Estoppel எஸ்டாப்பல்
(முன்னர் சொன்ன சொல்லை, பின்னொரு நாளில் மறுக்கக் கூடாது-- இது ஒரு சட்டம்.
இதை "எஸ்டாப்பல்" என்பர்).
இந்தச் சொல்லை
வாய்மொழியாகவும் உறுதி கூறியிருக்கலாம்; அல்லது சொல்லாமல் செய்கைகள் மூலம்
தெரிவித்திருக்கலாம்.
பைபிளில் ஒரு
கதை உண்டு.
ஒருவன், தாய்
மாமன் ஊருக்கு வருகிறான். அங்கு தாய்மாமனுக்கு இரண்டு பெண்கள். அதில் சிறியவள் மிக
அழகாக இருப்பாள். பெரியவள் அவ்வளவு அழகில்லை. மாமனிடம், அவரின் சின்னப் பெண்ணை
திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்பான். அவரோ, "மருமகனே! நீ, என் வீட்டில்
ஐந்து வருடங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தால், என் சின்னப் பெண்ணை உனக்கு
திருமணம் செய்து கொடுக்கிறேன்" என்று கூறுகிறார். இவனும் அதை நம்பி, 5
வருடங்கள் ஆடு மேய்க்கிறான். அன்று இரவில் இவனுக்குத் திருமணம் முடிந்தது. இரவில்
ஒரு குடிசையில் மனைவியுடன் தனிமை. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. விடிந்து
பார்த்தால், அவள் சின்னப் பெண் இல்லை; மாமனாரின்
பெரியபெண். உடனே மாமனிடம் சென்று, "நீங்கள் என்னை ஏமாற்றி
விட்டீர்கள்; நம்பிக்கை துரோகம் செய்துவிட்டீர்கள்; உங்களின் சின்னப் பெண்ணை
திருமணம் செய்து கொடுப்பீர்கள் என்ற முழு நம்பிக்கையில்தான் நான் உங்களின் ஆடுகளை
மேய்த்தேன்" என்ற புலம்புகிறான். மாமனோ, எதற்கும் கவலைப்படாமல்,
"மருமகனே! அதற்கென்ன, இன்னும் ஒரு ஐந்து வருடம் என் வீட்டு ஆடுகளை
மேய்த்தால், சின்னப் பெண்ணையும் உங்களுக்கே திருமணம் செய்து கொடுக்கிறேன்; கவலைப்
படாதீர்கள்" என்று சொல்லிவிட்டார். அவனும் அடுத்த 5 வருடத்திற்கு ஆடு
மேய்கிறான்.... இப்படியாகப் போகிறது பைபிள் கதை.
"உனக்கு
எனச் சொல்லிவிட்டு, பின், பேச்சை மாற்றக் கூடாது" என்பதைத்தான் எஸ்டாபெல்-Estoppel என்ற சட்டவிதி கூறுகிறது.
இதேபோல, 2009ல் லண்டனில் ஒரு வழக்கு:
டேவிட்
என்பவர் பம்பரமாக வேலை செய்யும் ஒரு விவசாயி. 30 வருடங்களாக தன் பெரியப்பா மகனான
பீட்டரின் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். முழுப் பொறுப்பும் டேவிட்தான்.
சம்பளமெல்லாம் கிடையாது. பீட்டர் அவ்வப்போது, "எனக்குப் பின், இந்தப்
பண்ணைக்கு நீதான் உரிமையாளன்" என்று டேவிட்டை குளிர்ச்சி ஊட்டிக்
கொண்டிருப்பார். அதை நம்பிய டேவிட் மாடாக உழைத்தார். இப்படிச் சொல்லியே 2005ல்
இறந்து விட்டார் பீட்டர். பீட்டர், உயிலும் எழுதி வைக்கவில்லை. பீட்டரின் இந்த
உறுதிமொழியை வைத்து, வேலைபார்த்துவந்த டேவிட் இந்த சொத்துக்களை கேட்கிறார்.
உயிருடன் இருக்கும்போதே, எனக்குத் தான் சொத்து என்று சொல்லி என்னை நம்ப
வைத்துள்ளார். எனவே எஸ்டபெல் சட்டவிதிப்படி எனக்குத் தான் சொத்து கிடைக்க வேண்டும்
என்று வாதாடுகிறார். கீழ்கோர்ட் இவர் சொல்வது சட்டப்படி சரியே என்று இவருக்கு
சொத்தை கொடுத்துவிட்டது. ஆனால் அப்பீல் கோர்ட் மறுத்து விட்டது. எனவே டேவிட்,
ஹவுஸ் ஆப் லார்டு கோர்ட்டுக்கு (House of Lords) அப்பீல் செய்கிறார்.
லார்டு
கோர்ட், "பீட்டர், நேரடியாகச் சொல்லி இருந்தாலும், மறைமுகமாகச் சொல்லியிருந்தாலும், இது எஸ்டாபெல் என்ற
சட்டவிதியின் கீழ் வரும். எனவே டேவிட்டுக்குத்தான் அந்தச் சொத்து என்று தீர்ப்பு
கூறிவிட்டது.
Lord Walker
expressed his conclusions:
"...I am
satisfied that … Peter was intending to indicate to David that he would be
Peter's successor to Steart Farm, upon his death, and that David's
understanding to that effect was correct . I find that this remark and conduct
on Peter's part strongly encouraged David, or was a powerful factor in causing
David, to decide to stay at Barton House and continue his very considerable
unpaid help to Peter at Steart Farm, rather than to move away to pursue one of
the other opportunities which were then available to him, and which he had been
mulling over….."
.
No comments:
Post a Comment