Showing posts with label Science. Show all posts
Showing posts with label Science. Show all posts

Wednesday, January 22, 2014

கபால சல்லிய சிகிச்சை (Cranial Surgery)

கபால சல்லிய சிகிச்சை (Cranial Surgery)
மகாகவி காளிதாசன் காலத்திலே, மாளவ தேசத்து அரசனாக தாரா நகரத்திலிருந்த ஒரு அரசனின் பெயர் போஜராஜன். இவன் 1200 வருடங்களுக்கு முன் இருந்தவன். இந்த போஜன் அரசனின் காலத்தில்தான் கல்வி நிலை வெகுவாக வளர்ந்துள்ளது. அதனால்தான், சரித்திர ஆசிரியர்கள், இவனை “சரஸ்வதியின் தந்தை” என்கிறார்கள். இந்த போஜராஜனே செய்த வைத்திய நூல் ஒன்றும் உள்ளது. இவன் சமஸ்தானத்தில்தான் மகாகவி காளிதாசன் முதலிய கவிரத்தினங்கள் உருவாகியதும். “போஜபிரபந்தம்” என்பது இந்த போஜராஜனைப் பற்றி எடுத்துக் கூறும் நூல்.

போஜன் ஒருகாலத்தில் அவனின் தலையில் ஏற்பட்ட ஒரு பெருந்தலைவலியால் வருந்தினான். வைத்தியர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்தும் தகுந்த மருத்துவம் செய்ய முடியவில்லை. மருந்து மருத்துவத்தில் (ஔஷதம்) குணப்படுத்த முடியாததால், சல்லிய சாஸ்திர மருத்துவர்கள் (Surgeons) இருவர் போஜனின் அரண்மனைக்கு வந்து, அவனின் தலைவலியை குணப்படுத்த முடியும் என்று கூறி, அரசனுக்கு, ‘சம்மோகனி’ என்னும் ஔஷதமான மயக்க மருந்து (a kind of Chloroform) கொடுத்து, அவனின் மண்டையோட்டை பிரித்து, மூளையில் இருந்த விஷத்தை நீக்கி, மறுபடியும் அதேபோல மண்டையோட்டை சேர்த்தனர். தையலுக்குப்பின் ‘சந்தானகரணி’யிட்டு ‘சஞ்சீவி’ என்னும் மருந்தை உள்ளுக்குள் கொடுத்து, அவனின் உயிரும், அறிவும் உதிக்கும்படி செய்தனர். இவ்வாறு போஜபிரபந்தத்தில் சொல்லப் பட்டுள்ளது.

‘சம்மோகனி’ என்பது தற்போதைய ஆங்கில மருத்துவத்தில் குளோரபாம் (Chloroform) போல மயக்கமுண்டாக்கும் மருந்து. இது குளோரோபாம் என்ற தற்கால மயக்க மருந்தைக் காட்டிலும் மிகச் சிறந்ததாம். தற்கால குளோரோபாம் அபாயமுள்ளது. ஆனால் சம்மோகனி ஒரு பகல்காலம் வரை அபாயம் ஏதும் செய்யாதாம். வேண்டியபோது சஞ்சீவினியைப் கொடுத்தால் சம்மோகனி தன் பலத்தை இழந்துவிடுமாம். ஆனால், குளோரோபாம் அதிகமானால் உயிருக்கும் ஆபத்து ஏற்பட அதிகவாய்ப்புகள் உண்டு. கபால சல்லியம் என்னும் மண்டையோட்டை பிளந்து அறுவைச் சிகிச்சை (Cranial Surgery) செய்வதை ஐரோப்பியர்கள்  தாங்களே தற்காலத்தில் கண்டுபிடித்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு 1200 வருடங்களுக்கு முன்னரே அது நடைமுறையில் இருந்திருக்கிறது.

Cranial surgery = Craniotomy is a surgery involving opening the skull temporarily, allowing an operation to be performed on or around the underlying brain.


இதேபோல் மற்றொரு சம்பவமும் உண்டு. கௌதம புத்திரருடைய வைத்திய பண்டிதனாக விளங்கிய ஜீவகனும் அநேக கபால சல்லிய சிகிச்சைகளைச் (Cranial Surgery) செய்துள்ளான் என பௌத்த நூல்கள் கூறுகின்றன. 

