Committal proceedings
in Criminal cases
ஆந்திராவில் மகாபட்டிணம்
என்ற இடத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர், 1956-ல் ஒருவரை அழைத்து
வந்து கம்பால் தொடர்ந்து அடிக்கிறார். அதில் அவர் இறந்து விடுகிறார். சப்-இன்ஸ்பெக்டர்
மீது ஐபிசி 304 வழக்கு போடப் படுகிறது.
ஐபிசி 304 என்பது
ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், தன் செயலால் அவர் இறந்து விட்டால்
அது கொலை குற்றம் ஆகும். Culpable
homicide not amounting to murder.
Culpable homicide என்றால் மனிதனை சட்டத்துக்கு புறம்பாகக் கொல்வது. ஆனால் அது வேண்டுமென்றே செய்த
மனிதக் கொலை அல்ல.
இந்த மாதிரி கொலை
வழக்குகளை செசன்ஸ் கோர்ட்டே விசாரிக்கும். அதற்கு முன்னர் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில்
சாட்சிகளை விசாரித்து, தக்க ஆதாரம் இருந்தால், அந்த வழக்கு செசன்ஸ் நீதிமன்றத்தால்
விசாரிக்க வேண்டிய வழக்காக இருந்தால், அதை அந்த மாஜிஸ்டிரேட், செசன்ஸ் நீதிமன்றத்துக்கு
விசாரனைக்கு அனுப்பி வைப்பார். இதை கமிட்டல் புரசீடிங் Committal Proceeding என்பர்.
பழைய கால ஜூரி முறை போன்றது. குற்றம் இருந்தால் வழக்கு விசாரனைக்கு வரும்.
இந்த வழக்கில், சப்-இன்ஸ்பெக்டர்
குற்றவாளி. மாஜிஸ்டிரேட் எந்த நேரடி சாட்சிகளையும் விசாரிக்கவில்லை. ஏற்கனவே போலீஸ்
விசாரனையில் கொடுத்த அறிக்கையை வைத்தே, செசன்ஸ் நீதிமன்றத்துக்கு விசாரனைக்கு அனுப்பி
விட்டார் மாஜிஸ்டிரேட்.
இதை தவறு என்று ஐகோர்ட்டில்
வழக்கு போடுகிறார் சப்-இன்ஸ்பெக்டர்.
சிஆர்பிசி பிரிவு
207-ஏ என்ற பிரிவு புதிதாக திருத்தல் சட்டம் 1955ன்படி சேர்க்கப்பட்டது.
அதன்படி, மாஜிஸ்டிரேட்
எல்லா சாட்சிகளையும் விசாரித்து, குற்றம் நடந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தால்,
அதை வழக்கு விசாரனைக்காக செசன்ஸ் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அரசு தரப்பு எந்த
நேரடி சாட்சிகளையும் ஆஜர் படுத்தவில்லை. எனவே விசாரிக்கவில்லை என்று சொல்ல முடியாது.
மாஜிஸ்டிரேட் தன் முடிவாகவே எல்லா சாட்சிகளையும் வரவழைத்து விசாரிக்க வேண்டும் என்று
எந்த கட்டாயமும் இல்லை. இருந்த போதிலும், அரசே சாட்சிகளை கோர்ட்டில் விசாரனைக்கு உட்படுத்தி
இருக்க வேண்டும்.
இந்த வழக்கில், அரசு
எந்த சாட்சிகளையும் பட்டியல் இட்டுக் கொடுக்கவில்லை. எனவே எந்த சாட்சியையும் விசாரிக்க
முடியவில்லை.
எனவே சாட்சிகளை விசாரிக்காமல்
விட்டது சட்டக் குறை என்று எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், அது சரியான அணுமுறை ஆகாது
என்பதால், இந்த வழக்கை மறுபடியும் மாஜிஸ்டிரேட் கோர்ட் சாட்சி விசாரனைக்கு திரும்ப
அனுப்பி விட்டது ஐகோர்ட்.
**
No comments:
Post a Comment