வியாசர்' எனப் பெயர் பெற்றவர். இவர் கங்கையில் உள்ள ஒரு தீவில் பிறந்ததால் 'துவைபாயனர்' என்றும் பெயர் பெற்றவர். (துவீபம்=தீவு; அயனர்=அதில் பிறந்தவர்).
வேதாந்த சூத்திரம் செய்தவரும், மகாபாரதத்தை விநாயகரைக் கொண்டு எழுதுவித்தவரும் இவரே.
இவர் புராணங்களை பதினெட்டாக வகுத்தவர்.
இவரே, பாண்டு, திருதராஷ்டிரன் இவர்களுக்கு இயற்கை தந்தையும் ஆவார்.
சௌந்தர்ய லகரி
சௌந்தர்யலகரி
சங்கராச்சிரியாரும், ஸ்ரீகண்டர் என்னும் நீலகண்டாசாரியரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒருமுறை இருவரும் சந்தித்துக் கொண்டபோது, ஸ்ரீகண்டர், சங்கராச்சாரியாரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாது மயங்கி நரசிங்க மூர்த்தியை தியானித்தாராம். உடனே நரசிங்கமூர்த்தி வெளிப்பட்டு ஸ்ரீகண்டரை தண்டிக்க முயன்றாராம்.
உடனே ஸ்ரீகண்டர் என்னும் நீலகண்டாச்சாரியர் பரமசிவனை தியானித்தாராம். அப்போது பரமசிவன் தோன்றி நரசிங்கத்தை கிழித்தெரிந்தாராம்.
உடனே சங்கராச்சாரியர், ஸ்ரீகண்டரை வணங்கி அவரிடம் சிவ தீட்சை பெற்றுக் கொண்டாராம்.
அதன் பின்னரே, சங்கராச்சாரியர், 'சிவானந்த லகரி, சௌந்தர்ய லகரி முதலியவற்றை இயற்றினாராம்.
கந்தபுராணம்
கந்தபுராணம்
ஸ்காந்தம் என்பது சிவபுராணங்களுள் ஒன்று. சிவ-மான்மியங்களையும் ஏனைய தருமங்களையும் மிக விரிவாக கூறுவது இந்த நூல். இது ஒரு லட்சம் கிரந்தகளைக் கொண்டது.
ஸ்காந்தத்தில் ஒரு பாகமே தமிழில் கந்தபுராணம் என்னும் பெயரால் கச்சியப்பரால் மொழி பெயர்க்கப்பட்டது.
கச்சிய சிவீச்சாரியார், குமரகோட்டத்து அர்ச்சகராய் இருக்கும்போது சுப்பிரமணியக் கடவுளின் கட்டளையால் அதை மொழிபெயர்த்தார் என்பர்.
Subscribe to:
Posts (Atom)