சிருஷ்டி;
மூலப் பிரகிருதியிலிருந்து
இந்த பிரபஞ்சம் தோன்றுவதை சிருஷ்டி என்பர். பஞ்சபூதங்களும் தம்மில் கூடி சிருஷ்டியை
உண்டுபண்ணும்.
பிரபஞ்சம் அனைத்தும்
சித்தும், சடமும் ஆகிய இரு கூறில் அடங்கும். சித்தின்றி
சடம் இயங்காது. ஆகவே, தோற்றம், திதி,
நாசம். என்னும் மூன்றாய் தோன்றும்.
தோற்றுவிக்கும் சக்திக்கு
பிரமா எனப் பெயர்.
திதி செய்யும் சக்திக்கு
விஷ்ணு என்று பெயர்.
நாசம் செய்யும் சக்திக்கு
ருத்திரன் என்று பெயர்.
ஒவ்வோரு அணுவையும்
இந்த மூன்று சக்திகளும் பற்றிக் கொண்டு நின்று தனது தனது முறையில் தமது தமது தொழிலைச்
செய்யும். இதைத்தான் ஆங்கிலேய விஞ்ஞானிகள் 'ஆற்றல்'
என்கிறார்கள். ஆரியர்கள் இந்த மூன்று சக்திகளையும் தனித்தனி
'கடவுள்' என்கிறார்கள்.
இப்போதுள்ள சிருஷ்டி
தொடங்கி 27 சதுர் யுகங்கள் முடிந்து 28-வது சதுர்யுகம் நடந்து வருகிறது. இந்த சிருஷ்டியிலே
இதுவரை ஆறு மனுக்கள் இறந்து ஏழாவது மனுவாகிய வைவசுவத மனு அந்தரம் நடக்கிறது.
ஒவ்வொரு மனு அந்தரத்திலும்
மனிதரின் வடிவமும், குணமும் வேறுபட்டு உயர்ந்து வருகிறது.
முன் இருந்த மனுவின்
காலத்தில், மனிதர்கள் நம்மைக் காட்டிலும் வடிவத்திலும்
குணத்திலும் குறைந்தவர். இனி வரப்போகும் சாவர்ணி மனுவின் காலத்தில் வரும் மனிதர்கள்
நம்மைவிட சிறந்தவர்கள். மனு என்று சொல்வது மனித கணத்தையே. ஒவ்வொரு மனித காலத்திலும்
மனிதனின் தலைவனுக்கு மனு என்று பெயர்.
ஆன்மாக்கள் எல்லாம்
தனது செயலுக்கு ஏற்ப மேல்பிறவிகளில் செல்லும். சிருஷ்டியும் ஆன்மாக்களின் பொருட்டாக
நிகழ்வதுதான்.
வாயு உலகம் = சனி
தேயு உலகம் = சூரியன்
அப்பு உலகம் = சுக்கிரன்
பிருதிவி உலகம் =
பூமி.
ஒவ்வொரு பூதத்திலும்
மற்றைய நான்கும் கூடி இருக்கும்.
எனவே இந்த பிரபஞ்சமானது 'தோன்றி,
நின்று, ஒடுங்கும், இயல்புடையது.
No comments:
Post a Comment