Wednesday, September 15, 2021

மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் 1963

மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் 1963

The Madras Minor Inams (Abolition and Conversion into Ryotwari) Act, 1963

மேஜர் இனாம் & மைனர் இனாம்:

மன்னர்கள் காலத்தில், அந்த மன்னர்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கு இனாமாக நிலங்கள் கொடுக்கப்பட்டன. இதை ஒரு பட்டயம் மூலம் (செப்புத் தகட்டில் எழுதிக் கொடுப்பது) கொடுத்தார்கள். இதில், ஒரு கிராமம் முழுவதையுமோ அல்லது பல கிராமங்களையோ இனாமாக கொடுத்தார்கள். அப்படி பல கிராமங்களை இனாமாகக் கொடுத்தால் அதை மேஜர் இனாம் (Major Inam) என்று சொல்வர். மேஜர் இனாமை பொதுப் பெயராக இனாம் என்று சொல்வர். ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பகுதி நிலங்களை மட்டும் இனாமாக கொடுத்தால் அதை மைனர் இனாம் (Minor Inam) என்பர்.

மைனர் இனாம் ஒழிப்புச் சட்டம் 1963

இப்படி இனாமாகப் பெற்ற நிலங்களின் உரிமையாளர்களை “இனாம்தார்” என்பர். இந்த இனாம்தார்கள், தங்களின் நிலங்களை குடியானவரிடம் பயிர் செய்ய விட்டு விட்டனர். குடியானவரிடமிருந்து ஒரு பகுதி வருமானத்தை பெற்றுக் கொண்டு வந்தனர். இது காலங்காலமாக நடந்து வந்தது. 

மேல்வாரம் & குடிவாரம் உரிமை:

இப்படிப்பட்ட இனாம் சொத்துக்களில் (நிலங்களில்) இனாம்தாரருக்கு நிலத்தின் உரிமை இருக்கும். இதை மேல்வாரம் உரிமை என்பர். அந்த மண்ணின் மேல் உள்ள உரிமையை மேல்வாரம் என்பர். 

அதேபோல, அந்த இனாம் நிலங்களை பயிரிட்டு வரும் குடியானவருக்கு, பயிர் செய்யும் உரிமை மட்டும் இருக்கும். நிலத்தில் எந்த உரிமையும் இருக்காது. அந்த பயிர் செய்யும் உரிமையை “குடிவாரம்” என்பர். 

மேல் வாரம் & குடி வாரம் என இருவாரம் உரிமைகள்:

 இனாம் சொத்துக்களுக்கும், (அதேபோல ஜமீன் சொத்துக்களுக்கும்) இருவகையான உரிமையான மேல்வாரம், குடிவாரம் என இரு உரிமைகள் இருக்கும். இதில் மேல்வாரம் உரிமை, நிலத்தின் உரிமையாளருக்கு இருக்கும். குடிவாரம் உரிமை, அந்த நிலத்தை பயிர் செய்பவருக்கு இருக்கும். பயிர் செய்பவரை அந்த நிலத்தை விட்டு காலி செய்ய முடியாது. அதன் மகசூல் வருமானத்தை மட்டுமே பெற மண்ணின் உரிமையாளருக்கு உண்டு. 

மேல்வாரம் உரிமையை, நிலத்தின் சொந்தக்காரர், தனியே விற்க முடியும், அடமானம் வைக்க முடியும். பயிர் செய்யும் குடியானவரின் சம்மதம் தேவையில்லை. அதேபோல, பயிர் செய்யும் குடியானவர், தனது குடிவார உரிமையை தனியே விற்க முடியும், அடமானம் வைக்க முடியும். நிலத்தின் சொந்தக்காரரின் அனுமதி தேவையில்லை.

இனாம் ஒழிப்பு:

 மேல்வாரம் & குடிவாரமண் என இரு வார உரிமைகளுடன், இரண்டு உரிமையாளர்கள் ஒரு நிலத்துக்கு இருந்து வந்தனர். இதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. அதிக விளைசல் வருமானம் கேட்பது, குடியானவருக்கு நிலத்தில் எந்த உரிமையும் இல்லாமல் இருப்பது போன்றவை பிரச்சனைகளுக்கு காரணங்கள்.


எனவே, அரசு, 1963-ல் இந்த இனாம் ஒழிப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, நிலத்தை பயிர் செய்யும் குடியானவருக்கே நிலத்தை முழு உரிமையுடன் சொந்தமாக்கி விடுவது என்றும், மேல்வார உரிமையாளருக்கு ஒரு நஷ்ட ஈட்டை கொடுத்து விடுவது என்றும் முடிவானது. 


**



முடிவுற்ற பத்திரங்கள் மற்றும் முடிவுறாத பத்திரங்கள்

முடிவுற்ற பத்திரங்கள் மற்றும் முடிவுறாத பத்திரங்கள்

Executed Contract & Executory Contract

சொத்தின் கிரயப் பத்திரங்களைப் பதிவுக்கு கொடுக்கும்போது, சொத்தை வாங்கியவர், அந்த கிரயப் பத்திரத்தை பதிவாளரிடம் பதிவுக்கு கொடுப்பதே சிறந்த முறை. ஆனாலும் விற்றவரும் அந்த கிரயப் பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கலாம். அது தவறு இல்லை. 

பத்திரங்கள் எழுதி, அதில் கையெழுத்துச் செய்து, சாட்சிகள் கையெழுத்தும் முடிந்தவுடன், அந்த பத்திரம் “ஒரு முடிவுற்ற பத்திரம்” ஆகி விடும். அதாவது அப்படியான பத்திரங்களை Executed Contract என்று பதிவுச் சட்டம் சொல்கிறது. இனி, அதில் இருபார்ட்டிகளும் ஒருவருக்கு ஒருவர் செய்து கொள்ள வேண்டிய வேலை ஏதும் இருக்காது. அப்படியான பத்திரங்களை முடிவுற்ற பத்திரம் என்பர்.

ஆனால், ஒரு கிரய அக்ரிமெண்ட் பத்திரத்தை அதேபோல் இருபார்ட்டிகளும் கையெழுத்துப் போட்டு, சாட்சிகளின் கையெழுத்தும் பெற்றுக் கொண்டாலும், அது “இன்னும் முடிவுறாத பத்திரம்” என்ற வகையிலேயே இருக்கும். அதில் இருபார்ட்டிகளும், அல்லது அதில் உள்ள ஒரு பார்ட்டியாவது, இன்னும் ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டிய நிலை இருக்கும். இதை “முடிவுறாத பத்திரம்” அல்லது Executory Contract என்பர். 

