சம்சார
சாகரத்திலிருந்து உன்னை விடுவிப்பேன்!
(ஸம்சார
ஸாகராத் ஸமுத்தர்தா)
"என்னையே
நினைத்துக் கொண்டிருப்பவனின், பிறப்பு, இறப்பு என்னும் சம்சார கடலிலிருந்து,
அவனைக் காப்பாற்றி என்னிடம் சேர்த்துக் கொள்வேன்."
யேது ஸர்வாணி
கர்மாணி மயி ஸந்யஸ்ய மத்பரா;
அனன்யேனைவ
யோகேன மாம்த்யாயன்த உபாஸதே
தேஷாமஹம்
ஸமுத்தர்த்தா ம்ருத்யஸம்ஸார ஸாகராத்
பவாமி ந
சிராத்பார்த்த மய்யா வேஷிதசேதஸாம்.
யே =
எவனொருவன்;
து = ஆனால்;
ஸர்வாணி =
ஒவ்வொன்றும்;
கர்மாணி =
செயல்கள்;
மயி =
என்னிடம்;
ஸந்யஸ்ய =
துறந்து;
மத் பரா =
என்னிடம் பற்றுக்கொண்டு;
அனன்யேன =
பிறழாது;
ஏவ =
நிச்சயமாக;
யோகேன =
அத்தகைய யோகத்தால்;
மாம் =
என்னிடம்;
த்யாயந்த =
தியானத்துடன்;
உபாஸதே =
வழிபாடு செய்கின்றானோ;
தேஷாம் =
அவர்களில்;
அஹம் = நான்;
ஸமுத்தர்தா =
நான் விடுதலை செய்கிறேன்;
மருத்யு
ஸ்மஸார = பிறப்பு, இறப்பு என்னும் இந்தவாழ்க்கை;
ஸாகரத் =
கடலிலின்றும்;
பவாமி = ஆகி;
ந சிராத் =
வெகுநேரமல்ல;
பார்த்த =
பார்த்தாவின் மைந்தனே (அர்ச்சுனா);
மயி =
என்னிடம்;
ஆவேஷித =
நிலைபெற்ற;
சேதஸாம் =
அதுபோன்ற மனமுடையவர்களின்;
ஸ்ரீகிருஷ்ணன்,
நம்மை ஏன் இந்த வாழ்வைவிட்டு வரச் சொல்கிறார்? ஆன்மாவை இந்த உடலிலிருந்து
விடுவிக்கச் சொல்வது எதனால்? இந்த ஆன்மா இந்த உடலில் இருந்து கொண்டு நல்லது
கெட்டதை அனுபவித்தாலும், அது இறைநிலையில் தான் பேரானந்தம் அடையுமாம்! அந்த நிலை
பிறப்பு, இறப்பு அற்ற பேரின்ப நிலை! அதற்காகத்தான் இவ்வளவு போராட்டங்களும். எனவே
அதை அடையும் வழியை இறைவன் காண்பிக்கிறான். அதற்கான ஒரே வழி, நாம் நமது ஆன்மாவை
அறிந்து கொண்டால் போதும்! அது வழியைத் தேடிக் கொள்ளும்.
.
No comments:
Post a Comment