Sunday, August 3, 2014

பகோடா சட்டம் (Pagoda Act)

Pagoda Act 1863
பிரிட்டீஷ் அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டுதான் நம் ஊரிலுள்ள பெரிய கோபுரங்களைக் கொண்ட கோயில்களை நிர்வகித்து வந்துள்ளது.

பகோடா (Pagoda) என்பது பெர்ஷியன் வார்த்தை, butkada என்பர் but என்றால் சிலை, கடவுள்; kada என்றால் கோயில் அல்லது கடவுள் வசிக்குமிடம்.

மாவட்ட அளவில் கமிட்டிகள் அமைத்து நிர்வகித்து வருவர். நிர்வாகி அவரின் ஆயுட்காலம் வரை இருப்பார். இடையில் இறந்து விட்டால், தகுதியான வேறு நபரை நியமிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு யாரையும் நியமிக்கவில்லை என்றால் அந்த மாவட்ட நீதிபதி, தேர்தல் மூலம் தகுதியானவரைத் தேர்ந்தெடுப்பார்.

மதராஸ் பிரசிடென்சி மாகாணத்தில், மதுரை நகரில் உள்ள கோயிலில் 5 நபர்கள் கொண்ட கமிட்டி 1880ல் இருந்தது. அதில் ஒருவரான குருசாமி என்பவர் இறந்துவிட்டார். அவருக்குப் பதிலாக மாவட்ட நீதிபதி, தேர்தல் நடத்தி வேறு ஒருவரை நியமித்தார். மதுரை கோயிலில் உள்ள கடவுளோ சைவக் கடவுள். நியமிக்கப்பட்டவரோ வைஷ்ணவர். எனவே இந்த வழக்கை மதராஸ் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். மாவட்ட நீதிபதி செய்தது சரி என்று ஐகோர்ட் கூறிவிட்டது

அதை எதிர்த்து லண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் (Privy Council) கோர்ட்டுக்கு மேல் அப்பீல் செய்தார்கள். அதுவும் அப்பீல் உரிமை இல்லை என்று தள்ளுபடி செய்துவிட்டது.
Meenakshi Naidoo vs. Subramaniya Sastri

Madras 1887 UKPC 20 (16 June 1887)
.

No comments:

Post a Comment