யசோதை நந்தனின் மனைவி.
இவள்தான் கிருஷ்ணனை வளர்த்தவள்.
வளர்ப்புத்தாய். வளர்ப்புத்தாய் என்று ஒற்றைவரியில் சொல்லக்கூடாது. அவளுக்குக்
கோபம் வந்துவிடும். அவள்.... தாய்.....தான்.....
சிறையில் வசுதேவன் மனைவி தேவகிக்கு கிருஷ்ணன்
பிறந்த நேரத்திலேயே,
இந்த யசோதைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவள் மயக்கமுற்ற நிலையில்,
அந்தப் பெண் குழந்தையை எடுத்துவிட்டு, கிருஷ்ணனை
கொண்டுவந்து போட்டு விட்டார்கள். மயக்கத்தில் இருந்ததால், யசோதைக்கு இந்த விபரம் தெரியாது.
கிருஷ்ணன் தன் மகன்தான் என்றே வளர்க்கிறார்.
இவன் தன் மகன் இல்லை என்னும் விபரம் வெகுகாலம்
கழித்து யசோதைக்குத் தெரிந்தபின்னரும் அதே அன்போடு வளர்த்து வந்தாளாம்.
பெற்ற தாயிடம் வளரும் குழந்தைகள்
பாசத்தால் மழுங்கி விடுமாம்.
ஆனால் வளர்ப்பு தாயிடம் வளரும்
குழந்தைகள் அறிவில் சிறந்து இருக்குமாம்; அதில்லாமல் உலக சாதனைகள் செய்யுமாம்.
பெரும்பாலும் உலக சாதனை செய்த
குழந்தைகள் எல்லாம் அவர்களின் பெற்ற தாயிடம் வளர்ந்திருக்காது. வளர்ப்புத்தாய்
அல்லது பெற்றதாயின் தாயாரிடம் (பாட்டியிடம்) வளர்ந்திருப்பர். இதற்கு பல
முன்னுதாரணங்கள் உள்ளதால் தனித்தனியே குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
அலெக்ஸாண்டரிலிருந்தே சொல்லலாம். மன்னர்
பிலிப்-2க்கும் பல மனைவிகளில் ஒரு மனைவியான ஒலிம்பஸ்க்கும் அலெக்ஸாண்டர் பிறந்தார்.
ஆனால் வளர்ந்தது என்னவோ நர்ஸ் லனிக் (Lanike) என்ற வளர்ப்புத்தாயிடம்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம்
லிங்கன், தன் வளர்ப்புத்தாயிடம் வளர்ந்தவர் (லிங்கனின் 9வது வயதில் அவரின் தாய்
இறக்கிறார். எனவே அவர் அப்பா வேறு திருமணம் செய்கிறார்). அந்தப் பெண்மணிக்கும் மூன்று
குழந்தைகள் இருந்தபோதும் இவரைப் பாசமாகவே வளர்த்து படிக்க வைத்தாராம்.
அமெரிக்க அதிபர் ஒபாமா தன் தாயின்
தாயான பாட்டியிடம் வளர்ந்தவர்.
இப்படியாக பலபேர்........
இந்தியாவிலும்........
No comments:
Post a Comment