Showing posts with label சிருஷ்டி. Show all posts
Showing posts with label சிருஷ்டி. Show all posts

Sunday, May 25, 2014

சிருஷ்டி இரகசியம்

இந்த பிரபஞ்சத்தின் ஒரு ஆயுள்காலம் 43,20,000 மனித வருடங்களை கொண்டது.
இதை மொத்தம் நான்கு பெரும் யுகங்களாகப் பிரிப்பர்.
1, கிருத யுகம் = 17,28,000 மனித வருடங்களைக் கொண்டது.
2, திரேத யுகம் = 12,96,000 மனித வருடங்களைக் கொண்டது.
3, துவாபர யுகம் = 8,64,000 மனித வருடங்களைக் கொண்டது.
4, கலி யுகம்  = 4,32,000 மனித வருடங்களைக் கொண்டது.
ஆக இந்த நான்கு யுகங்களும் சேர்ந்து மொத்தம் 43,20,000 மனித வருடங்களைக் கொண்டது.
இதில் ஒரு விசித்திரமான சிறப்பு என்னவென்றால், இந்த யுகங்களின் வருடங்களின் எண்ணிக்கையின் கூட்டுத்தொகை 9 வரும்.
ஒவ்வொரு யுகங்களின் எண்ணிக்கையை கூட்டினாலும் இந்த 9 எண்ணிக்கை வரும். மொத்த ஆயுளைக் கூட்டினாலும் இந்த 9 எண்ணிக்கைதான் வரும்.
இது 4:3:2:1 என்ற விகிதத்தில் அமைந்திருப்பதையும் பார்க்கலாம்.

இந்த 43,20,000 மனித வருடங்கள் சேர்ந்ததுதான் பிரம்மாவின் ஒரு பகல்பொழுது. இன்னொரு 43,20,000 மனித வருடங்கள் முடிந்தால் பிரம்மாவின் ஒரு இரவுப்பொழுது.
இவ்வாறு 360 பகல், இரவு காலங்கள் கழிந்தால் பிரம்மாவுக்கு ஒருவருடம் முடியும்.
இவ்வாறு நூறு வருடங்கள் கழிந்தால் இப்போதுள்ள பிரம்மாவுக்கு ஆயுள் முடியும்.
இந்த நூறு வருடத்தில் முதல் ஐம்பது வருடங்கள் பாத்தும கற்பம் என்றும்; அடுத்த ஐம்பது வருடங்களை வராக கற்பம் என்றும் சொல்வர்.
அதன்படி இப்போது நடந்து கொண்டிருப்பது வராக கற்பம்.

பிரம்மாவின் ஒரு பகல்பொழுதில், இந்த உலகில் 15 மனுக்கள் அரசு செய்வார்கள். ஒவ்வோரு மனுவும் ஒரு அந்தரம் ஆட்சி செய்யும் காலத்தில், தேவேந்திரன், சப்தரிஷிகள் பிறப்பார்கள்.
பிரம்மாவுக்கு இரவு வரும்போது (அதாவது 43,20,000 மனித வருடம் முடிவில்) ஒரு பிரளயம் வரும். அந்த பிரளயத்தில் மூன்று உலகங்களும் அழிந்துவிடும். பின்னர் மகர் உலகத்தில் உள்ளவர்கள் புதிதாக பிறப்பார்கள்.
இதன்படி இந்த பிரபஞ்சம் நிலையில்லாதது, ஆனால் அழிந்து, பின்னர் தோன்றும் இயல்புடையது.
மனுஎன்பவர் சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் பூமியை நிர்வகிக்க தெய்வ உத்தரவால் பிறப்பவர்.
மனுக்கள் மொத்தம் 14 பேர்கள்.
1, சுயாம்புவன்,
2, சுவாரோசிஷன்,
3, உத்தமன்
4, தாமசன்
5, ரைவதன்
6, சாக்ஷூசன்
7, வைவசுவதன்
8, சூரியசாவர்ணி
9, தக்ஷசாவர்ணி
10,பிரம்மசாவர்ணி,
11, ருத்திரசாவர்ணி
12, தர்மசாவர்ணி
13, ரௌசியன்.
14. பௌசியன்
இந்த மனுக்களே ஒவ்வொரு சிருஷ்டியின் போதும் மனித வர்க்கத்தை தோற்றுவிப்பவர்கள். எனவே இவர்களே மனிதர்களுக்கு மூலபிதாக்கள் (அ) மூதாதையர்கள்.
இப்போதுள்ள சிருஷ்டிக்கு மூலபிதாவாக இருப்பவர் வைவசுவத மனு என்பவர். இவர் ஏழாவது மனு.
ஒரு மனுவின் காலம் 43,20,000 மனித வருடங்களைக் கொண்டது.
இவ்வாறு ஆறு மனுவின் காலங்கள் சென்றுவிட்டன. இது ஏழாவது மனுவின் காலம்.


