Showing posts with label வைவசுவதன். Show all posts
Showing posts with label வைவசுவதன். Show all posts

Friday, April 4, 2014

ஏழாவது மனு அந்தரத்தில் நாம்.....

மனு
சிருஷ்டி ஆரம்பத்திலே பூமி பரிபாலனம் செய்யுமாறு தெய்வ ஆஞ்ஞையால் பிறந்தவர் மனு. மனுக்கள் மொத்தம் 14 பேர்கள்.
1)சுவாயம்புவன்,
2)சுவாரோசிஷன்,
3)உத்தமன்,
4)தாமசன்,
5)ரைவதன்,
6)சாக்ஷூசன்,
7)வைவசுவதன்,
8)சூரியசாவர்ணி,
9)தக்ஷசாவர்ணி,
10)பிரம்மசாவர்ணி,
11)ருத்திரசாவர்ணி,
12)தர்மசாவர்ணி,
13) ரௌசியன்,
14) பௌசியன்.
இந்த மனுக்களே அந்தந்த சிருஷ்டிதோறும் மனித வர்க்க்கத்தைத் தோற்றுவிப்பவர்கள். அவரே மனித வர்கத்துக்கு மூல பிதாக்கள்.

இப்போதுள்ள சிருஷ்டிக்கு மூலபிதா 'வைவசுவத மனு'. இது ஏழாவது மனு அந்தரம். ஒரு மனு அந்தரம் என்பது 43,20,000 மானுட வருடங்களைக் கொண்டது. இப்படியாக மனு அந்தரங்கள் ஆறு அந்தரங்கள் சென்று விட்டன.  இது ஏழாவது. இனி வருவது எட்டாவது மனு அந்தரம்; அதன் மனு சூரியசாவர்ணி.

சூரியசாவர்ணி
சூரியனுக்கு சாயாதேவியிடத்து பிறந்த புத்திரன். இவனே எட்டாவது மனு. இனி வரப்போகும் மனு இவனே. இவனுக்கு முன்னர் இருந்த மனுவுக்கு சமமானவன் என்பதால் இவனுக்கு 'சாவர்ணி' என்று பெயர்.
இவனின் காலத்திலே சுதபர், அமிதாபர், முக்கியர், என தேவகணங்கள் மூன்று பிரிவு ஆவர். அக்காலத்திலே தீப்திமான், காலவன், ராமன், கிருபன், அசுவத்தாமன், வியாசன், சிருங்கன் என்பர்களே சப்த ரிஷிகள் ஆவார்கள். பாதாலத்திலே தவம் செய்யும் பலி சக்கரவர்த்தியே தேவேந்தரன் பதவியை பெறுவார். விரஜன், சர்வரீவான், நிர்மோகன், முதலியோர் பூலோகத்து மானிட வர்க்கங்களாக ஆவார்கள்.