Thursday, April 10, 2014

தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதிவகையும்.....

மாணிக்கவாசகர்:
 இவர், அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் அமைச்சனாக இருந்தவர்.
பாண்டிய மன்னன் குதிரை வாங்கி வரும்படி கூறிய பணத்தை எல்லாம் சிவம் ஆலயத்தின் திருப்பணிக்குக் கொடுத்துவிட்டு வந்து விட்டார். குதிரைகள் எங்கே என்று மன்னன் கேட்டால் என்ன சொல்வது என்று கலங்கியபோது, சிவன் அவரை காத்து, நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி இவருடன் அனுப்பினார். இதை, 'நரியைப் பரியாக்கி நிகழ்ச்சியாக திருவிளையாடலில் கூறப்பட்டுள்ளது.'

ஆனால் அந்த குதிரைகள் பின்னர் நரியாக மாறியதால் மன்னர் அமைச்சர் மீது கோபம் கொண்டு அவரை தண்டிக்க எத்தனிக்க, சிவன் மறுபடியும் தனது திருவிளையாடல் மூலம் வைகை நதியை பெருக்கெடுத்து கரைகடந்து ஒடச் செய்தார். கரையை பலப்படுத்த மன்னன் மக்களை கேட்டு, அங்கு சிவனே, ஒரு வயதான தாய்க்கு இவளின் பிரதிநிதியாக அவள் கொடுத்த பிட்டுக்கு கூலியாக சிவன் வேலையாளாக சென்று மன்னனிடம் பிரம்படி பெற்று ஒரு திருவிளையாடலும் நடத்தினான்.

மாணிக்கவாசகர் பாண்டியனின் அமைச்சர் பதவியிலிருந்து விலகி சீவன் முத்தராய் சிவனை வேண்டி முக்தி நெறியில் திழைத்தபோது, திருவாசகமும், திருக்கோவையாரும் பாடினார்.

அப்போது இருந்தவந்து புத்தமதத்தினரை வாதில் வென்று சைவ சமயத்தை ஸ்தாபித்தார்.

இவரின் சிறுவயதுப் பெயர் 'வாதவூரார்.இவருக்கு பாண்டிய மன்னனால் சூட்டப்பட்ட பட்டப்பெயர் 'தென்னவன் பிரமராயன்'. இவர் 4000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.

இவர் செய்த திருவாசகத்திலே, பல அறியப்படாத அநேக சரித்தரங்களும், க்ஷேத்திரங்களும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

இவர், புற உலகில் காண்பதை எல்லாம், சிவனுடன் சம்மந்தப்படுத்தியே எடுத்துக் கூறுவார். இவர் திருவண்ணாமலையில் வசித்து வந்தபோது, அங்குள்ள பெண்கள் எல்லாம் விடியற்காலையிலே எழுந்து சிவனின் ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு அடுத்த வீட்டுப் பெண்களை எழுப்பி நீராட அழைப்பார்கள். இந்தச் செயலை 'சிவசக்திகள் சிருஷ்டியின் பொருட்டு ஒருவரையொருவர் எழுப்புவதாக பாவித்துக் கொண்டு 'திருவெம்பாவையைப்' பாடி அருளினார்.

இவரின் 'கல்லையும் கரைக்கும் திவ்விய வாய்ச் சொல்லை சொல் என்று கூறலாகாது'
'தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமாரெமதார் பாசமா
ரென்னமாயாமிவை போகக்
கோமான் பண்டைத் தொண்ட
ரொடு மவன்றன் குறிப்பேகுறிக் கொண்டு
போமாறமைமின் பொய் நீக்கிப் புயங்க்கனாள் வான் பொன்னடிக்கே.'

சிதம்பரத்திலே சிவனுடன் இரண்டறக் கலந்தபோது இவருக்கு வயது 32 மட்டுமே.


தண்டகாரணியம்:

தண்டகாரணியம்:

இக்ஷூவாகு புத்திரன் தண்டன். இவன் இவனின் தந்தைக்கு எதிராக நடந்து வந்தான். எனவே இவனது தந்தை இவனை விந்திய மலைக்கு அப்பால் விரட்டி விட்டான். அவன் அங்கே சுக்கிரனுக்கு சீடன் ஆகினான். ஒருநாள் சுக்கிரனின் மகள் அரசையை இவன் கண்டு அவள் மீது ஆசை கொண்டு அவளை பலவந்தமாக கூடினான். இதை தெரிந்த சுக்கிரன், அவனும் அவன் நகரமும் மண் மழையால் ஒழிக என்று சபித்துவிட்டார். அவ்வாறு அவன் வாழ்ந்த இடம் மண் மாரியால் அழிந்தது. அந்த இடத்திற்குப் பெயர் 'தண்டகாரணியம்' அதுவே தக்ஷிணதேசம்.

