சிபிசி பிரிவு 47
Pentapati Venkata
Suryaprakasa v. Abdullah Sahe and another
AIR 1959 AP 106
இந்து கூட்டுக் குடும்பம்.
அதில் உள்ள தந்தை மட்டும் ஒரு புரோ நோட்டுக் கடனை மேல் எழுத்துச் செய்து கொடுக்கிறார். பொதுவாக இது இந்து கூட்டுக் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களையும் (மகன்களை) கட்டுப்படுத்துகிறது.
புரோ நோட்டில் பணம்
கடன் கொடுத்தவர் வழக்குப் போட்டு டிகிரி வாங்கி விடுகிறார். வழக்கில் அந்த கூட்டுக்
குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் பார்ட்டியாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால்
வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, அந்த குடும்ப உறுப்பினர்களின் (மகன்களின்) பேரில்
உள்ள வழக்கை மட்டும் வாபஸ் பெற்றுக் கொள்கிறார் கடன் கொடுத்தவர். பின்னர் வழக்கு தந்தை மீது மட்டும் டிகிரி
ஆகிறது. அந்த சொத்தை ஜப்தி செய்து ஏலம் கொண்டு வருகிறார்.
இந்த பண வழக்கு நிலுவையில்
இருக்கும்போது, இந்து கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்குள் பாக வழக்கு போடுகிறார்கள்.
1950-ல் அந்த பாகவழக்கு டிகிரி ஆகிறது.
இந்த நிலையில் புரோ
நோட்டு டிகிரிப்படி ஜப்தி செய்த இந்த சொத்தை ஏலத்துக்கு கொண்டு வந்து, அதை ஒருவர் வாங்கி
விடுகிறார்.
இந்த நிலையில், இந்து
கூட்டுக் குடும்ப மற்ற உறுப்பினர்களான மகன்கள், அந்த புரோ நோட்டு டிகிரி ஈபி (Execution Petition) வழக்கில்
ஒரு மனு போடுகிறார்கள். அதில், அந்த சொத்தை ஏலம் கொண்டு வர ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள்.
ஏனென்றால், புரோ நோட்டு டிகிரி தந்தை மீது மட்டுமே வாங்கப்பட்ட டிகிரி. மகன்களை இது
கட்டுப் படுத்தாது என்பது அவர்களின் வாதம். மேலும் மகன்களுக்கு அந்தச் சொத்தில் மூன்றில்
இரண்டு பாகம் உள்ளது என்று ஆட்சேபம் தெரிவித்து சிபிசி பிரிவு 47-ல் ஒரு மனு போடுகிறார்கள்.
கீழ்கோர்ட்டும்,
அதை அடுத்த அப்பீல் கோர்ட்டும் ஒரே முடிவை எடுக்கின்றன. அது, சொத்தை புரோ நோட்டு டிகிரியில்
ஜப்தி செய்த பின்னரே, பாக வழக்கு வருகிறது. எனவே பாக வழக்கு, புரோ நோட்டு டிகிரியை
கட்டுப்படுத்தாது என்று கோர்ட் சொல்லி விட்டது.
சிபிசி பிரிவு 47
என்ன சொல்கிறது? “வழக்கின் பார்ட்டிகளுக்கு இடையில் உள்ள பிரச்சனையை பிரிவு 47-ன் மூலம்
வழக்காடி தீர்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லி உள்ளது. ஏற்கனவே புரோ நோட்டு வழக்கில்
மகன்களை பார்ட்டிகளாகச் சேர்த்து பின்னர் வேண்டாம் என்று வாதியே நீக்கி விட்டார். எனவே
அவர்கள் (அந்த மகன்கள்) வழக்கில் பார்ட்டிகள் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பது
வாதம்.
ஆனால், Sannamma v. Radha Bhayi ILR 41 Mad
418 (AIR 1918 Mad 123) FB என்ற வழக்கில் ஏற்கனவே ஒரு வழக்கில் பார்ட்டிகளாக
இருந்து, பின்னர் அவர்கள் புரோ நோட்டு வழக்கில் தேவையில்லாத பார்ட்டிகளாக இருந்து அவர்களைப்
பொறுத்து வழக்கு தள்ளுபடியானால், அவர்களும் பார்ட்டிகளே. எனவே அவர்கள் பிரிவு 47ல்
அந்த டிகிரியை ஈபி கோர்ட்டில் எதிர்க்கலாம் என்று சொல்லப் பட்டுள்ளது.
எனவே இந்த வழக்கில்,
தந்தை மட்டுமே புரோ நோட்டை எழுதிக் கொடுத்துள்ளார். மகன்கள் தேவையில்லாத பார்ட்டிகள்.
அவர்கள் மீது டிகிரி பெற முடியாது. எனவே மகன்களுக்கும் அந்த புரோ நோட்டு வழக்குக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை. எனவே சிபிசி பிரிவு 47ன்படி அவர்கள் “வழக்கின் பார்ட்டிகள்”
என்று எடுத்துக் கொள்ள முடியாது.
எனவே மகன்களின் அப்பீல்
வழக்கு தள்ளுபடி ஆகிறது. மகன்கள் வழக்குக்கு வெளியே இருக்கும் நபர்கள். எனவே சிபிசி
பிரிவு 47-ன் படி அவர்கள் வழக்கின் பார்ட்டிகள் இல்லை என்பதால், பிரிவு 47-ல் மனு செய்ய
அவர்களுக்கு உரிமை இல்லை.
**
No comments:
Post a Comment