சாட்சிகள் எதற்கு அவசியம் அல்லது எதற்கு அவசியம் இல்லை;
 
முடிவுற்ற பத்திரங்களுக்கு (Executed Contract) குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகளின் கையெழுத்து அவசியம் என்று சட்டம் சொல்கிறது. இதில் கிரயப் பத்திரம், அடமானப் பத்திரம், செட்டில்மெண்ட்/தானப் பத்திரம் போன்றவை வரும்.

ஆனால், முடிவுறாத பத்திரங்களுக்கு (Executory Contract) சாட்சிகள் அவசியம் இல்லை எனச் சட்டம் சொல்கிறது. ஆனாலும் நடைமுறையில் நாம் அந்த வகைப் பத்திரங்களுக்கும் சாட்சிகளின் கையெழுத்தைப் பெற்றுக் கொள்கிறோம். ஆனாலும், அது சட்டப்படி அவசியம் இல்லை. அப்படி சாட்சிகள் இல்லாமல் அந்த பத்திரங்களை எழுதி இருந்தாலும், அவைகளும் சட்டப்படி செல்லும்.
அதற்கு உதாரணமாக - கிரய அக்ரிமெண்டுகள், வாடகை அக்ரிமெண்டுகள், ஹையர் பர்சேஸ் அக்ரிமெண்டுகள் (வண்டி வாகனங்களை மாதத் தவணைகளுக்கு வாங்கும் அக்ரிமெண்டுகள்), இவைகளுக்கு சாட்சிகள் தேவையில்லை அல்லது அவசியமில்லை.

அதாவது - 
(1)கிரயப் பத்திரத்துக்கு சா்ட்சிகள் அவசியம். ஏனென்றால் அது முடிவுற்ற பத்திரம். (Executed Contract). அதற்கு பின்னர் அதில் செய்ய வேண்டிய வேலை ஏதும் இல்லை. பணம் கொடுத்து முடிந்தது. அல்லது பின்னர் கொடுப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சொத்தின் உரிமையை, சுவாதீனத்தை ஒப்படைக்கப்பட்டு விட்டது. அல்லது பின்னர் ஒப்படைப்பதாக சொல்லியதை ஏற்றுக் கொண்டு விட்டது. இனி இதில் வேறு வேலை இல்லை. 

(2) சொத்தை வாங்குவதற்கு முன்னர் ஏற்படுத்திக் கொள்ளும் கிரய அக்ரிமெண்டுகளுக்கு சாட்சிகள் அவசியம் இல்லை. ஏனென்றால், அது ஒரு முடிவுறதாத பத்திரம் அல்லது இன்னும் அதில் செய்ய வேண்டிய வேலை இரண்டு பார்ட்டிகளுக்கும் இருக்கிறது என்று பொருள். இன்னும் ஒரு பார்ட்டி பணம் கொடுக்க வேண்டும். மற்றொரு பார்ட்டி சொத்தின் உரிமையை, சுவாதீனத்தை மாற்றிக் கொடுக்க வேண்டும். அடிப்படை வேலையே பாக்கி இருக்கிறது. 

ஏன் சாட்சிகள் அவசியம்?

ஏன் முடிவுற்ற பத்திரங்களுக்கு சாட்சிகள் அவசியம் என்றும், முடிவுறாத பத்திரங்களுக்கு சாட்சிகள் அவசியம் இல்லை என்றும் சொல்கிறார்கள். முடிவுற்ற பத்திரங்களை நிரூபிக்க சாட்சிகள் தேவை. 

முடிவுறாத பத்திரங்களை நிரூபிக்க அவசியம் ஏற்படாது. அதில் செய்ய வேண்டிய வேலைகளை மட்டுமே ஒருவர் மற்றவருக்கு செய்து கொடுக்க வேண்டும். இரண்டு பேருக்கு (பார்ட்டிகளுக்குமே) ஒருவருக்கு ஒருவர் செய்து கொள்ளும் வேலையை நிறுத்தி வைத்துள்ளார்கள். 

புரோ நோட்டுக்கு சாட்சிகள் அவசியமா?

புரோநோட் எழுதிக் கொடுக்கும் போது, அதற்கு சாட்சி அவசியம் இல்லை என்றே சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் நாம் அதற்கும் சாட்சிகளின் கையெழுத்தை வாங்கிக் கொள்கிறோம். ஒரு புரோ நோட் என்பது “ஒரு முடிவுறாத பத்திரம்”. எனவே அதற்கு சாட்சி அவசியம் இல்லை. 

உயிலுக்கு சாட்சிகள் அவசியமா?

உயில் பத்திரங்களுக்கு கண்டிப்பாக குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகள் அவசியம் என்று இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925-ன் பிரிவு 63-ல் சொல்லியுள்ளது. அப்படி இரண்டு சாட்சிகள் இல்லாத உயில் செல்லாது. அதிலும், அந்த இரண்டு சாட்சிகளில் யாராவது ஒரு சாட்சியாவது, உயிலை எழுதி வைத்தவர் போட்ட கையெழுத்தை நேரில் பார்த்து இருக்க வேண்டும். மற்றொரு சாட்சி அப்படி நேரில் பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும், இரண்டு சாட்சிகளுமே, உயில் எழுதியவர் அந்த உயிலில் கையெழுத்துச் செய்யும் போது, அதை நேரில் பார்த்து இருந்தால் நல்லது. ஏனென்றால், உயிலை எழுதி வைத்தவர் இறந்த பின்னரே அந்த உயிலுக்கு “உயிர்” வரும். அப்போது, அந்த உயிலை அவர்தான் எழுதி வைத்தார் என்றும், அதை தான் நேரில் பார்த்ததாகவும், அப்போது, அவர் நல்ல மனநிலையில், யார் தூண்டுதலும் இல்லாமல், தன்னிச்சையாகவே அதை எழுதினார் என்றும் சொல்ல வேண்டும். எனவே உயிலுக்கு அல்லது அந்த உயில் உண்மையான உயில் என்பதற்கு அந்த இரண்டு சாட்சிகள் தான் உயிர்நாடி. 

அந்த உயிலின் இரண்டு சாட்சிகளில், யாராவது ஒரு சாட்சி, தான் அந்த உயில் எழுதும்போது, அல்லது உயிலை எழுதியவர் கையெழுத்துச் செய்யும் போது, நேரில் இருந்ததாகச் சொன்னால் போதும்.

