Malicious
prosecution
Badduri
Chandra Reddy and another v. Pammi Rami Reddy and others,
Judgment
Dated 27 August, 1954 by Andhra High
Court
Citation:
AIR 1955 AP 229
இது
சிவில் அப்பீல் வழக்கு. ஓ.எஸ் வழக்கின் டிகிரியை எதிர்த்து, அதில் பிரதிவாதிகளாக இருப்பவர்கள்
கொண்ட வந்த அப்பீல் வழக்கு.
வழக்கின்
விபரம்: 1-வது பிரதிவாதியின் மனைவி ராமம்மா என்பவர் 1948-ல் இறந்து விடுகிறார். அவரின்
கணவரும் மற்றவர்களும் ஒரு கிரிமினல் புகார் கொடுக்கிறார்கள். அதில் வாதியும் மற்றவர்களும்
சேர்ந்து அந்தப் பெண்மணியை கொலை செய்து விட்டதாக புகார். அவள் இறந்தது homicidal violence என்று
புகார் பதிவாகிறது. ஐபிசி செக்ஷன் 302-ன்படி வழக்கு செசன்ஸ் கோர்ட்டுக்கு வருகிறது.
குற்றவாளிகளாக இந்த சிவில் வழக்கின் வாதி மீதும் அவரைச் சார்ந்த மற்ற ஐந்து பேர்கள்
மீதும் கிரிமினல் வழக்கு. குண்டூர் செசன்ஸ் கோர்ட்டில் நடக்கிறது. அதில், இறந்த ராமம்மா
தலையில் அடிபட்ட இறக்கிறார். அது அவள் வீட்டுக்குள் நடக்கிறது. மாவு அரைப்பதற்காக திருகை
இருக்கும் இடத்துக்குச் செல்லும்போது, தவறி விழுந்து, ஒரு கடப்பா கல்லில் மோதி அதனால்
தலையில் மண்டை ஓடு முறிவு ஏற்பட்டு இறக்கிறார். குற்றவாளிகளின் தாக்குதலால் இறக்கவில்லை
என்றும், எனவே குற்றவாளிகளை விடுதலை செய்தாவகும் சொல்லி செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு வருகிறது.
செசன்ஸ்
கோர்ட் தீர்ப்பு வந்தவுடன், அதில் குற்றவாளிகளாக இருந்து, இப்போது நிரபராதிகள் என கோர்ட்
தீர்ப்பு வந்தவுடன், அதில் ஒரு குற்றவாளியாக சொல்லப்பட்டவர், ஒரு சிவில் வழக்கை அந்த
இறந்த பெண்மணியின் கணவர் மற்றும் சிலர் மீது போடுகிறார். பொய்யான தகவலைகளைச் சொல்லி
இவர்களை அந்த கொலை வழக்கில் மாட்டி விட்டு விட்டதாகவும், இயற்கையாக இறந்த பெண்மணியை,
கொலை செய்து விட்டதாக போலீஸூக்குச் சொல்லி, பொய்யாக மாட்டி விட்டதாகவும், உண்மைக்கு
புறம்பாக malice என்ற கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டு, அவருக்கு தேவையில்லாத அலைச்சலும், மன உளைச்சலையும்
கொடுத்தற்காக, நஷ்ட ஈடாக ரூ.5,250/- கேட்டு சிவில் வழக்கை போடுகிறார்.
ஆனால்
பிரதிவாதிகளோ, (இறந்த பெண்மணியின் கணவரும், மற்றவர்களும்) நாங்கள் வேண்டுமென்றே கெட்ட
எண்ணத்தில் வாதி மீது பொய் புகார் கொடுக்கவில்லை. அந்தப் பெண்மணி இறக்கும் போது, இவர்கள்தான்
அந்த வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்தவர்கள் என்று மட்டும் தான் போலீஸூக்குச் சொன்னோம்.