மார்கண்டேய புராணம்

மார்கண்டேய புராணம்:

வியாசரின் சிஷ்யர்களுள் ஒரு ரிஷி ஜைமினி. இவரின் வேதம் சாமம். இவர் மார்கண்டேயரை அடைந்து தர்மபக்ஷிகள் மூலமாக உபதேசம் பெற்றவர். இந்த தர்மபக்ஷிகள் கூறிய உபதேசமே மார்கண்டேய புராணம்.

வியாசருடைய சீடர் ஜைமினி பகவான் முன்பிறவியில் பிராமண குலத்தில் பிறந்து ஞானம் பெற்று மிகுந்த சாமர்த்தியசாலியாய் இருந்தவர்.
இவர் இரண்டு பறவைகளை நோக்கி, கீழ்கண்ட கேள்விகளைக் கேட்டார்.

1) 'விஷ்ணு, மானுட உடம்பை எடுத்ததற்கு காரணம் என்ன?' என்றும்

2) 'தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்னும் பஞ்சபாண்டவர் ஐவருக்கும் பொதுவாக திரௌபதி என்னும் ஒருத்தியே மனைவியாக ஆனதற்கு காரணம் என்ன?' என்றும்,

3) பலராமர், மதுமயக்கத்தினால் தாம் செய்துகொண்ட பிரமஹத்தி பாவத்தை போக்கும் பொருட்டு இவர் பிராயசித்தம் செய்து கொண்டது எதற்கு? என்றும்,

4) திரௌபதியுடைய புதல்வர் ஐவருக்கும் காக்கும் தலைவராக இருந்துவந்த கிருஷ்ணன், அர்ச்சுனன் இருவருக்கும் அகாலமரணம் எய்துவதற்கு காரணம் யாது? என்றும்,

நான்கு கேள்விகளைக் கேட்டார்.

இதற்கு விடைசொல்லும் விபரங்களே இந்த மார்கண்டேய புராணம். இது 32,000 கிரந்தங்களை உடையது. இதற்கு மார்கண்டேய புரோக்தம் என்றும் பெயர்.

தர்ம பக்ஷிகள்:
பிங்காஷன், விபோதன், சுபுத்திரன், சுமுகி, என்னும் நான்கு பக்ஷிகள் (பறவைகள்). பூர்வத்தில், விபுலன் என்னும் முனிவருக்கு சுகுருசன், தும்புரன் என்னும் இருவர் புத்திரர் பிறந்தார்கள்.


இந்திரன் பக்ஷி (பறவை) உருவம் எடுத்து சுகுருசனிடம் சென்று நரமாமிசம் கொடு என்று கேட்டான். சுகுருசன் தன் மகன் நால்வரையும் நோக்கி உங்களில் ஒருவன் இவருக்கு இரையாகுக என்றான். அதற்கு ஒருவரும் உடன்படவில்லை. அதனால் கோபம் கொண்டு அந்த நால்வரையும் பக்ஷிகள் (பறவைகள்) ஆகுக என்று சபித்தார். அது காரணமாக பக்ஷிகளாகி ஜைமினி முனிவருக்கு அவரின் சந்தேகத்தை தீர்த்து சாப நிவர்த்தி பெற்றனர். (இது மார்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுள்ளது).


தாடகை

தாடகை

மாரீசன் தாய் தாடகை. இவள் ஒரு ராக்ஷசி. இவள் சுகேதன் என்னும் யக்ஷன் மகள். ஆயிரம் யானை பலம் கொண்டவள். இவள் முன்பிறவியில் அகத்தியரின் ஆசிரமத்தில் சென்று அவரை பயமுறுத்தினாள். அகத்தியர் கோபம் கொண்டு அவளும் அவளின் புத்திரரும்  ராக்ஷசர் ஆவீர்கள் என்று சபித்ததால் இவள் ராக்ஷசியாகப் பிறந்தாள்.

இராமன், விசுவாமித்திரரோடு யாகம் காக்கச் சென்றபோது இந்த தாடகை ராக்ஷசியை கொன்றார்.

Wednesday, April 9, 2014

தக்ஷன்

தக்கன்:
ஒன்பது பிரஜாபிதகளில் ஒருவர். பிரமமானச புத்திரன்களில் ஒருவன். இவன் மனைவி பிரசூதி. விஷ்ணு புராணப்படி, இவனுக்கு புத்திரிகள் 24 பேர். அவர்களுள் சிரத்தை, லக்ஷூமி, திருதி, துஷ்டி, புஷ்டி, லச்சை, வபு, சாந்தி, சித்தி, கீர்த்தி என்னும் 13 பேர் தருமன் மனைவிகள்.

