Showing posts with label மூதுரை. Show all posts
Showing posts with label மூதுரை. Show all posts

Friday, March 28, 2014

ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்
கல் மேல் எழுத்துப்போல் காணுமே -அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தாருக்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்.

(நல்லவருக்கு செய்த உதவி எப்போதும் நிலைகொண்டு இருக்கும்; ஈரம் இல்லாதவருக்கு (இரக்கம் இல்லாதவர்)  செய்த உதவியானது நீரில் எழுதிய எழுத்துக்குச் சமம் (அப்போதே அழிந்துவிடும்).


வாக்குண்டாம்

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
 நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார் வார் தமக்கு.

வாக்கு உண்டாம்.
நல்ல மனம் உண்டாம்.
மாமலராள் = தாமரையில் இருக்கும் திருமகள்.
நோக்கு (நல்ல அருள் பார்வை) உண்டாம் .
மேனி (உடல்) நுடங்காது (மெலியாது).
துப்பார் திருமேனி = பவளம் போன்ற சிவந்த உடல்.
தும்பிக்கையான் = விநாயகர்
பாதம் தப்பாமல் (தவறாது) சார்வார் தமக்கு(வணங்குபவருக்கு).