ஒருவேளை, அந்த இரண்டு சாட்சிகளுமே, உயிலை எழுதி வைத்தவர் இறப்பதற்கு முன்னரே இறந்து விட்டால், அல்லது உயிலை எழுதி வைத்தவர் இறந்த பின்னர், இரண்டு சாட்சிகளும் இறந்து விட்டால், அந்த உயிலை எப்படி நிரூபிப்பது என்ற குழப்பம் வந்துவிடும். அல்லது இந்த சாட்சிகள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாமல் போனாலும் சிக்கல்தான். 

அப்படி சாட்சிகள் கிடைக்காமல் போனால், அந்த சாட்சிகளின் கையெழுத்தைத் தெரிந்தவர் யாராவது இருந்தால், அவரைக் கொண்டு, இது அந்த சாட்சியின் கையெழுத்துத்தான் என்றும், உயிலை எழுதியவரின் கையெழுத்தையும் அதேபோல, வேறு நபரைக் கொண்டு, அது அந்த உயில் எழுதியவரின் கையெழுத்துத்தான் என்றும் நிரூபித்தால் போதும் என்று இந்திய சாட்சியச் சட்டம் 1872-ன் பிரிவு 69 சொல்கிறது.

**





பத்திரத்தை யார் பதிவாளரிடம் கொடுக்க வேண்டும்

பத்திரத்தை யார் பதிவாளரிடம் கொடுக்க வேண்டும்

ஒரு பத்திரத்தைப் பதிவுக்குக் கொடுக்கும்போது, யார் அதை பத்திரப் பதிவாளரிடம் கொடுக்க வேண்டும் என்று இந்திய பதிவுச் சட்டம் 1908 பிரிவு 32-ல் சொல்லப்பட்டுள்ளது.

1) ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுத்தவர்களில் யாராவது, அதை பதிவுக்கு கொடுக்கலாம்.

2) ஒரு பத்திரத்தின் மூலம் உரிமை பெறுபவர் (அதாவது கிரயப் பத்திரமாக இருந்தால், அந்த சொத்தை வாங்குபவர்களில் யாராவது ஒருவர்) அந்த பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கலாம்.

3) எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர், இவர்களின் பொறுப்பாளர் அல்லது பவர் ஏஜெண்டு, அல்லது கார்டியன், அந்த பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கலாம்.

4) இந்த பத்திரம் ஒரு கோர்ட் டிகிரியாக இருந்தால், அந்த டிகிரி மூலம் உரிமை பெறும் நபர் (குறிப்பாக வாதி அல்லது பிரதிவாதி அல்லது அவர்களின் பவர் ஏஜெண்ட்) அந்த கோர்ட் டிகிரியை, பதிவுக்கு கொடுக்கலாம்.

5) அந்த பத்திரத்தை எழுதிக் கொடுப்பவர் ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், அல்லது ஐகோர்ட் கோர்ட் அதிகாரியாக இருந்தால், அல்லது சிவில் கோர்ட் நீதிபதியாக இருந்தால், அவர் அந்த பத்திரத்தை நேரில் சென்று பதிவாளரிடம் பதிவுக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக, “அவர் ஒரு அரசு அதிகாரி என்றும், அவர் நேரில் வரத் தேவையில்லை” என்று ஒரு கடிதம் கொடுத்தால் போதுமானது. இதை இந்தியப் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 88-ல் சொல்லியுள்ளது.

6) அரசுக்கு ஒரு சொத்தை எழுதிக் கொடுத்தாலும், அரசு அதிகாரி நேரில் சென்று அந்த பத்திரத்தை பதிவுக்கு கொடுக்க தேவையில்லை. அப்போதும், அவர் நேரில் வருவதற்கு விலக்கு அளிக்கப்பட்டவர் என்று கடிதம் கொடுத்தால் போதுமானது. 

7) இவ்வாறு விலக்கு அளிக்கப்பட்ட அரசு அதிகாரி கடிதம் கொடுக்கும் போது, அதில் சந்தேகம் எழுந்தால், பதிவாளர், அதை அரசின் செயலாளருக்கு அனுப்பி, அது சரியான அரசு அதிகாரிதான் எழுதிக் கொடுத்தாரா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 

**

திருத்தல் பத்திர வழக்கு

திருத்தல் பத்திர வழக்கு 

1989-ல் ஒரு மனையை வாங்குகிறார். அந்த கிரயப் பத்திரத்தில் நீள-அகல அளவுகளில் தவறுகள் உள்ளன. 2011-ல் அந்த தவறை திருத்தல் பத்திரம் மூலம் வாங்கியவர் மட்டும் திருத்தல் பத்திரம் எழுதிக் கொண்டு போகிறார்.

 அதை பதிவாளர் பதிவு செய்ய மறுக்கிறார். காரணம் - அந்த கிரயப் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவரும் சேர்ந்தே திருத்தல் செய்ய முடியும் என்கிறார். அவர் இல்லை என்றால் அவரின் வாரிசுகள் அதை செய்ய வேண்டும் என்கிறார். இவ்வாறு ஐ.ஜி சர்குலர் Circular No.2024/C1/1999 உள்ளதாக பதிவாளர் சொல்லி மறுத்து விடுகிறார்.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரிட் வழக்கை, அந்த சொத்தை வாங்கியவர் போடுகிறார். அரசு வக்கீல் கீழ்கண்ட் முன் வழக்கின் தீர்ப்பை காண்பிக்கிறார். 

M/s. Latif Estate Line India Ltd vs Mrs Hadeeja Ammal and others, (2011)-1 LW 673. 

அதில், ஒரு கிரயம் என்பது இரண்டு பார்ட்டிகளுக்குள் ஏற்படுவது. அதை ஒருவர் மட்டுமே, மாற்றி எழுதிக் கொள்ள முடியாது. 

இந்திய ஒப்பந்த சட்டம் பிரிவு 62-ல் "ஒப்பந்தத்தில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதை இருபார்ட்டிகளுமே செய்து கொள்ள வேண்டும்" என்று தெளிவு படுத்தி உள்ளது. 

“A Sale is essentially an executed contract between two parties on mutually agreed conditions. 

Question is as to whether such contract can be unilaterally rescinded, particularly, in a case of sale deed. 

In this context, we may refer to Sec.62 of the Indian Contract Act 1872 which provides that contract which need not be performed. 

