ராகங்களில் நான் ப்ருஹத் ஸாமம்
ஸ்ரீ
கிருஷ்ணன், அர்ச்சுனனிடம் சொல்கிறார்;
"நான் ராகங்களில் ப்ருஹத் ஸாமம்; கவிதைகளில்
காயத்திரி; மாதங்களில் மார்கழி; பருவங்களில் வசந்தம்."
எல்லா உயர்வான
விஷயங்களிலும் நான் உயர்ந்தவன் என்பதை ஸ்ரீகிருஷ்ணர் இப்படிக் கூறுகிறார்:
"ராகங்களில்
இந்த ப்ருஹத் ஸாமம் ஒரு இனிமையான ராகம்;
இந்த ராகத்தை இரவில்தான் பாடுவார்கள்; கேட்க அவ்வளவு இனிமையாய் இருக்குமாம்; இது
சாமவேதத்தில் உள்ளது; இதை இறைவனுக்காக தேவர்கள் இசைப்பார்களாம்;
அடுத்தது,
மந்திரங்களில் நான் காயத்திரி என்கிறார்;
மந்திரங்களிலேயே இது முக்கியமானது; இந்த
மந்திரத்தின் ஆசிரியர் பிரம்மா; இந்த மந்திரத்தை ஜபிப்பதால் ஒருவன் சித்தி
அடைந்து, இறை நிலையில் நுழைய முடியுமாம்.
அடுத்து,
மாதங்களில் நான் மார்கழி என்கிறார்;
12
மாதங்களிலும், ஏன் இந்த மார்கழியை மட்டும் ஸ்ரீகிருஷ்ணர் தேர்ந்திருக்கிறார்?
இந்தியாவில் மார்கழி மாதத்தில் பயிர்களெல்லாம் விளைந்து அறுவடை செய்யப்படுமாம்.
இந்த மாதமே வெப்பமும் இல்லாமல், கடுங்குளிரும் இல்லாமல் மித குளிர் உள்ள காலம்;
நாம் காஷ்மீர், ஊட்டி போவது இந்த குளிரை அனுபவிக்கத்தான். அது நமக்கு வருடத்தில்
ஒருமாதமான மார்கழியில் வருகிறது. உண்மையில் அந்த மாதத்தில் நாம் வீட்டை விட்டு
வெளியே போய், வெட்டவெளியில் ஒருமுறையேனும் அந்த மார்கழிக் குளிரை அனுபவிக்க
வேண்டும்.
அடுத்து,
பருவங்களில் நான் வசந்தம் என்கிறார்;
இந்த மார்கழி
போலவே, வசந்தமும் பருவகாலத்தில் சிறப்புப் பெற்றது. வசந்தகாலத்தில் தாவரங்கள்
எல்லாம் பூக்கள் பூத்து குலுங்கும்; எல்லா தாவரங்களும் சந்தோஷமாக இருக்கும் காலமே
இந்த வசந்தகாலம்; ஸ்ரீகிருஷ்ணனின் லீலைகள் இந்த வசந்தகாலத்தில்தான் நடந்தனவாம்;
மகாகவி காளிதாஸ் இந்த வசந்தகாலத்தை தன் ருதுவம்சம் என்று நூலில் வெகு விமரிசையாகப்
பாடியுள்ளார். வாய்ப்பு கிடைப்பவர்கள் படிக்கலாம்.
அந்த
பகவத்கீதையின் பாடல்:
"ப்ருஹத்ஸாம
ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸானாம்
மர்கசீர் ஷோ (அ)ஹம்ருதூனாம்
குஸூமாகர:"
ப்ருஹத்ஸாம =
ப்ருஹத்ஸாமம் என்ற சாமவேதப் பாட்டு;
ததா =
அதனுடன்;
ஸாம்நாம் =
சாம வேதப்பாட்டு;
காயத்ரீ =
காயத்ரி மந்திரம்;
சந்தஸாம் =
கவிதை;
அஹம் = நான்;\
மாஸானாம் =
மாதங்களில்;
மார்கசீர்ஷோ
அஹம் = நான் மார்கழி;
ருதூணாம் =
பருவ காலங்களில்;
குஸூமாகர =
வசந்த காலம்;
.
No comments:
Post a Comment