Friday, April 4, 2014

பிரபஞ்ச சிருஷ்டி ரகசியம்

சிருஷ்டி;
மூலப் பிரகிருதியிலிருந்து இந்த பிரபஞ்சம் தோன்றுவதை சிருஷ்டி என்பர். பஞ்சபூதங்களும் தம்மில் கூடி சிருஷ்டியை உண்டுபண்ணும்.
பிரபஞ்சம் அனைத்தும் சித்தும், சடமும் ஆகிய இரு கூறில் அடங்கும். சித்தின்றி சடம் இயங்காது. ஆகவே, தோற்றம், திதி, நாசம். என்னும் மூன்றாய் தோன்றும்.

தோற்றுவிக்கும் சக்திக்கு பிரமா எனப் பெயர்.
திதி செய்யும் சக்திக்கு விஷ்ணு என்று பெயர்.
நாசம் செய்யும் சக்திக்கு ருத்திரன் என்று பெயர்.

ஒவ்வோரு அணுவையும் இந்த மூன்று சக்திகளும் பற்றிக் கொண்டு நின்று தனது தனது முறையில் தமது தமது தொழிலைச் செய்யும். இதைத்தான் ஆங்கிலேய விஞ்ஞானிகள் 'ஆற்றல்' என்கிறார்கள். ஆரியர்கள் இந்த மூன்று சக்திகளையும் தனித்தனி 'கடவுள்' என்கிறார்கள்.

இப்போதுள்ள சிருஷ்டி தொடங்கி 27 சதுர் யுகங்கள் முடிந்து 28-வது சதுர்யுகம் நடந்து வருகிறது. இந்த சிருஷ்டியிலே இதுவரை ஆறு மனுக்கள் இறந்து ஏழாவது மனுவாகிய வைவசுவத மனு அந்தரம் நடக்கிறது.
ஒவ்வொரு மனு அந்தரத்திலும் மனிதரின் வடிவமும், குணமும் வேறுபட்டு உயர்ந்து வருகிறது.

முன் இருந்த மனுவின் காலத்தில், மனிதர்கள் நம்மைக் காட்டிலும் வடிவத்திலும் குணத்திலும் குறைந்தவர். இனி வரப்போகும் சாவர்ணி மனுவின் காலத்தில் வரும் மனிதர்கள் நம்மைவிட சிறந்தவர்கள். மனு என்று சொல்வது மனித கணத்தையே. ஒவ்வொரு மனித காலத்திலும் மனிதனின் தலைவனுக்கு மனு என்று பெயர்.
ஆன்மாக்கள் எல்லாம் தனது செயலுக்கு ஏற்ப மேல்பிறவிகளில் செல்லும். சிருஷ்டியும் ஆன்மாக்களின் பொருட்டாக நிகழ்வதுதான்.

வாயு உலகம் = சனி
தேயு உலகம் = சூரியன்
அப்பு உலகம் = சுக்கிரன்
பிருதிவி உலகம் = பூமி.
ஒவ்வொரு பூதத்திலும் மற்றைய நான்கும் கூடி இருக்கும்.
எனவே இந்த பிரபஞ்சமானது 'தோன்றி, நின்று, ஒடுங்கும், இயல்புடையது.