Tuesday, January 21, 2014

பூகோளம்: (இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கவனத்துக்கு:)

பூகோளம்: (இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கவனத்துக்கு:)
ஆரிய சாஸ்திரம், பூமத்தியிலே சுமேருவும், சமுத்திர மத்தியிலே வடவாமுகமும் இருக்கின்றன என்று கூறும். இவை முறையே வடதுருவம் என்றும், தென்துருவம் என்றும் கூறப்படும்.

பூமத்தி என்று ஆரிய சாஸ்திரத்திலே சொல்லப்பட்ட இடம் வடதுருவமுனை.
ஆரிய சாஸ்திரம் பூமியை, மேகலா ரேகையை எல்லையாக வைத்து வடகோளர்த்தம், தென்கோளர்த்தம் என இரு கூறாகப் பிரித்து, வடகோளர்த்தம் முழுவதும் நிலம் (land) என்றும், தென்கோளர்த்தம் முழுவதும் ஜலம் (நீர்) என்றும் கூறும்.

வடகோளர்த்தம் முழுவதும் நிலமானதால் அதன் மத்திய ஸ்தானம் வடதுருவத்தின் அருகிலுள்ள சுமேரு. வடகோளர்த்தம் முழுவதையும் ஜம்புதீவென்று சொல்வர். இந்தச் ம்பு தீவு என்னும் வடகோளர்த்தம் நவ-வர்ஷங்களாக (9 தேசங்களாக) சொல்வர். அவை:
(1) மேருவை சூழ்ந்திருப்பது – இளாவிருத வர்ஷம்.
(2) அதற்கு தெற்கேயுள்ளது – ஹரிவர்ஷம். 
(3)அதற்கு தெற்கேயுள்ளது – கிம்புருஷ வர்ஷம். 
(4) அதற்கு தெற்கேயுள்ளது – பாரத வர்ஷம்.
(5) இனி, இளாவிருத வர்ஷத்துக்கு வடக்கே – இரண்மய வர்ஷம்.
(6) அதற்குத் வடக்கே – ரம்மியக வர்ஷம்.
(7) அதற்கு வடக்கே – குரு வர்ஷம்.
(8)  இந்த இளாவிருத வர்ஷத்துக்கு வடக்கேயும் தெற்கேயுமுள்ள ஆறு வர்ஷங்களுக்கும் இடையே, இளாவிருத வர்ஷத்துக்கு கிழக்கில் பத்திராசுவ வர்ஷம்,
(9)  மேற்கில், கேதுமால வர்ஷம் உள்ளன.

பாரதவர்ஷம், கேதுமாலவர்ஷம், குருவர்ஷம், பத்திராசுவ வர்ஷம், என்னும் நான்கும் மேகலா ரேகையை அடுத்துள்ள வர்ஷங்கள்.
இந்த நான்கு வர்ஷங்களிலும் மேகலா ரேகையிலே ஒன்றுக்கொன்று சமதூரத்தில் நான்கு பட்டணங்கள் (Cities) உள்ளன. அவை, இலங்காபுரி, ரோமாபுரி, சித்தபுரி, யவகோடி என்பன.

வருஷம் என்பது மழைப்பெயல் வேறுபாட்டால் வந்த பெயர். வருடத்தில் மழைபெய்யும் அளவு வேறுபாட்டால் வந்த பெயர்கள்.

இலங்காபுரிக்கு நேர்கீழே அதாவது அதோபாகத்தில் சித்தபுரி இருக்கிறதென்றும், இலங்காபுரிக்கும் சித்தபுரிக்கும் இடையே சமதூரத்தில் கிழக்கே யவகோடி இருக்கிறதென்றும், இலங்காபுரிக்கும் சித்தபுரிக்கும் இடையே சமதூரத்தில் மேற்கே ரோமாபுரி இருக்கிறதென்றும், ஆரிய சாஸ்திரம் கூறுகிறது.