By that provision, any novation, rescission and alteration of a contract can be made only bilaterally.

 A deed of cancellation will amount to rescission of contract and if the issue in question is viewed from the application of Sec.62 of the Indian Contract Act, any rescission must be only bilaterally.”
**

Sunday, September 12, 2021

லே-அவுட் (Layout) என்றால் என்ன?

Layout is defined:

லே-அவுட் என்றால் என்ன?

அரசாணை நிலை எண் 78, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை நாள் 4.5.2017-ல் "லே-அவுட்" என்றால் என்ன என்று விளக்கி உள்ளது. அதன்படி - 

(1) சிஎம்டிஏ பகுதியில் உள்ள நிலத்தில், அந்த இடத்தை எட்டு மனைகளுக்கு மேல் பிரித்து இருந்தால் அது "லே-அவுட்" ஆகும். எனவே அதற்கு அப்ரூவல் கண்டிப்பாக வேண்டும்.

(2) சிஎம்டிஏ பகுதியில் இல்லாத ஒரு நிலத்தில், அவ்வாறு மனைகளாக பிரிக்கும் போது, அதற்கு "புதிய தெரு, ரோடு, பாதை" வசதியை புதிதாக ஏற்படுத்தி இருந்தால், அது "லே-அவுட்" ஆகும். எனவே அதற்கு அப்ரூவல் கண்டிப்பாக வேண்டும். 

Thursday, September 9, 2021

விருத்திரா அசுரன் - சிவனின் முதல் திருவிளையாடல்

 விருத்திரா அசுரன்


விருத்திர அசுரன் - விருத்திரன் என்றால் போர்வை போல மூடிக்கொண்டிருப்பவன் என்று பொருளாம். இந்த விருத்திரனுக்கும், இந்திரனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். இந்திரன் நீரைக் கொடுப்பவன். விருத்திரன் அந்த நீரைக் குடித்து விடுபவன் என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளதாம். இந்திரன் வானில் இருந்து நீரை மழையாகக் கொடுப்பான். விருத்திரன் பூமியில் ஏரிமலைக் குழம்புகளாக இருந்து, அந்த நீரைக் குடித்து விடுவான். 


த்ரிசிரஸ் -  துவஷ்டா என்பவரின் மூத்த மகன் பெயர் த்ரிசிரஸ். த்ரிசிரஸ் என்றால் மூன்று தலை உடையவன் என்ற பொருள். துவஷ்டா, இந்த த்ரிசிரஸ் என்ற மூத்த மகனை, இந்திரனைக் கொல்வதற்காகவே படைத்திருக்கிறார். ஆனால் அவனை இந்திரன் கொன்று விடுகிறான். 


விருத்திரன் என்னும் விருத்திர அசுரன் -  அதற்கு பழி வாங்குவதற்காக, துவஷ்டா, தனது இரண்டாவது மகனை யாகத்தின் மூலம் படைக்கிறார். அவன் பெயர் விருத்திரன் என்னும் விருத்திர அசுரன். விருத்திரன் என்றால், பூமியை மூடிக் கொண்ருப்பன் என்று பொருளாம். வானத்தில் இருத்து அனுப்பும் எல்லா நீரையும் உறிஞ்சிக் குடித்து விடும் இயல்புடைய பூமி நிலப்பரப்பைக் கொண்டவன். இதை எரிமலை குழம்பு என்றும் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 


துவஷ்டா - துவஷ்டா என்பது வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வம். சித்திரை நட்சத்திரத்துக்கு அதிபதி இந்த துவஷ்டா என்று ஜோதிடம் சொல்கிறது. ஜோதிடத்தில் இந்த சித்திரை நட்சத்திரம் இருக்கும் கன்னி ராசி என்று சொல்லும் ராசி மண்டலத்துக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. நாம் பார்க்கும் இந்த சூரிய மண்டலம் இந்த கன்னி ராசி மண்டலத்தில் இருந்து தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அதாவது, இந்த பூமியானது சூரியனைச் சுற்றி வருவதால், இந்த பூமி, சூரியனில் இருந்து பிரிந்து வந்த பகுதி என்பர் ஆராய்ச்சியாளர்கள். அதன்படி பார்த்தால், இந்த சூரிய மண்டலம் கன்னி ராசி மண்டலத்தைச் சுற்றி வருவதால், அது கன்னி ராசி மண்டலத்தில் இருந்தே தோன்றி இருக்க வேண்டும் என்பது ஆராய்சியாளர்கள் முடிவு. இந்த கன்னி ராசி மண்டலமானது விர்கோ கிளஸ்டர் (Virgo Cluster) என்ற பகுதியில் அண்டவெளியில் உள்ளது. அது உர்ஸா மேஜர் (Ursa Major) என்ற அண்டவெளியில் உள்ளது. 


சித்திரை நட்சத்திரம் - ஆக, சித்திரை நட்சத்திரத்துக்கு அதிபதி இந்த துவஷ்டா என்றால், இந்த பூமியில் உள்ள நாமும் அதன் பொருள்களும், சித்திரை நட்சத்திரப் பகுதியில் ஒரு பகுதி என்று கொள்ள வேண்டும். இப்படிச் சித்திரை நட்சத்திரத்தில் இருந்து இந்த சூரிய மண்டலமும் அதில் உள்ள இந்த பூமியும் தோன்றியதால், நாம் சித்திரையை முதல் மாதமாக கொள்கிறோம். துவஷ்டாவின் எதிரியான இந்திரன் இந்த பூமியை அழிக்காமல் இருக்க அவனுக்கு (இந்திரனுக்கு) இந்திர விழா எடுக்கிறோம் என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுவது குறிப்படத்தக்கது. 


துவஷ்டாவின் இரண்டு மகன்கள் - இந்த துவஷ்டாவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் த்ரிசிரஸ். இவனை இந்திரன் கொன்று விட்டான். இளைய மகன் விருத்திர அசுரன். தந்தை துவஷ்டா, தன் மூத்த மகனைக் கொன்ற இந்திரனைப் பழி வாங்கவே, இந்த இரண்டாவது மகனான விருத்திர அசுரனைப் படைக்கிறார். இவன் பூமியில் இருக்கிறான். (இவனை எரிமலை என்று உருவகம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்). 