தக்ஷப்பிரஜாபதியைப் பிரமா தனது அங்குஷ்ட விரலில் இருந்து தோற்றுவித்தாரென்று சில புராணங்கள் கூறுகின்றன. அவன் அசிக்கினியை மணம்புரிந்து அசுவினியாதி நட்சத்திர கன்னிகைகளைப் பெற்றுச் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். அவன் சிவனின் அருளால் உமையைத் தன் புத்திரியாகப் பெற்று அவரைச் சிவனுக்கு திருமணம் செய்து கொடுத்தவன்.

சிவன் யாகம் செய்தபோது தன் மகள் உமையையும் சிவனையும் யாகத்துக்கு அழைக்காமல், மற்ற அனைவரையும் அழைத்துள்ளார். அழைக்காமலேயே உமை அங்கு செல்ல, அவரை அவரின் தந்தை தக்ஷன் மதிக்கவில்லை. அவர் அந்த அக்னியில் வீழ்ந்து இறந்தார். அதுகண்ட சிவன் அங்கு சென்று தனது சடையில் ஒரு ரோமத்தை எடுத்து யாகத்தில் எறிந்தார். அதிலிருந்து வீரபத்திரர் தோன்றி, அந்த யாகத்தை அழித்து, தக்ஷன் தலையையும் கொய்தார்.

தக்ஷன் தன் தலையை இழந்த பின்னர் தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த தலைக்குப் பதிலாக ஆட்டுத்தலையை கொடுத்து எழுப்பினார்.

ஈரேழு உலகங்கள்

ஈரேழு உலகங்கள்:

ஏழு மேல் உலகம்;
1. பூலோகம்,
2. புவர்லோகம்
3. சுவர்லோகம்
4. மகாலோகம்
5. சனலோகம்
6. தவலோகம்
7. சத்தியலோகம்.

ஏழு கீழ் உலகம்
1. அதலம்
2. விதலம்
3. சுதலம்
4. தராதலம்
5. இரசாதலம்
6. மகாதலம்
7. பாதலம்.

எட்டு நாகங்கள்

எட்டு நாகங்கள்:

1. வாசுகி
2. அனந்தன்
3. தக்கன்
4. சங்கன்
5. குளிகன்
6. பதுமன்
7. மாகபதுமன்
8. கார்க்கோடகன்

எட்டுச்சித்திகள்:

எட்டுச்சித்திகள்:

1. அணிமா
2. மகிமா
3. கரிமா
4. இலகிமா
5. பிரார்த்தி
6. பிராகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்.

அம்பலத்து அமர சேகரனே!

அம்பலத்து அமர சேகரனே!
தனதன்நல் தோழா, சங்கரா, சூல
பாணியே, தாணுவே, சிவனே,
கனகநல் தூணே, கற்பகக் கொழுந்தே,
கண்கள் மூன்றுடையதோர் கரும்பே,
அனகனே குமர விநாயக கனக
அம்பலத்து அமரசே கரனே,
உனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே. -- (திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா)


"குபேரனது நண்பனே, நன்மை செய்பவனே, சூலத்தை கையிலே ஏந்தியவனே, அழிவற்றவனே. சிவனே, நல்ல பொற்தூண்போல் என்னைத் தாங்கிப் பற்றுக் கோடாயிருப்பவனே, கற்பகத் தளிரே, மூன்று கண்களையுடைய கரும்பு போன்ற இனியவனே, தூய்மையானவனே விநாயகனுக்கும் முருகனுக்கும் தந்தையே பொன்னம்பலத்திலே ஆடும்  தேவர் தலைவ, தொண்டனாகிய நான் உன் திருவடிகள் இரண்டையும் எனது நெஞ்சினுள்ளே இனிமையாக அனுபவிக்குமாறு நீ திருவருள் புரிவாயாக.


தசாவதாரம்

விஷ்ணுவின் 10 அவதாரம்:
1. மீன்
2. ஆமை
3. பன்றி
4. நரசிங்கம்
5. வாமனம்
6. பரசுராமன்
7. தசரதராமன்
8. கண்ணன்
9. பலதேவன்

10. கற்கி

துவர்ப்பு 10 வகைகள்

துவர்ப்பு 10 வகைகள்:
1. நாவல்
2. கடுக்காய்
3. நெல்லிக்காய்
4. தான்றிக்காய்
5. ஆல்
6. அரசு
7. அத்தி
8. இத்தி
9. முத்தக்காசு

10. மாந்தளிர்.

எட்டுவகை உடற்குறைகள்

எட்டு வகை உடல் குறைகள்:

1. குறள்
2. செவிடு
3. மூங்கை
4. கூன்
5. மருள் (ஆணோ, பெண்ணோ என்று அறியமுடியாத உறுப்பு மயக்கம்)
6. குருடு
7. மா (விலங்கு உறுப்பு போன்ற வடிவம்),
8. உறுப்பில்லாப் பிண்டம் (உடல் உறுப்பு குறைந்த உருவம்)
.