இலங்காபுரி முதல் தொண்ணூறு பாகையில் கிழக்கே யவகோடி இருக்கிறது. இதிலிருந்து தொண்ணூறு பாகையில் சித்தபுரியும், இதிலிருந்து தொண்ணூறு பாகையில் ரோமாபுரி இருக்கிறதாம்.

மற்றைய ஆறு தீவுகளும் மேகலா ரேகைக்குத் தெற்கே சமுத்திரத்தில் ஆங்காங்கு உள்ளன. அவைகள் தனித்தனியே ஒவ்வொரு சமுத்திரம் சூழ்ந்துள்ளனவாம்.

பிரபஞ்சம் தோன்றலும் ஒடுங்கலும்: (The Birth of the Universe)

பிரபஞ்சம் தோன்றலும் ஒடுங்கலும்: (The Birth of the Universe)
God particle:
It is a nickname of a sub-atomic particle (called Higgs boson).
Protons and Neutrons have mass.
Photons don't have mass.
Then who gives mass to the matter.
It is believed that God Particle (Higgs Boson) gives mass to matter.
There are certain elementary particles even smaller than protons and neutrons. That particle is called 'Higgs boson' or God particle.
தேவர்கள் சேர்ந்து அமிர்தமதனம் கடைந்ததாக சொல்கிறார்களே!
முதலில் இந்த பிரபஞ்சம் ஒடுங்கி ஒடுக்க நிலையில் ஒரு புள்ளியில் இருந்தது. அது விரிவடைந்தபோது, சுழற்சியான (grinding) சப்தத்திலிருந்த (sound) அணுக்கள் ஒன்று, இரண்டாகி, இரண்டு மூன்றாகி, பலவாகி வெடித்துச் சிதறியதுபோல வெளிக்கிளம்பியதாம்.

இந்த நிகழ்வைத்தான் அமிர்தமதனம் கடைதல் என முனிவர்கள் சொல்லியது.

அணுக்கள் ஒன்றையொன்று பற்றிக் கொண்டு இறுக்கமாகி பொருளாக உருவானாலும், அவைகள்  அனைத்தையும் ஒருசேர அணைக்கும் சக்தி எது? அந்த இறை சக்தியை 'கடவுளின் துகள்' (God particle or Higgs boson)  என்று தற்போதைய விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். அணுக்கள் வெடித்துச் சிதறியபோது இந்த சக்தியானது ஏழு விநாடிக்குள் ஏற்பட்டதாக சொல்லியுள்ளார்கள்.

தற்போதைய உலக விஞ்ஞானிகள் எல்லோரும் சேர்ந்து அப்படி ஒரு "கடவுளின் துகள்கள்" உள்ளனவா என்றும்; அவைகள் அந்தச் சிறு விநாடிக்குள் அணுக்களை இறுக கட்டிக் கொள்ளுமா என்றும் ஆராய்வதற்காக, ஸ்விட்சர்லாந்தில் Collider என்னும் வெடிப்பு பரிசோதனைக்காக ஏற்படுத்தி பூமிக்கடியில் நிகழ்த்தியும் உள்ளார்கள் (இப்போது வேறு காரணங்களுக்காக அது நிறுத்தப்பட்டுள்ளதாம்). இது இறைவனைப்பற்றி அறிவதில் ஒரு படிக்கட்டு என்கிறார்கள்.

ஆனால் நமது இந்திய முனிவர்கள் இதை ஏற்கனவே அறிந்து, வேறு மொழியில் சொல்லி உள்ளதால், நாம் அதை முடநம்பிக்கை என கைவிட்டு விட்டோம்.
அதைப்பற்றிய தெளிவு இப்போதுள்ள இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது.

அமிர்தமதனம்: (இந்த பிரபஞ்சம் தோன்றிய காட்சி): 
Forming of Higgs Boson
இதன் பொருள் ‘அமிர்தம் கடைதல்’ எனப்படும். கிருதயுகத்திலே, தேவர்களும் அசுரர்களும் கூடி மந்தரத்தை மத்தாகவும், வாசுகியை தாம்பாகவும் (கயிறாகவும்) கொண்டு திருப்பாற்கடலை (இந்த பிரபஞ்சத்தை) கடைந்தபோது, விஷம், லக்ஷ்மி, சந்திரன், தந்வந்திரி, உச்சைசிரவம், கவுஸ்துபம், பாரிஜாதம், ஐராவதம், கற்பகதரு, காமதேனு, அமிர்தம் இவைகள் திருப்பாற்கடலிலிருந்து எழுந்தன.

