பூகோளம்: (இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கவனத்துக்கு:)
ஆரிய சாஸ்திரம், பூமத்தியிலே சுமேருவும், சமுத்திர மத்தியிலே வடவாமுகமும்
இருக்கின்றன என்று கூறும். இவை முறையே வடதுருவம் என்றும், தென்துருவம் என்றும்
கூறப்படும்.
பூமத்தி என்று ஆரிய சாஸ்திரத்திலே சொல்லப்பட்ட இடம் வடதுருவமுனை.
ஆரிய சாஸ்திரம் பூமியை, மேகலா ரேகையை எல்லையாக வைத்து வடகோளர்த்தம்,
தென்கோளர்த்தம் என இரு கூறாகப் பிரித்து, வடகோளர்த்தம் முழுவதும் நிலம் (land) என்றும்,
தென்கோளர்த்தம் முழுவதும் ஜலம் (நீர்) என்றும் கூறும்.
வடகோளர்த்தம் முழுவதும் நிலமானதால் அதன் மத்திய ஸ்தானம் வடதுருவத்தின் அருகிலுள்ள
சுமேரு. வடகோளர்த்தம் முழுவதையும் ஜம்புதீவென்று சொல்வர். இந்தச் ஜம்பு தீவு என்னும் வடகோளர்த்தம் நவ-வர்ஷங்களாக (9
தேசங்களாக) சொல்வர். அவை:
(1) மேருவை சூழ்ந்திருப்பது
– இளாவிருத வர்ஷம்.
(2) அதற்கு தெற்கேயுள்ளது – ஹரிவர்ஷம்.
(3)அதற்கு தெற்கேயுள்ளது – கிம்புருஷ வர்ஷம்.
(4) அதற்கு தெற்கேயுள்ளது – பாரத வர்ஷம்.
(5) இனி, இளாவிருத வர்ஷத்துக்கு வடக்கே – இரண்மய வர்ஷம்.
(6) அதற்குத் வடக்கே – ரம்மியக வர்ஷம்.
(7) அதற்கு வடக்கே – குரு வர்ஷம்.
(8) இந்த இளாவிருத வர்ஷத்துக்கு வடக்கேயும் தெற்கேயுமுள்ள ஆறு
வர்ஷங்களுக்கும் இடையே, இளாவிருத வர்ஷத்துக்கு கிழக்கில் பத்திராசுவ வர்ஷம்,
(9) மேற்கில்,
கேதுமால வர்ஷம் உள்ளன.
பாரதவர்ஷம், கேதுமாலவர்ஷம், குருவர்ஷம், பத்திராசுவ வர்ஷம், என்னும் நான்கும்
மேகலா ரேகையை அடுத்துள்ள வர்ஷங்கள்.
இந்த நான்கு வர்ஷங்களிலும் மேகலா ரேகையிலே ஒன்றுக்கொன்று சமதூரத்தில் நான்கு
பட்டணங்கள் (Cities) உள்ளன. அவை,
இலங்காபுரி, ரோமாபுரி, சித்தபுரி, யவகோடி என்பன.
வருஷம் என்பது மழைப்பெயல் வேறுபாட்டால் வந்த பெயர். வருடத்தில் மழைபெய்யும் அளவு வேறுபாட்டால் வந்த பெயர்கள்.
இலங்காபுரிக்கு நேர்கீழே அதாவது அதோபாகத்தில் சித்தபுரி இருக்கிறதென்றும்,
இலங்காபுரிக்கும் சித்தபுரிக்கும் இடையே சமதூரத்தில் கிழக்கே யவகோடி
இருக்கிறதென்றும், இலங்காபுரிக்கும் சித்தபுரிக்கும் இடையே சமதூரத்தில் மேற்கே
ரோமாபுரி இருக்கிறதென்றும், ஆரிய சாஸ்திரம் கூறுகிறது.
இலங்காபுரி முதல் தொண்ணூறு பாகையில் கிழக்கே யவகோடி இருக்கிறது. இதிலிருந்து
தொண்ணூறு பாகையில் சித்தபுரியும், இதிலிருந்து தொண்ணூறு பாகையில் ரோமாபுரி
இருக்கிறதாம்.
மற்றைய ஆறு தீவுகளும் மேகலா ரேகைக்குத் தெற்கே சமுத்திரத்தில் ஆங்காங்கு
உள்ளன. அவைகள் தனித்தனியே ஒவ்வொரு சமுத்திரம் சூழ்ந்துள்ளனவாம்.
No comments:
Post a Comment