Showing posts with label தேவாரம். Show all posts
Showing posts with label தேவாரம். Show all posts

Sunday, February 7, 2016

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம்:

பிடியதன் உரு உமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

பெண் யானை உருவத்தை உமாதேவி கொள்ள;
கரிய ஆண் யானை வடிவத்தை சிவபெருமான் கொள்ள;
தன் திருபாதங்களை வழிபடும் அடியார்களின் இடரை நீங்குகின்ற கணபதியாகி விநாயக் கடவுள் வாழ்கிற இறையான சிவபெருமானே!

(திருவலிவலத்தில் வாழும் சிவபெருமானைத் துதித்து திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரப் பாடல்)
பிடியத னுருவுமை கொளமிகு கரியது 
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் 
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை 
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே! 
**



Tuesday, April 8, 2014

பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள்;
தேவாரம் =  1 முதல் 7 திருமுறைகள்.
திருவாசகம், திருக்கோவையார் = 8-ம் திருமுறை
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு = 9-ம் திருமுறை.
திருமந்திரம் = 10-ம் திருமுறை.
பொன்வண்ணத்தந்தாதி முதலிய 40 பிரபந்தங்கள் = 11-ம் திருமுறை.
பெரியபுராணம் = 12-ம் திருமுறை.

சைவசமய குரவர்கள் நான்குபேர்.
1. திருஞானசம்மந்தமூர்த்தி நாயனார் = தேவாரத்தில் 1,2,3 திருமறைகளை தந்தவர்.
2. திருநாவுக்கரசு நாயனார்= தேவாரத்தில் 4,5,6 திருமுறைகளை தந்தவர்.
3. திருசுந்தரமூர்த்தி நாயனார் = தேவாரத்தில் 7-ம் திருமறை தந்தவர்.                       

4. திருமாணிக்கவாசக சுவாமிகள் = திருவாசகம், திருக்கோவையார் என்கின்ற 8-ம் திருமறை தந்தவர்.