உயிர்களின் படைப்பு - இந்திரன் பெரும் மழையைப் பொழிவித்து, வெள்ளத்தால் பூமியை மூடி, இந்த விருத்திர அசுரனையும் கொன்று விடுகிறான். அதனால், உலகத்து உயிர்கள் எல்லாம் மடிந்து விட்டன. எனவே இந்திரன், படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு பயந்து, வெள்ள நீரில் உள்ள தாமரையில் ஒளிந்து கொள்கிறான். இந்த தாமரையில் லட்சுமி இருக்கிறாள் என்பர். இந்த லட்சுமி, சுக்கிரன் என்ற கிரகத்துக்கு அதிதேவதை. இந்த சுக்கிரன் புலன் நுகர்ச்சிகளுக்கு உரியவன். சுக்கிரன் கிரகத்தின் கடவுளான லட்சுமியின் அருள் இருந்தால், இந்திரிய (ஐம்புலன் நுகர்ச்சிக்கான) சுகங்கள் எல்லாம் கிடைக்கும் என்கிறது ஜோதிடம். எனவே இந்திரன் ஒளிந்து கொண்ட தாமரையில், பிரம்மா வந்து, மீண்டும் உயிர்களைப் படைக்கிறார் என்று ஒரு வகையில் பொருத்தமாக இந்த விளக்கத்தை ஆராய்ச்சியார்கள் கூறுகிறார்கள். 


சிவனின் முதல் திருவிளையாடல் - துவஷ்டா, தன் மூத்தமகன் த்ரிசிரஸ் என்பவனை கொன்ற இந்திரனைப் பழிவாங்கும் பொருட்டு, தனது இளைய மகனான விருத்திர அசுரனைப் படைக்கிறார். அவனையும் இந்திரன் கொன்று விடுகிறான். அவன் பிரம்மனின் கோபத்துக்கு ஆளாகிறார். அதாவது இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. பிராமணனைக் கொன்றால் பிரம்மஹத்தி தோஷம். துஷ்டா பிராமணனாக இருக்க வேண்டும். அப்படி இந்திரன் ஒளிந்து அலைந்து திரிந்த போது, மதுரை என்னும் கடம்பவனத்துக்கு வருகிறான். இங்கு அவனுக்கு சிவன் அருள் புரிகிறார். எனவே சிவனை வணங்குவதற்காக, அவன் பூக்களைத் தேடித் திரிந்த போது, சிவனே அவனுக்கு ஒரு பொற்றாமரை குளத்தை உருவாக்கி அங்கு தாமரை மலர்களைக் கொடுக்கிறார். இதுவே சிவனின் முதல் திருவிளையாடல் என்பர்.


விருத்திர அசுரன் & இந்திரன் போர் - இந்திரனுக்கும், துவஷ்டாவின் இளைய மகன் விருத்திர அசுரனுக்கும் போர் நடக்கிறது. இந்திரனால், விருத்தி அசுரனை வெல்ல முடியவில்லை. இந்திரன் தோற்று, விஷ்ணுவிடம் வந்து சரண்டைகிறான். விஷ்ணு, "பாற்கடலில் அடியில் உள்ள முனிவரின் முதுகு எலும்பை வைத்து, சண்டையிட்டால், விருத்திர அசரனைத் தோற்கடிக்கலாம்" என்று ஒரு வழியைச் சொல்கிறார். 


இந்திரனும், அவ்வாறு அந்த முனிவரை அணுகி அவரின் முதுகு எலும்பை கேட்கிறான். அவரும் அதற்கு உடன்பட்டு இறப்பதற்கு சம்மதிக்கிறார். அப்போது, இந்த உடல் நமக்கு எப்போதும் பயன்படாது என்ற கருத்தில் ஒரு பாடலாகச் சொல்லப்படுகிறது. நாம் இறந்து விட்டால், இந்த உடலை, நாயும், நரியும், தனக்குச் சொந்தம் எனச் சொல்வர். பெற்றவர்களான தந்தையும், தாயும், இந்த உடல் தனக்குச் சொந்தம் எனச் சொல்வர். எமனும், பேயும் தனக்குச் சொந்தம் எனச் சொல்லும்.  இப்படி மனம் போனவர்கள் எல்லாம் இந்த உடலைச் சொந்தம் கொண்டாடுகிறார்களே, உண்மையில் இந்த உடல் யாருக்குச் சொந்தம்? என்று கேட்கிறார். எனவே, இந்த உடலில் நன்றாக வாழும்போது, யாருக்காவது உபயோகமாக இருந்துவிட்டுப் போகிறேன் என்று கூறி, இந்திரனுக்காக இறக்கத் துணிகிறார். 


"நாய் நமதென, நரி நமதென, பிதா-தாய் நமதென, நமன் நமதென, பிணி-பேய் நமதென, மனமதிக்கும் பெற்றிபோலாய் நமதெனப்படும் யாக்கை யாரதே."


வச்சிராயுதம் - இந்த முனிவர் இறந்தவுடன், அவரின் முதுகெலும்பை எடுத்து, விஸ்வ கர்மாவிடம் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு வச்சிராயுதம் செய்து, இதைக் கொண்டே இந்த விருத்திர அசுரனிடம் சண்டையிட்டு அவனை இந்திரன் கொன்றான் என்கிறது திருவிளையாடல்.

 

**


திருக்கோவையார்

 திருக்கோவையார் - 

இந்த நூல் பாடல்களை மாணிக்கவாசகர் இயற்றி உள்ளார். கடவுள் பக்தியில் ஆனந்த பரவச நிலையில் நின்று, ஆன்மாவையும் (உயிர்களில் உள்ள ஆன்மாவையும்), இறை நிலையில் உள்ள பதியையும் (இறைவனையும்), நாயகன்-நாயகி பாவனையில் நினைத்து, பாடிய பாடல்கள் கொண்டது. 

இந்த பாடல்கள் நானூறு கட்டளைக் கலித்துறைகளை உடையது. இந்தப் பாடல்கள், சிற்றின்பத்தை வைத்து, பேரின்ப பொருளைக் கூறி உள்ளது. அதை அகப்பொருள் பகுதியாக வைத்து உரை செய்தவர் நச்சினிக்கினியர். இவரையே பேராசிரியர் என்பர். இவரின் உரைக்கு பேராசிரியர் உரை என்பர். 

நாயகன், நாயகியைக் கண்டு வியப்பது போல ஒரு பாடல். 