போலீஸ் தான் கிரிமினல் வழக்குப் போட்டது. எங்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக
மட்டுமே சொன்னோம். கொலையை நாங்கள் நேரில் பார்க்கவும் இல்லை; அப்படி நேரில் பார்த்ததாகச்
சொல்லவும் இல்லை. எனவே இந்த மான நஷ்ட வழக்கு தேவையில்லாதது என்று பிரதிவாதிகள் வாதம்
செய்கிறார்கள்.
சிவில்
வழக்கை விசாரித்த கீழ்கோர்ட், 1-வது பிரதிவாதி மீது உள்ள வழக்கை தள்ளுபடி செய்கிறது.
மற்ற இரண்டு பிரதிவாதிகளும் தலா ரூ.3,250 மற்றும் 750/- வாதிக்கு நஷ்ட ஈடாக கொடுக்க
வேண்டும் என்று தீர்ப்புச் சொல்கிறது. சிவில் நீதிபதி, “இறந்த அந்த பெண்மணி, விழுந்ததால்
காயம் ஏற்பட்டதாகச் சொல்ல முடியாது என்றும், ஏதோ ஒரு பெரிய கல் போன்ற பொருளைக் கொண்டு
தாக்கியதால் தான் அந்தப் பெண்மணி இறந்து இருக்கக் கூடும்” என்றும் 2, 3 பிரதிவாதிகள்
சொல்லி, அதை நம்பி, கணவரான 1-ம் பிரதிவாதி போலிஸில் புகார் கொடுத்துள்ளார்” என தன்
தீர்ப்பில் ஒரு இடத்தில் சுட்டிக் காட்டி உள்ளார்.
மேலும்,
2, 3 பிரதிவாதிகள் சொல்லித் தான், இறந்த பெண்மணியின் கணவரான 1-ம் பிரதிவாதி போலிஸில்
புகார் கொடுத்துள்ளார். எனவே அவர் மீது எந்த தவறும் இல்லை. 2, 3 பிரதிவாதிகள்தான் தூண்டி
விட்டு இந்த புகாரை அளிக்க வைத்துள்ளார்கள் என்றும் முடிவு செய்கிறார்.
எனவே
பொய் வழக்கு போட்டதாக 2,3 பிரதிவாதிகள் மீது நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியவர்கள் என முடிவு
செய்கிறார் சிவில் கோர்ட்டின் நீதிபதி.
அதை
எதிர்த்து பிரதிவாதிகள் ஐகோர்ட்டில் அப்பீல் செய்கிறார்கள்.
ஐகோர்ட்டில்,
பிரதிவாதிகளின் வாதம் என்னவென்றால், “இவர்கள் prosecutor இல்லை. அதாவது இவர்கள் கிரிமினல்
வழக்குப் போடவில்லை. போலீஸ்தான் போடுகிறது. இவர்களுக்கு உள்ள சந்தேகத்தை போலிஸிடம்
தெரிவித்தார்கள். அவ்வளவே. பொய் வழக்குப் போட்டால் மட்டுமே நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
இதில் பொய் வழக்கு என்ற பேச்சே எழவில்லை என்கிறார்கள். அதற்கு ஆதரவாக Narasinga
Rao v Muthayya Pillay, 26 Mad 362 என்ற முன் வழக்கை காண்பிக்கிறார்கள்.
அதில், போலீஸூக்கு தகவல் கொடுத்ததை, பொய் வழக்கு போட்டதாகச் சொல்ல முடியாது என்று தீர்ப்பாகி
உள்ளது.
மற்றும்
ஒரு பிரைவி கவுன்சில் வழக்கையும் மேற்கோள் காட்டுகிறார்கள், Gaya Prasad v. Bhagat Singh, 35 Ind
App 189 (PC) இதிலும் மேற்சொன்ன வழக்கை குறிப்பிட்டுச் சொல்லி உள்ளார்கள்.
