இந்து சக்சஷன் சட்டம் 1956
1) இந்த சட்டத்தின் பெயர்:
“இந்து சக்சஷன் சட்டம் 1956”.
இந்துக்கள் யார் யார்:
2) (1) இந்தச் சட்டம், இந்துக்கள் அனைவருக்கும் பொருந்தும். (இந்து என்பது வீரசைவர், லிங்காயத்துக்கள், பிரமோ, பிரார்த்தனா, ஆர்ய சமாஜ் பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் குறிக்கும்).
புத்த, ஜைன, சீக்கிய, மதத்தினரும் இந்துக்களே.
முஸ்லீம், கிறிஸ்தவர், பார்சி, யூதர் அல்லாதவரும் இந்துக்களே (அவர்கள் இந்து மத பழக்க வழக்கங்களை கொண்டிருந்தால்).
பெற்றோர் இருவரும் இந்துக்களாக இருந்தால், அவர்களின் சட்டபூர்வ குழந்தைகள், சட்டபூர்வமற்ற குழந்தைகள் இந்துக்களே.
பெற்றோர் இருவரில் ஒருவர் இந்துவாக இருந்தால், அவரின் சட்டபூர்வ குழந்தைகள், சட்டபூர்வமற்ற குழந்தைகள் இந்துக்களே. (ஆனால் அவர்களை இந்துக்களின் குழந்தைகளாக வளர்க்கப்பட்டு இருக்க வேண்டும்).
வேறு மதத்தில் இருந்து, இந்து மதத்துக்கு மாறியவர்களும் இந்துக்களே.
(2) ஷெட்யூல் டிரைப்புகள் என்னும் ஆதிவாசி பழங்குடிகள் இந்துக்கள் இல்லை. (அரசியல் சாசன சட்டம் ஆர்ட்டிகிள் 366 உள் பிரிவு 25-ன்படி). அரசு அவர்களை இந்துக்கள் என்று அரசிதழில் வெளியிட்டு இருக்க வேண்டும்.
(3) இந்த சட்டப்படி இந்துக்கள் என்று இதில் குறிப்பிடுவது, மேலே சொன்னவர்களைத்தான் குறிக்கும்.
(பாண்டிச்சேரியில் 1.10.1963 முதல் பிரான்ஸ் குடியுரிமையில் இருந்து விலகி வந்தவர்களும் இந்துக்கள் என்றே கருதப்படுவர்).
3) பொருள் விளக்கங்கள்:
ஆக்னேட் உறவு என்றால் – ஒரே ஆண்வழியில் வந்தவர்களுக்கு இடையே உள்ள உறவு.
அலியசந்தான சட்டம் என்பது – இந்தச் சட்டம் வரவில்லை என்றால், அவர்களுக்கு மதராஸ் அலியசந்தான சட்டம் 1949 யார் யாருக்குப் பொருந்துமோ அவர்கள்.
காக்னேட் உறவு என்றால் – ஒரே ஆண் வழியில் வராத உறவுகள்.
பழக்க வழக்கம் என்பது – தொடர்ந்து பல காலமாக, ஒரே மாதிரி, ஒரு கூட்டத்துக்கு மக்களுக்குள், அல்லது ஒரு குடும்பத்துக்குள் இருந்து வரும் பழக்க வழக்கம். (ஆனால் அப்படியான பழக்க வழக்கம், பொது நீதிக்கு எதிரானதாக இருக்கக் கூடாது).
முழு ரத்த உறவு என்பது – ஒருவருக்கு அவரின் ஒரே மனைவி மூலம் பிறந்த குழந்தைகளுக்குள் உள்ள உறவு.
அரை ரத்த உறவு என்பது – ஒருவருக்கு அவரின் வேறு வேறு மனைவிகள் மூலம் பிறந்த குழந்தைகளுக்குள் உள்ள உறவு.
கர்ப்ப உறவு என்பது – ஒரு பெண்ணின் பல கணவர்களின் பிள்ளைகளுக்கு இடையே உள்ள உறவு.
வாரிசு என்பது – இறந்தவரின் சொத்துக்களில் உரிமை பெறக்கூடிய உரிமை உள்ளவர்கள்.
இன்டஸ்டேட் என்பது – ஒருவர் உயில் ஏதும் எழுதிவைக்காமல், தன் சொத்தை விட்டு விட்டு இறந்தவர்.
மருமக்கள் தாயம் சட்டம் என்றால் – இந்த சட்டம் வராமல் இருந்திருந்தால், அவர்களுக்கு மதராஸ் மருமக்கதாயம் சட்டம் 1932 மற்றும் திருவாங்கூர் நாயர் சட்டம் போன்றவை அமலில் இருக்கும் நபர்கள்.
நம்பூதிரி சட்டம் என்பது – மதராஸ் நம்பூதிரி சட்டம் 1932 அமலில் இருக்கும் நபர்கள்.
இந்த சட்டத்தில் ஆண் என்று சொல்லும் இடங்களில் எல்லாம் பெண் என்றும் பொருள் கொள்ள வேண்டும். (குறிப்பிட்டுச் சொல்லாதவரை).
4) இந்தச் சட்டம் எவைகளைப் பாதிக்கும், எவைகளை பாதிக்காது;
(1) பழைய இந்து சட்டத்தில் உள்ள பழைய பழக்க வழக்கங்களை இந்த சட்டம் செல்லாது என அறிவிக்கிறது.
(2) பழைய இந்து சட்டத்தில் எவை எவை எல்லாம், இந்த சட்டத்துக்கு எதிராக உள்ளதோ அவைகளும் இந்த சட்டப்படி செல்லாது.
5) சில சொத்துக்களுக்கு இந்த சட்டம் செல்லாது:
(1) இந்தியன் சக்சஷன் சட்டம் 1925-ல், பிரிவு 21-ல் சிறப்பு திருமணச் சட்டம் 1954-ல் சொல்லப்பட்டவை இந்த சட்டத்துக்கு பொருந்தாது. (அதாவது, இந்துக்களாக இருந்தும், அவர்கள் சிறப்பு திருமணச் சட்டத்தில் திருமணம் செய்திருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு, வாரிசு சொத்துப் பிரச்சனையில், இந்த இந்து சக்சஷன் சட்டம் 1956 பொருந்தாது).
(2) ஏற்கனவே மன்னர்களாக இருந்தவர்களின் சொத்துக்கள் அவர்களின் மூத்த மகனுக்கே வாரிசுப்படி செல்லும் என்ற நிலை இருந்தது. அவ்வாறு அதை இந்திய அரசும் அனுமதித்து இருக்கும் பட்சத்தில், அந்தச் சொத்துக்களுக்கு, இந்த இந்து சக்சஷன் சட்டம் 1956 பொருந்தாது.
(3) கேரளாவில் உள்ள வள்ளியம்மா தம்பிரான் கோயிலகம் எஸ்டேட் சொத்துக்களுக்கு, இந்தச் சட்டம் பொருந்தாது.
**
No comments:
Post a Comment