தாமரை, நெய்தல், குமிழ், கோங்கு, காந்தள், ஆகிய ஐந்து மலர்களால் தொடுக்கப்பட்ட அழகிய தெய்வ மாலை ஒன்று இளம் பெண்ணாக உருவம் பெற்று, அன்ன நடை பயின்று, மன்மதனின் வெற்றிக் கொடிபோல, ஒளிர்கின்றதே, என்று வியக்கிறான். 

பாடல்: "திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர் தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்கு பைங்காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கியன நடைவாய்ந்து உருவளர் காமன் தன் வென்றிக் கொடி போன்று ஒளர்கின்றதே."


திருக்கோளிலி (திருக்குவளை)

திருக்கோளிலி (திருக்குவளை)  

திருக்கோளிலியில் கோயில் (திருக்குவளை) கொண்டுள்ள சிவன் பெயர் கோளிலிநாதர். அம்மை பெயர் - வண்டமர் பூங்குழல் அம்மை. 

கோள்களுக்கு வந்த தோஷம், இங்கு வந்து சிவனை வழிபட்டதால், நீங்கியதால் இப்பெயர் ஏற்பட்டதாம். 

சிவனின் திருமுடியை கண்டேன் என்று பொய் கூறிய பிரம்மதேவனுக்கு பிடித்த தோஷம் நீங்க, பிரம்மன் இங்கு வந்து, மணலால் சிவலிங்கம் பிடித்து வழிபட்டு, தோஷம் நீக்கிக் கொண்டான் என்பர். எனவே இங்குள்ள சிவனை பிரம்மபுரீஸ்வரர் என்பர். 

இங்குள்ள சிவலிங்கம் மணலால் உள்ளதால், அதற்கு குவளை மலர் சாத்துவர். எனவே இந்த சிவனை திருக்கோளிலிநாதர், திருக்குவளைநாதர் என்பர். 

இங்குள்ள சிவனின் நடனத்தை பிரமர நடனம் என்பர். அதாவது வண்டு பறப்பது போல அந்த நடனம் இருக்குமாம். அந்த வண்டில் அமர்ந்த அம்மைதான், வண்டமர் பூங்குழல் அம்மை. 

சுந்தரமூர்த்தி (சுந்தரர்), அடியார்களுக்கு உணவு வழங்க, நிலக்கிழாரிடம் நெல் பெற்றுக் கொண்டபோது, அதை தூக்கிச் செல்ல ஆள் கிடைக்காமல் வருத்தப்பட்டு, "ஆளில்லை எம்பெருமான்..." என்று பாடி சிவனிடம் உதவி பெற்ற தலம். 

மகாவிஷ்ணு, பிரம்மா, அகத்தியர், எல்லா நவக்கிரகங்கள், முசுகுந்த சக்கரவர்த்தி, பஞ்சபாண்டவர்கள், இவர்கள் வந்து வழிபட்ட தலம் இது. 



பஞ்ச கிருத்தியம்

 பஞ்ச கிருத்தியம் 

சிதம்பரத்தில், சிவன், ஆகாய லிங்க மூர்த்தியாக இருப்பார். இறைவனின் ஐந்து தொழில்களாக பஞ்ச கிருத்தியத்தின் பொருட்டு, சிவன் இங்கு ஆனந்த தாண்டவ நிலையில் இருப்பார். 

பஞ்ச கிருத்தியம் - இறைவனின் ஐந்து தொழில்கள். ஆன்மாக்களின் குறைகளை ஒழித்து அதை வீடுபேறு அடையச் செய்வதற்காக, இறைவன் இந்த பஞ்ச கீர்த்தியத்தை நடத்திக் கொண்டு இருக்கிறான். பஞ்ச கீர்த்தியம் என்னும் ஐந்து தொழில்கள் - சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகம். (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழில். 

பஞ்ச பூதங்களான நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் ஆகிய ஐந்திலும் இறைவனே இருக்கிறான் என்பது தத்துவம். இந்த ஐந்தையும் அடையாளப்படுத்தும் விதமாக ஐந்து சிவ தலங்கள் உள்ளன. உலகில் உள்ள எல்லா உயிர்களும் இந்த ஐந்து பூதங்களின் சேர்க்கையே. அல்லது இதில் பலவற்றின் சேர்க்கையே. 

நிலத்துக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர். (ஏகாம்பரேஸ்வரர்-ஏலவார்குழலி). 

நெருப்புக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் (அண்ணமலையார்-உண்ணாமுலையாள்). 

நீருக்கு திருவாணைக்காவில் (திருச்சியில்) உள்ள ஜம்புகேசுவரர் (ஜம்புகேசுவரர்- அகிலாண்டஸ்வரி). 

ஆகாயத்துக்கு சிதம்பரத்தில் உள்ள நடராஜர் (கனகசபைநாதர்- உமையாம்பிகை என்னும் சிவகாமசுந்தரி). 

காற்றுக்கு காளத்தியில் (காளகஸ்தியில்) உள்ள காளத்தீசுவரர் (காளத்தீசுவரர்- ஞானபிரசுனாம்பிகை.


குற்றாலம்

 குற்றாலம் 

அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் போது, குற்றாலம் வழியே செல்கிறார். அங்குள்ள விஷ்ணு கோயிலுக்குப் போகிறார். அது விஷ்ணு கோயில் என்று அகத்தியருக்கு தெரியவில்லை. அகத்தியர் சிவபக்தர். எனவே அங்குள்ள வைஷ்ணவர்கள் அகத்தியரை விரட்டி அடிக்கின்றனர். 

பின்னர், அகத்தியர் விஷ்ணு பக்தர் போல மாறுவேடத்தில் வந்து, அங்குள்ள விஷ்ணு சிலையை குழைத்து அதை சிவனாக்கி வழிபட்டார் என்று சொல்வர். விஷ்ணு பக்தர்களின் கர்வத்தை அகத்தியர் இவ்வாறு அகற்றினார் என்பர். 


கோகர்ணம்

 கோகர்ணம் 

இராவணன், கைலாசம் சென்று சிவனிடமிருந்து ஒரு சிவலிங்கம் பெற்று வந்தான். அதை எங்கும் கீழே வைக்கக் கூடாது. வைத்தால் அங்கேயே நிலை பெற்று விடுவார் அந்த சிவலிங்கம். 

வழியில் ஒரு நதிக்கரையில் நீராட நினைத்தான் இராவணன். அப்போது, அங்கு ஒரு பிராமணனாக வந்த விநாயகர் கையில் கொடுத்து விட்டு ஆற்றில் நீராடச் சென்றான் இராவணன். விநாயகர், அந்த சிவலிங்கத்தை தரையில் வைத்து விட்டார். 

