நதிகள்
அரசுக்கு சொந்தமா?
ஓடும் தண்ணீர்
யாருக்கும் சொந்தமில்லை; யார் வேண்டுமானாலும் அள்ளிக் கொள்ளலாம்;
உபயோகிக்கலாம்; எனவே நதிகள் யாருக்கும்
சொந்தமில்லை, அரசுக்கும் சொந்தமில்லை,என்பது வெகுகாலமாக இருந்துவந்த பொதுஜன
அபிப்பிராயம்.
ஒருவேளை, ஒரு நதியானது ஆரம்பித்து, கடலில்
கடக்கும்வரை அரசாங்க நிலத்திலேயே ஓடினால், அது அரசாங்கத்துக்குச் சொந்தம். ஓடும்
நதியின் இருகரைகளைகளில் உள்ள நிலங்களும் அரசுக்குச் சொந்தமாக இருந்தால், நதியும்
அரசுக்குச் சொந்தம்; அல்லது அந்த சொந்த நதியில் படகு போக்குவரத்து இருந்தாலும்,
தொடர் வெள்ள ம் ஏற்பட்டாலும் அது அரசுக்குச் சொந்தம்.
கரையோர மக்கள்
இந்த நதியை உபயோகிக்க உரிமையுண்டு. நதியின் தண்ணீர் வரை நிலத்தை வைத்திருப்பவர்
அதை உபயோகிக்கும் உரிமை உள்ளவர். இதை வரைமுறைப் படுத்தும் வகையில் பிரிட்டீஸ் அரசு
சட்டம் கொண்டு வந்தது.
பிரைவி
கவுன்சில் வழக்கு in PC Appeal No.34 of 1931.
கோதவரி
கலெக்டர் vs. சன்னிதிராஜா
சுப்பராயுடு மற்றவர்கள்.
கோதாவரி
நதியின் ஒருகிளை ஆறு சிலப்ப கால்வாய் (Chilapa Kalva). இதை ஒட்டி வாதிக்கு நிலங்கள்
உள்ளன. நதியை ஒட்டி நிலம் இருந்தால் அதை Riparian rights ரிபேரின் உரிமை என்பர். நீர் எடுக்கும் உரிமை இயற்கையாகவே உண்டு. ஆனாலும்
கோதவரி மாவட்ட கலெக்டர் வாதியின் நிலங்களுக்கு தண்ணீர் வரி (Water Cess)போடுகிறார். (As per Madras Irrigation Cess Act 7 of 1865).
இந்த சட்டம்
ஏன் வந்தது என்றால், "பிரட்டீஸ் அரசு, நீர்பாசன வசதிகளை அதிகச் செலவில்
செய்து கொடுத்துள்ளதால், அதை சரிக்கட்டும் விதமாக இந்த புதுவித வரியைப்
போட்டதாம்."
Whenever water is
supplied or used for purposes of irrigation from any river, stream, channel,
tank, or work belonging to or constructed by Government, it shall be lawful for
the Govt before the end of the Revenue year succeeding that in which the irrigation
takes place to levy at pleasure on the land so irrigated a separate cess for
such water, and the Govt may prescribe the rules …..
ஜமின்தார்,
இனாம்தார் நிலங்களுக்கு இந்த வரிவிதிப்பிலிருந்து சலுகை --
Provided -- that
where a zamindar or inamdar or any other description of land-holder not holding
under ryotwari settlement is by virtue of engagements with the Govt entitled to
irrigation free of separate charge, no cess under this Act……..
இந்த வழக்கில்
சுப்புராயுடு போன்றவர்கள், இந்த நதியை நாங்கள் மூதாதையர் காலத்திலிருந்து
அனுபவித்து வருகிறோம் என்று வழக்காடுகிறார்கள். பிரிட்டீஸ் அரசோ, நதியில்
போக்குவரத்து இருந்தாலும், கரை புரண்ட வெள்ளம் வந்தாலும் அந்த நதி அரசுக்குச் சொந்தம் என்றும், அதனால் நீர் எடுக்கும் உரிமை
கொண்டாட முடியாது என சொல்கிறது.
ஐகோர்ட்,
பிரைவி கவுன்சில் வரை செல்கிறார்கள்.
"The result is
that in this case the river only belongs to the govt if the river is both tidal
and navigable."
அப்படியென்றால்,
கரையோர மக்கள் நிலை? அவர்கள் domestic உபயோகம் மட்டும் செய்து கொள்ளலாம்.
.
No comments:
Post a Comment