மூலபிரகிருதி ஆகாய (Ether) உருவமாகிக் கிடந்து, பின்னர் தடித்து வாயு (air) உருவமாகிக் கிடந்து, பின்னர் தடித்து வைசுவாநரம் என்னும் அக்கினி (fire) உருவமாய்க் கிடந்து, பரிணாம ரூப பிரமாண்டத்தை கண்ணுக்கு விஷயமாகிய தோற்றப் பிரபஞ்சமெல்லாம் (இப்போது நாம் கண்ணால் காணக்கூடிய இந்த உருவமுள்ள பிரபஞ்சம்) உண்டானது இந்த அமிர்தத்தினாலேயேதான். 

இந்த உலகம் காரியபட்ட முறையையே (உருவான விதமே) அமிர்தமென பௌராணிகர்கள் குறிப்புரையால் கூறிப் போயுள்ளார்கள்.

கிருதயுகம் என்பதன் பொருள் பிரமாண்டம் சிருஷ்டி செய்யப்பட்ட யுகம் என்பது. 
மந்தரமென்பது ஆகாய மத்தியிலேயே கிடந்து தான் சுழலும்போது தன்சந்நிதிப் பட்ட சர்வாண்டங்களையும் தன்னுடே சுழலச் செய்வதாகிய ஒரு ‘சக்தியை’ அது கலங்காநிலையானதால் மலை என்று சொல்லப்பட்டது.

வாசுகி என்றது அண்டங்களையெல்லாம் தத்தம் நிலையில் நிறுத்துவதாகிய ஒரு சக்தியே. இவ்விரண்டு சக்திகளும் ஒன்று தன்பக்கம் கவர்வதும் மற்றது தனது நிலையே நாடுவதுமாக ஒன்றுக்கொண்டு தன் முண்மாறு கொண்டவை. (Attracting and Repealing forces). 

தேவர், அசுரர் எனக் கூறப்பட்டவை, முறையே ரசோகுண பிரவிருத்தி, தமோகுண பிரவிருத்தி. (good and bad) மேலே கூறப்பட்ட இரு சக்திகளையும், இந்த பிரவிருத்திகளுடன் எழுப்பி ஆட்டிய செய்தியே கடைதல் எனப்பட்டது. கடைதலால் ஏற்பட்ட கொடிய விஷ உஷ்ணமே விஷமெனப்பட்டது.

லஷ்மி என்றது இளமை அழகு முதலியவற்றை தரும் ஆற்றல். உச்சைசிரவம், ஐராவதம் என்பது முறையே குதிரை வடிவும் யானை வடிவும் உடையனவாய் உள்ள நக்ஷத்திர மண்டலத்துக்கு அப்பாலுள்ள இருதாரகாகணம்.

கவுஸ்துபம் என்றது சூரியனை. சூரியனுக்கு அண்டயோனி என்றும், சந்திரனுக்கு அப்ஜன் என்றும் பெயருண்டானது எதனால் என்றால், இந்த திருப்பாற்கடலிடைப் பிறந்தமையை பற்றித்தான்.

ஆக, இவற்றால், இந்த அமிர்தமதன விஷயம் சிருஷ்டி கருமத்தை (The Birth of the Universe) குறித்ததே என்பது உறுதியாக நிச்சயிக்கப்படும்.

இன்னொறு ஆச்சரியம் என்னவென்றால், இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமானது, அதன் காலக்கெடு முடிந்தவுடன் இதேபோல அதன் ஈர்ப்புசக்தியை ஒடுக்கிக் கொண்டு உள்வாங்கி ஒரு புள்ளியில் ஒடுங்கும். பின்னர் ஒரு காலத்தில் அது மீண்டும் மேலே சொன்னபடி உருவாகும்.