ஒன்பது வகை தாளங்கள்

நவதாளம்:
1. சமதாளம்
2. அருமதாளம்
3. அரிதாளம்
4. படிமதாளம்
5. துருவதாளம்
6. சித்திரதாளம்
7. விடதாளம்
8. சயதாளம்
9. நிவிர்ததாளம்.


பெண்கள் கண்ணால் பார்த்தாலே மலருமாம் மாம்பூ

பெண்களால் மலரும் 10 வகை மரங்கள்:

1. மகிழ் = பெண்கள் சுவைத்தால் மலரும்.
2. பாலை = பெண்கள் நண்பு செய்தால் மலரும்.
3. பாதிரி = பெண்கள் நிந்தித்தால் (திட்டினால்) மலரும்.
4. முல்லை = பெண்கள் நகைத்தால் மலரும்.
5. புன்னை = பெண்கள் ஆடினால் மலரும்.
6. குரா = பெண்கள் அணைத்தால் மலரும்.
7. அசோகு = பெண்கள் உதைத்தால் மலரும்.
8. குருக்கத்தி = பெண்கள் பாடினால் மலரும்.
9. மா = பெண்கள் பார்த்தால் மலரும்.
10. சண்பகம் = பெண்களின் நிழல்பட்டால் மலரும்.


உயிரின் 12 வகை வேதனைகள்

உயிர்களின் 12 வகை வேதனை:
1. அனல்
2. இடியேறு
3. குளிர்
4. ஆயுதம்
5. நஞ்சு
6. மருந்து
7. நீர்
8. காற்று
9. பசி
10. தாகம்
11. முனி வறாமை
12. பிணி.
.

புராணங்கள் பதினெட்டு

18 வகை புராணம்:
1. மச்சம்
2. கூர்மம்
3. சைவம்
4. வைஷ்ணவம்
5. வராகம்
6. இலிங்கம்
7. பத்மம்
8. வாமனம்
9. காந்தம்
10. பவிடியம்
11. ஆக்கினேயம்
12. பிரமம்
13. பிரமகைவர்த்தம்
14. நாரதீயம்
15. மார்க்கண்டேயம்
16. பாகவதம்
17. காருடம்
18. பிரமாண்டம்


உடம்பின் 18 வகை குற்றம்

உடம்பின் 18 வகை குற்றம்:
1. பசி
2. அதிசயம்
3. நினைத்தல்
4. பயம்
5. கையறவு
6. மூப்பு
7. வியர்த்தல்
8. நீர்வேட்டல்
9. வேண்டல்
10. வெகுளி
11. மதம்
12. கேதம்
13. நோய்
14. பிறப்பு
15. இறப்பு
16. உவகை
17. உறக்கம்

18. இன்பம்.


அக்குரோணி (போர்ப் படை பலம்)

பன்னிருவகை தானை: (12 வகை தானைப் படை):
1. யானை ஒன்று, தேர் ஒன்று, குதிரை மூன்று, பதாதி ஐந்து - இவைகள் கொண்டது ஒரு 'பத்தி'.
2. பத்தி மூன்று கொண்டது 'சேனாமுகம்'.
3. சேனாமுகம் மூன்று கொண்டது ஒரு 'குல்மம்'
4. குல்மம் மூன்று கொண்டது 'கணம்'.
5. கணம் மூன்று கொண்டது 'வாகினி'.
6. வாகினி மூன்று கொண்டது 'பிருதனை'.
7. பிருதனை மூன்று கொண்டது 'சமூ'.
8. சமூ மூன்று கொண்டது 'பிரளயம்'.
9. பிரளயம் மூன்று கொண்டது 'சமுத்திரம்'.
10. சமுத்திரம் மூன்று கொண்டது 'சங்கு'.
11. சங்கு மூன்று கொண்டது 'அநீகம்'.

12. அநீகம் மூன்று கொண்டது 'அக்குரோணி'


அரசருக்குரிய 21 வகை சின்னம்

அரசருக்குரிய 21 வகை சின்னம்:
1. முடி
2. குடை
3. கவரி
4. தோட்டி
5. முரசு
6. சக்கரம்
7. யானை
8. கொடி
9. மதில்
10. தோரணம்,
11. பூரணகும்பம்
12. மாலை
13. சங்கு
14. கடல்
15. மகரம்
16. ஆமை
17. இணைக்கயல்
18. சிங்கம்
19. தீபம்
20. இடபம் (ரிஷபம்)
21. ஆசனம்.



Thiruppulani Beach (East Coast Sea)