Showing posts with label புரூரவன். Show all posts
Showing posts with label புரூரவன். Show all posts

Thursday, April 3, 2014

காளிதாசனின் விக்கிரமோர் வசியம்

காளிதாசனின் விக்கிரமோர் வசியம்

இது மகாகவி காளிதாசன் செய்த ஒரு நாடக நூல். இதை சமஸ்கிருதத்தில் காளிதாசன் செய்தான்.
இது ஒரு காதல் கதையாம். இதில் புரூரவன், ஊர்வசிமேல் வைத்த காதல் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

புரூரவன்
வைவசுவதமனு புத்திரியாகிய இளையிடம் புதனுக்கு பிறந்த புத்திரன். இவன் பிரசித்தி பெற்ற ஒரு சக்கரவர்த்தி. இவன் ஈகையிலும் தெய்வபக்தியிலும் அழகிலும் சிறந்தவன். இவன் ஒரு நாள் ஊர்வசியைக் கண்டு மயங்கி அவளைத் தனக்கு மனைவியாகும்படி கேட்க, அவளோ, 'நீர், என்னை ஒருநாள்கூட பிரிந்திருப்பதில்லை என்று வாக்குக் கொடுத்தால் மட்டுமே, உம்மோடு கூடி இருப்பேன்' என்று கேட்டாள். அவனும் இதற்கு சம்மதித்து இவரும் கூடி வாழ்ந்தனர். இந்த விபரம் ரிக் வேதத்திலும் கூறப்பட்டுள்ளது.

ஊர்வசி
இவள் ஒரு அப்சரப் பெண். நரநாராயணர்கள் பதரிகா ஆசிரமத்தில் தவம் செய்து கொண்டிருக்கையில், அவர்களின் தவத்தை கலைக்க நினைத்த தேவதாசிகள் அங்கு சென்று எவ்வளவோ முயன்றும் அவர்களின் தவத்தைக் கலைக்க முடியவில்லையாம். இதைக் கண்ட நாராயணன், இவர்களின் அழகைக் குறைக்க நினைத்தார். இவர்களைக் காட்டிலும் மிக அழகான ஒரு பெண்ணை தனது தொடையிலிருந்து தோற்றுவித்து அதைப்பார்த்து அந்த பெண்களே நாணும்படி செய்தார். இந்த ஊர்வசி, நாராயணனின் தொடையில் இருந்து பிறந்தமையால், ஊர்வசி என்று காரணப் பெயர் பெற்றாள்.