 நையாயிகர்’ 
(நையாயிக மதம்) கௌதமணாத மதவாதிகள் ‘நையாயிகர்’ எனப்படுவர். இவர்கள் சித்தும் சடமும் ஆகிய இவ்விரண்டுமே நித்தியபொருள்கள் (Permanent நிரந்தரமானவைகள், அழியாதவைகள்என்பவர்கள்.
இந்த பிரபஞ்சம், ஏக அணுவாகி (one particle), பின் துவியணுவாய் (two particles), பின் திரியணுவாய் (three particles), வடிவமுடைய பொருளாகி, பின்னர் ஒன்றில் ஒடுங்கிவிடும்.

சடமாகிய இவ்வுலகம் பீஜத்தினின்றும் தோற்றுவிக்கப்பட்டது என்றும், தோற்றுவிப்பது சித்துப்பொருள் என்றும், தோன்றும்போது பீஜம் ஏக அணுவாய் (ஒன்றாய்), பின்னர் துவியணுவாய் (இரண்டாய்), பின்னர் திரியணுவாய் (மூன்றாய்), வடிவமுடைய பொருளாகும் என்றும், ஒடுங்கும்போது  அவ்வாறே ஒடுங்கிச் சென்று பீஜமாய் நிற்கும் என்றும், அந்த நிலையில் அது நித்தியமென்றும் (permanent), வடிவுடையதாய் நிற்கும் நிலையில் அது அழியும் தன்மையது என்றும், சித்தின்றி சடம் மட்டும் காரியப்படாதென்றும் (செயல்படதென்றும்), ஆன்மகோடிகள் (உயிர்களில் உள்ள ஆன்மாக்கள்) எல்லாம் ஜகத்காரணமாகிய (இந்த பிரபஞ்சத்துக்காக ஏற்படுத்தப்பட்ட) சித்துப் பொருளின் அம்சங்கள்தான் என்றும், அம்சங்கள் என்பதால் சிற்றறிவும் சிறு தொழிலும் உடையனவென்றும், ஜகத்காரணமாகிய சித்து முழுமுதல் ஆனதால் முற்றறிவும் முற்றுத் தொழிலும் உடையதென்றும், ஆன்மாக்கள் சரீரத்தோடு (உடம்போடு) கூடியிருக்கும்போது அஞ்ஞானம் உடையதாய் இருக்கும் என்றும், இடையறாத முயற்சியினால் ஞானத்தை அடையும்போது அந்த ஆன்மாக்கள் முழுமுதலோடு (பேரான்மா என்கிற இறைநிலையில்) சேர்ந்து பேராநந்தத்தை அநுபவிக்கும் என்றும் கூறுவர் இந்த நேயாயிக சமயத்தை சேர்ந்தவர்கள். இதுதான் அவர்களின் மதத்தின் கொள்கையும்கூட.



Saturday, January 18, 2014

கணாதர் : (an Atomic Scientist)

கணாதர் : (an Atomic Scientist)
உலக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு பல்லாயிரம் வருடங்கள் முன்பே, நமது சாஸ்திரங்களில் அணுவை பிளந்து சோதித்த அறிவுடைய நுண்மதியாளர் இருந்துள்ளனர்.
வைதீக சாஸ்திரங்கள் ஆறில் “வைசேஷி சாஸ்திரத்தை” செய்தவர் கணாதர். இந்த வைசேஷிகம் என்பது நியாய சாஸ்திரம் போல தர்க்க விஷயத்தை கூறுவது.
கணாதருடைய இளமைப் பெயர் ‘காசியபர்’. இவரே, அணுவையும் பிளந்து சோதித்த நுண்மதி உடையவராதலினாலே “கணாதர்” என பெயர் பெற்றாராம்.
கணம்=அணு, அதம்=அழிவு.

இந்திய விஞ்ஞானிகள் இந்த “வைசேஷி” தர்க்க சாஸ்திரத்தை படிக்கலாமே! இந்தியருக்கு எது தடையாய் இருந்தது என்று தெரியவில்லை. இந்தியரை வழிநடத்த ஆளுமையுடன் கூடி ஆள் இல்லை போலும்!