இராவணன் வந்து அதை எடுக்க முனைந்த போது, அது பசுவின் காதுபோல (கோ-வின் கர்ணம் போல) வேர் விட்டு தரையில் புதைந்து விட்டது. எனவே முயற்சி தோற்று, இராவணன் அந்த சிவலிங்கத்தை அங்கேயே விட்டு விட்டுச் சென்றான். எனவே அந்த இடத்துக்கு கோகர்ணம் என்ற பெயர் ஏற்பட்டது. இது துளுவ நாட்டில் உள்ளது. (தற்போதைய கர்நாடகாவில் ஒரு பகுதி).


திருக்கோணமலை

 திருக்கோணமலை.

ஈழ நாட்டில் உள்ளது. சிவன் தலம். தட்சிண கைலாசம் (தென் கைலாசம்) என்று மூன்று இடங்கள் உள்ளன. அதில் இந்த திருக்கோணமலையும் ஒன்று. 

வில்லிபுத்தூராரின் பாரதத்திலே ஒரு உவமை சொல்வார். ஈழ நாட்டையும் பாண்டி நாட்டையும் தராசின் இரு தட்டுகள் ஆக்கி, அதில், கோண மலையையும், பொதிகை மலையையும் வைத்து, சீர் தூக்கி நிறுப்பதற்காக, பிரம்மதேவன், சேது பந்தனத்தை துலாக்கோல் ஆக்கினான் என்று வர்ணிக்கிறார். 


Wednesday, July 21, 2021

005 கம்பராமாயணம்

 நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன், என்னை!

வைத வைவின் மரா மரம் ஏழ் துளை எய்த, 

எய்தவற்கு, எய்திய மாக் கதை செய்த,

செய்தவன் சொல் நின்ற தேயத்தே. 5 


(கம்பராமாயணம்)


பெரியவர்கள் வைது (திட்டி) சாபமிட்டால், அது உடனே பலித்தும் விடும். 


அதைப்போலவே, அம்பை எய்த உடனேயே, ஏழு மரா மரங்களையும் ஒரே நேரத்தில் ஏழு துளைகளை இட்டுக் கொண்டு செல்லும்படி அம்பு எய்தவனின் (இராமனின்) பெருமைமிகு கதையை, நொய்யிலும் நொய்யான (மிகச் சிறியதிலும் சிறியதான) சொற்களைக் கொண்டு இந்த நூலை இயற்றுகிறேன் (கம்பன்), அதை என்னவென்று சொல்வது!


**


004கம்பராமாயணம்

 ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று,

ஒரு பூசை (பூனை) முற்றவும் நக்குபு புக்கு என,

ஆசை பற்றி அறையல் உற்றேன். 

மற்று, இக் காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ. 4

(கம்பராமாயணம்)


ஒரு பூனை, தன் ஆசையால், மிகுந்த இரைச்சல் ஓசையுடன் கூடிய பாற்கடலைப் பார்த்து, இதை நான் முழுவதும் நக்கியே குடித்து விடுவேன் என நினைத்ததாம். 


அதுபோல, நானும் (கம்பன்), எந்த குற்றமும் இல்லாத, வெற்றி வேந்தனான, இராமனின் கதையை சொல்ல ஆசைப் பட்டேன்.

**


003கம்பராமாயணம்

 ஆதி, அந்தம், அரியென யாவையும் ஓதினார்,

அலகு இல்லன, உள்ளன, வேதம் என்பன,

மெய்ந் நெறி நன்மையன்,

பாதம் அல்லது பற்றிலர், பற்று இலார். 3

(கம்பராமாயணம்)


முதலும், முடிவும், அரிதானவையும் அனைத்தையும் கற்றனர். வேதம் என்பது அளவுகள் உடையதும், இல்லாததும் ஆகும். பற்று இல்லை என்று சொல்பவரும் கூட, உண்மை நெறி நன்மை தருபவனின் பாதத்தை (இறைவனை) பற்றிக் கொள்வர்.


**


002கம்பராமாயணம்

 சிற் குணத்தார் தெரிவு அரு நல் நிலை,

எற்கு உணர்த்த அரிது, 

எண்ணிய மூன்றனுள், முற்குணத்தவரே முதலோர்,

அவர் நற்குணக் கடல் ஆடுதல் நன்று அரோ. 2


சிறந்த குணத்தவரின் நல்ல தன்மையை தெரிந்து கொள்வது எப்படி என்று என்னால் உணர்த்துவது கடினம். மூன்று குணங்களான, சத்துவம், ராஜசம், தாமசம், இவற்றில் முதலில் சொன்ன சத்துவ குணத்தவரே சிறந்தவர். அவருடன் கூடி அவரின் நற்குணங்கள் என்னும் கடலில் திளைத்து ஆடுவது நல்லது அன்றோ.


சத்துவம் - சாத்வீக குணம், புலன்களை அடக்கிய நிலை (வெண்மை). 

ராஜசம் - ரஜோ குணம், விருப்பம் கருதிய செயல்களை மட்டும் செய்வது (சிவப்பு).

தாமசம் - தமோ குணம், எல்லா கெட்ட குணங்களும் இருப்பது (கருப்பு).


**


001கம்பராமாயணம்

 உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,

நிலை பெறுத்தலும், நீக்கலும், 

நீங்கலா அலகு விளையாட்டு உடையார், 

அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே. 1

(கம்பராமாயணம்)


எல்லா உலகங்களையும் தானே படைத்தவரும், அதை இயக்கித் தொடரச் செய்தவரும், அதை நீக்கி அழித்தவரும் என, இந்த அளவு இல்லாத செயலான விளையாட்டைச் செய்தவரான அவரே தலைவர் (இறைவன்]. அவருக்கே நாங்களும் சரண் ஆகிறோம்.


**


Friday, July 2, 2021

The Doctrine of Laan

 The doctrine of laan (curse):

 

Muhammad Yusuf, Khan Bahadur, in his Muhammadan Law, Volume II, Edition 1898, page 352 et seq, gives a full account of "laan" and the accuracy of the account there given has not been seriously questioned. Briefly put it is that when a Muhammadan makes an allegation of misconduct against his wife and the wife denies the same, both parties can go to the Kasi. The husband, in the presence of the Kazi, four times over repeats his allegation of misconduct before the Kazi, strengthens it by an oath, that oath being accompanied by the use of the word "laan" or curse of God. The wife gives testimony also four times over and accompanies her testimony by the use of. the word ghazab." If either of the persons refuse to make laan the Kazi is to imprison that person who refuses until he or she makes the laan. If both husband and wife have made their respective oaths, etc. the Kazi can effect separation between them.

