டெலிபோர்டேஷன் என்னும் சாகாவரம்:
Teleportation - டெலிபோர்டேஷன்: (தொடர்ந்து நகரும், ஆனால் நகராது) Invincible teleportation.
ஒரு பொருள்
நகரும்; ஆனால் நகருவது தெரியாது. நகருவது கண்களுக்குத் தெரியாது; உணரவும்
முடியாது. மேஜிக் இல்லை. உண்மை விஞ்ஞானமே. இதைத்தான் டெலிபோர்டேஷன் என்கின்றனர்
விஞ்ஞானிகள்.
இந்தப்
பிரபஞ்சம் எப்படி இயங்க வேண்டும் என்று ஒரு வரைமுறை வைத்துக் கொண்டுள்ளதாம்.
புத்திசாலி மிருகமாகிய நாம் அதை ஒரளவு அறிந்து கொள்ள முடியும் என்ற
நம்பிக்கையுள்ளது. நாம் இப்போது
செல்போனில் பேசுகிறோம், ஈமெயில் அனுப்பிக் கொள்கிறோம். இவை பதிவுகளாக ஆகாயத்தில்
மிதக்கிறது. இதை, நமது முந்தைய தலைமுறைக்குச் சொன்னால், 'சுத்த
பைத்தியக்காரத்தனம்' என்று காறி உமிழ்ந்திருக்கும். ஆனால் அது உண்மை என நாம்
நம்புகிறோம். அதேபோலத்தான் இதையும் நாம் நம்ப வேண்டும். இது அடுத்த தலைமுறையின் செயல்பாடு.
நமக்கோ, நம்பமுடியாத அதிசயம்.
இந்த
வித்தையைச் செய்தவர் Michio Kaku. இவர் பௌதீக ஆராய்சியாளர். String Theoryஐ கண்டுபிடித்தவர்களில் இவரும்
ஒரு கூட்டாளி. இவரை "இன்றைய உலகின் ஐன்ஸ்டின்" என்கிறார்கள். இவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதன் பெயர் Physics of
the Impossible. நம்பமுடியாத பௌதீகம். இதில், அவர், தற்போது நடக்கும்
விஞ்ஞான உண்மைகளையும், இனி பௌதீக
விதிப்படி நடக்கப் போகும் செயல்களையும், அடுத்து, இதெல்லாம் நடக்கவே
நடக்காது என நாம் நம்பும் செயல்களையும் பட்டியலிட்டுச் சொல்லியுள்ளார்.
இவர்தான் இந்த
டெலிபோர்டேஷனை விளக்கி உள்ளார்.
ஒரு பொருள்
அல்லது ஒரு சக்தி, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாறிப் போகும்போது,
அவற்றின் இடையே உள்ள தூரத்தை அது கடந்து செல்லாது. (அதாவது, ஒரு பஸ்,
சென்னையிலிருந்து பெங்களூருக்குப் போகிறது. அது சென்னையில் கிளம்பும்போது
பார்க்கலாம். பெங்களூர் போய் சேர்ந்ததைப் பார்க்கலாம், இடையில் அது ஓடியதை நாம்
பார்க்க முடியாது.) இதைத்தான் எல்லா சினிமாவிலும், மேஜிக்கிலும்
செய்திருக்கிறார்களே! ஆனால் அவை பொய்யாகச் செய்யப் பட்டவை. இங்கு உண்மையிலேயே அது
நிகழ்கிறது. இதைத்தான் டெலிபோர்டேஷன் என்கிறார்கள்.
ஒரு
பொருளை கண்ணுக்குத் தெரிந்து நகர்த்திக் கொண்டுபோனால் அது Transportation. அதையே கண்ணுக்குத் தெரியாமல்
நகர்த்திக் கொண்டு போனால் அது Teleportation.
1980ல்
ஒருசில விஞ்ஞானிகள், Photons போட்டான்களை
(அணுவில் உள்ள ஒளிக் கற்றைகளை) இதேபோல் நகர்த்த முடியும் என்று கூறினார்கள். ஆனால் ஒருவரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. 2004-ல் உள்ள விஞ்ஞானிகள் இதைச் செய்தபோது, விஞ்ஞானிகள் உலகமே ஆச்சரியத்தில் மூக்கில்
விரலை வைத்தது.
இந்தக் கதை
ஏன் தேவைப்படுகிறது என்றால்:-
இதைக் கொண்டு,
நாம் 'சாகாவரம்' பெறலாம். நமது மூளையானது நியூரான்கள் என்னும் உணர்வு நரம்பால்
ஆனது. இதைக் கொண்டே நாம் சிந்திக்கிறோம். அதில் பாயும் நியூரான்களை ஒரு கம்யூட்டர்
சிப்பில் மாற்றி வைத்துக் கொண்டால், நமது ஆசைகள், கனவுகள், அனுபவங்கள் இவை எல்லாமே
சேமித்து வைக்கப் பட்டுவிடும்.வேண்டும்போது உபயோகித்துக் கொள்ளலாம். இந்த பதிவுகளை
உடலிலிருந்து வெளியே வைத்துக் கொள்கிறோம். அப்புறம் என்ன, உடல் இல்லாவிட்டாலும்,
நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம்?
சந்தேகமென்ன? நமது மூளையிலிருந்து வெளிக் கம்யூட்டருக்கு இந்த டெலிபோர்டேஷன்
முறையில் மாற்றிக் கொண்டு விட்டோம். அவ்வளவே!
சிந்தனையும்,
அனுபவமும் நம்மிடமே இருந்தால், உடல் இல்லாவிட்டால் என்ன? நாம் வாழ்ந்து கொண்டுதானே
இருக்கிறோம். சித்தர்களைப் போல! அது சாகாவரம்தானே?
.
No comments:
Post a Comment