Tuesday, October 14, 2014

நினைவுகள்-49

எந்தத் தாயும் தன் “கெட்ட மகனை” ஏற்றுக் கொள்ள மாட்டாள் போலும்!

ஒரு தாய்க்கு பெருமையே அவளின் மகன் நல்லவனாக இருக்கவேண்டும் என்பதே!
நீதி என்பது தாயிடம் இருந்துதான் வந்துள்ளது.
தாயே நீதி என்பதால்தானோ என்னவோ நீதி தேவதை ஒரு தாயாகவே இருக்கிறாள்.
தன் மகன்தானே, அவன் கெட்டவழியில் சென்று வெற்றி அடையட்டும் என்று எண்ணாதவள். அதனால்தான் அவள் தாயாகவே இருக்கிறாள்.

மகனாகவே இருந்தாலும் "தர்மமே ஜெயிக்கும்" என மகனுக்கு வரம் கொடுத்தாள் ஒரு தாய். மகன் ஜெயிக்க வேண்டும் என்று வரம் கொடுக்கவில்லை.

காந்தார தேசம் என்பது சிந்து நதிக்கு மேற்கே உள்ள தேசம். அந்த தேசத்தை ஆட்சி செய்தவன் சபலன். இந்த சபலன் மன்னனின் மகள்தான் காந்தாரி.

காந்தாரியை, கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு மனைவியாக்கினர். கணவனுக்கு கண் தெரியாது என்பதால், இவளும் தன் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு கடைசிவரை இருந்து வாழ்ந்தவள்.

இவளுக்கு 100 மகன்கள். ஒரு மகள். அதில் மூத்தவன் பெயர்தான் துரியோதனன்.

இந்த துரியோதனன் மகாபாரதப் போருக்கு போகிறான். போகும்முன் தாயிடம் ஆசிபெறச் செல்கிறான். "தாயே! எனது வெற்றிக்கு ஆசீர்வதியுங்கள்" என கேட்கிறான்.

அவளோ, "யதோ தர்மஸ்த தோ ஜய" என்கிறாள்.
அதாவது, "தர்மம் எப்படியோ அப்படியே வெற்றியும்."

கேட்பவன் தன் மகனாகவே இருந்தபோதும், தர்மம்தான் ஜெயிக்கும் என்கிறாள். மகன் ஜெயிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.





No comments:

Post a Comment