பிரைவி கவுன்சில் வழக்கில், “இந்தியாவில் போலிஸ் மட்டுமே கிரிமினல் விசாரனைகளை நடத்தும்
அதிகாரம் கொண்டது. அவர்களின் விசாரனையின் முடிவில் யாரை குற்றம் சுமத்த முடியுமோ, அவர்களையே
குற்றம் சுமத்துவர். இதில் வெளி நபர்களோ, சாட்சிகளோ ஒன்றும் செய்ய முடியாது” என்று
தெளிவு படுத்தி உள்ளனர்.
ஆனால்
இந்த வழக்கில், “பொய் என்று தெரிந்தே, பொய்யான தகவலை, போலீஸூக்கு சொல்லி உள்ளார்கள்”
என்பதே. அவர்கள் போலிஸைத் தூண்டி இந்த வழக்கைப் போட வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்.
அப்படி மாட்டி விட்டு கோர்ட் வரை போய் விட்டது.
வழக்கை
போலிஸ்தான் போடும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், பொய்யான சாட்சியமும், தகவலும் ஒரு
பொய்யான கிரிமினல் வழக்கை, போடுவதற்கு அவர்கள் துணை இருந்தார்கள் என்று சொல்கிறார்
வாதி.
மேலே
சொன்ன நரசிங்க ராவ் வழக்கில், ஒரு புகாரை அளிப்பவரை, பொய் வழக்குக்கு துணை போனார் என்று
malicious prosecution செய்தார் என்று நஷ்ட ஈடு கேட்க முடியாது என்று சொல்லி உள்ளது.
எனவே,
ஏதோ அவருக்குத் தெரிந்த விஷயம் உண்மை என்று நம்பி, போலிஸ் புகார் கொடுத்தால், அவரை
பொய் வழக்குக்கு துணை போனார் என்று சிவில் வழக்கு போட முடியாது என்று பல கோர்ட்டுகள்
தீர்ப்பில் சொல்லி உள்ளன.
புகார்
கொடுப்பவர் என்ன புகார் சொன்னாலும், அதை போலிஸ், மாஜிஸ்டிரேட் விசாரித்து, தகுதி இருந்தால்
மட்டுமே வழக்குப் போடுவர். எனவே புகார் கொடுத்தவர்தான் சட்டத்தின் சக்கரத்தை உருட்டி
விட்டார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. சட்டத்தை நடைமுறைப் படுத்துவது போலீஸூம்
மாஜிஸ்டிரேட்டும் தான். என்று Periya
Goundan v. Kuppa Goundan என்ற வழக்கில் தீர்ப்பு உள்ளது.
சிந்து
கோர்ட் ஒரு வழக்கில், யார் ஒருவர் பொய் வழக்குப் போட துணை போகிறாரோ அவர் அந்த குற்றத்தைச்
செய்தவர் ஆகிறார் என்று சொல்லி உள்ளது. ஏனென்றால் அவர் கொடுத்த வாக்குமூலமே அந்த வழக்கை
போடுவதற்கு காரணம் ஆகிறது.
இந்த
வழக்கில் அவ்வாறு நடக்கவில்லை. இவர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை. தகவல்களை மட்டுமே
சொல்லி உள்ளனர். அதை நம்பி, அவரின் கணவர் புகார் கொடுத்துள்ளார். எனவே இவர்கள் தகவல்
கொடுத்ததாகச் சொல்ல முடியாது. இறந்த பெண்மணியின் கணவர்தான் (1-ம் பிரதிவாதிதான்) புகார்
கொடுத்துள்ளார். எனவே இவர்களை (2,3 பிரதிவாதிகள்) Prosecutor என்று கருத இடமில்லை. இவர்களை,
வேண்டுமென்றே புகார் கொடுத்தவர்கள் என்றும் கூறி விட முடியாது.
எனவே
அப்பீல் வழக்கு இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு ஆகிறது. அசல் வழக்கு தள்ளுபடி ஆகிறது.
**
No comments:
Post a Comment