Showing posts with label தக்ஷன். Show all posts
Showing posts with label தக்ஷன். Show all posts

Saturday, May 24, 2014

வீரபத்திரர்


சிவனின் குமாரர்களில் ஒருவர் இந்த வீரபத்திரர்.
சிவனையும், உமாதேவியாரையும், தக்ஷன் அவமதித்ததன் காரணமாக சிவன் கோபித்துக் கொண்டு தனது நெற்றிக் கண்ணை விழிக்க, அதிலிருந்து தோன்றியவர்தான் இந்த வீரபத்திரர். தோன்றியவுடனே இந்த வீரபத்திரர், தக்ஷனைக் கொன்றார். உடனே தேவர்கள் ஒன்றுசேர்ந்து சிவனை கெஞ்சி அவர்கள் செய்த பிழையை மன்னிக்கும்படி கேட்க, சிவனும் மனமிரங்கி, தக்ஷனுக்கு உயிர் கொடுத்தார். ஆனால் தக்ஷனின் தலையை ஒரு ஆட்டுத்தலையாக ஆக்கி விட்டார்.
இந்த வீரபத்திரனுக்கு ஆயிரம் தலைகளும், இரண்டாயிரம் கைகளும், மூவாயிரம் கண்களும் உண்டு.

Wednesday, April 9, 2014

தக்ஷன்

தக்கன்:
ஒன்பது பிரஜாபிதகளில் ஒருவர். பிரமமானச புத்திரன்களில் ஒருவன். இவன் மனைவி பிரசூதி. விஷ்ணு புராணப்படி, இவனுக்கு புத்திரிகள் 24 பேர். அவர்களுள் சிரத்தை, லக்ஷூமி, திருதி, துஷ்டி, புஷ்டி, லச்சை, வபு, சாந்தி, சித்தி, கீர்த்தி என்னும் 13 பேர் தருமன் மனைவிகள்.

தக்ஷப்பிரஜாபதியைப் பிரமா தனது அங்குஷ்ட விரலில் இருந்து தோற்றுவித்தாரென்று சில புராணங்கள் கூறுகின்றன. அவன் அசிக்கினியை மணம்புரிந்து அசுவினியாதி நட்சத்திர கன்னிகைகளைப் பெற்றுச் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். அவன் சிவனின் அருளால் உமையைத் தன் புத்திரியாகப் பெற்று அவரைச் சிவனுக்கு திருமணம் செய்து கொடுத்தவன்.

சிவன் யாகம் செய்தபோது தன் மகள் உமையையும் சிவனையும் யாகத்துக்கு அழைக்காமல், மற்ற அனைவரையும் அழைத்துள்ளார். அழைக்காமலேயே உமை அங்கு செல்ல, அவரை அவரின் தந்தை தக்ஷன் மதிக்கவில்லை. அவர் அந்த அக்னியில் வீழ்ந்து இறந்தார். அதுகண்ட சிவன் அங்கு சென்று தனது சடையில் ஒரு ரோமத்தை எடுத்து யாகத்தில் எறிந்தார். அதிலிருந்து வீரபத்திரர் தோன்றி, அந்த யாகத்தை அழித்து, தக்ஷன் தலையையும் கொய்தார்.

தக்ஷன் தன் தலையை இழந்த பின்னர் தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த தலைக்குப் பதிலாக ஆட்டுத்தலையை கொடுத்து எழுப்பினார்.