 

The doctrine of "laan" has no farther place in Anglo-Muhammadan Law or that it should be considered obsolete. Mr. Mohammad Yusuf, Khan Bahadur, mentions it as still prevalent. Sir R. K. Wilson in his Anglo-Muhammadan Law, 4th Edition, 1912, paragraph 76, says: "The fact of a husband having (whether truly or falsely) charged his wife with adultery, will (probably) entitle her to claim a judicial divorce, without prejudice to any proceedings for defamation which she may be advised to institute, and independently of the result of any such proceedings."

 

Baillie in his Muhammadan Law after describing the form of "laan" goes on to say at page 338: "When both parties have taken the laan the Judge is to separate them." The second plea that no suit for dissolution is maintainable until the husband has been given the option of retraction of the accusation of his wife's adultery has not been supported.

 

The law on the subject is thus stated in Shama Charan Sircar's Muhammadan Law, Tagore Law Lectures for 1873, at page 406: "if a Husband charges his wife with adultery...the charge is investigated by the Kazi, who, upon proof, thereof, issues a decree of separation between the husband and the wife and thus their marriage is dissolved, The separation so effected is an irreversible divorce."

 

Mr. Ameer Ali lays down the rule in the following terms in Volume II of his well known work on Muhammadan Law, page 575, 3rd Edition: "When a false accusation (of adultery) is preferred against a woman, and the husband is unable to establish the charge, the woman is entitled to obtain a divorce from the Court." The same view is propounded in Sir Rowland Wilsons' Anglo-Muhammadan Law and in the Tagore Law Lectures by Khan Bahadur Muhammad Yusuf.

 

The proceeding known as laan or imprecation (curse) is only a procedure which either the wife or the husband could adopt before a Kazi or Judge. The reason for it is stated by Mr. Ameer Ali in the following terms: "Under the Musalman Law, a charge of adultery preferred by a husband against his wife can only be established by the direct testimony of four witnesses to the fact. From the nature of the offence, however, the oases in which ocular and direct evidence is available are extremely rare. In order to obviate the evils which would necessarily result from a denial of all redress to the injured husband, in those numerous instances, where he is morally convinced of the guilt of his wife, but has no direct testimony to establish it, or when he alone is cognisant of the fact, the law has prescribed the proceeding by laan."

**

 

Monday, May 24, 2021

Ramnad Zamin Case in 1882

 Ramnad Zamin Case in 1882

 

The Ramnad Zamindar and another vs Doraisami 

 

Madras High Court (1882) ILR 7 Mad 341

Bench: Justice C.A.Turner and Justice Kt. Kindersley

 

Sivasami Thevar claimed the zamindari of Ramnad. But he released his right over the Ramand Zamindari on a compromise. As per the compromise, certain villages and a monthly allowance of Rs.200 were agreed to be paid to Sivasami Thevar. Hence Sivasami Thevar released his claim over the said zamindari.

 

Later, Sivasami Thevar died on 1st July 1861 leaving his widow Kolathai Nachiar. But one Doraisami claimed that his mother Ramamani Ammal was also another wife to Sivasami Thevar and through him Doraisami and one daughter were born.

 

The first wife Kolanthai Nachiar claimed that she alone was the wife of Sivasami Thevar. Hence the second wife Ramamani Ammal filed a suit in 1864 at District Court of Madura (Madurai) to establish her right as a widow and Doraisami as her son and a daughter (since deceased) through Sivasami Thevar.

 

The first wife Kolanthai Nachiar claimed that the second wife Ramamani Ammal was a dance girl and not the legally wedded wife of Sivasami Thevar. 

 

Meanwhile, the Ramnad Zamindar stopped the allowance given to Sivasami Thevar. The Ramnad Zamindar claimed that the monthly allowance paid to Sivasami Thevar was the personal allowance paid to Sivasami Thevar and therefore on his death, the legal heirs were not entitled to it. But the Court overruled the Zamindar’s stand and decreed the suit in favour of first wife Kolanthai Nachiar.

 

Whether the second wife Ramamani Ammal and her son Doraisami were the legal heirs of the deceased Sivasmai Thevar was a question to be decided.

 

First wife Kolanthai Naichiar claimed that the second wife Ramamani Ammal was a dancing girl attached to Thiruchuli temple and if at all any marriage with Sivasami Thevar it would not be a valid one.

 

Number of witnesses were examined. They adduced that a marriage having been celebrated between Ramamani Ammal and Sivasami Thevar. On the death of Sivasami Thevar, his mother treated the said Ramamani Ammal as a lawful wife of Sivasami Thevar. In the presence of Sivasami Thever’s mother, Ramamani Ammal Thali (sacred thread) was removed and replaced by a gold chain, as is usual in the case of widows who have been married.

 

Hence the Madras High Court allowed the claim of Ramamani Ammal and her son Doraisami as wife and son of the deceased Sivasami Thevar and entitled to the estate of the deceased Sivasami Thevar.

**

 

 

 

 

 

இராமநாதபுரம் ஜமீன் வழக்கு

 இராமநாதபுரம் ஜமீன் வழக்கு

The Ramnad Zamindar and another vs Doraisami (1882) ILR 7 Mad 341 Madras High Court

Bench: Justice C.A.Turner and Justice Kt. Kindersley

 

இராமநாதபுரம் ஜமீன் உரிமை தனக்கும் இருப்பதாக கூறி, சிவசாமி தேவர் என்பவர் ஜமின்தாரைக் கேட்கிறார். அவர்களுக்குள் ஒரு உடன்பாடு எற்படுகிறது. அதன்படி ஜமீன் உரிமையை சிவசாமி விட்டுக் கொடுத்து விடுகிறார். அதற்க ஈடாக, அவருக்கு மாதம் ரூ.200 மாத அலவன்ஸ் மறும் சில கிராமங்களின் நிர்வாகங்களும் சிவசாமிக்கு கொடுக்கப்படுகிறது. 

 

பின்னர், சிவசாமி தேவர் இறந்து விடுகிறார். அவருக்கு முதல் மனைவி குழந்தை நாச்சியார். இரண்டாவது மனைவி ரமாமணி அம்மாள். இந்த ரமாமணிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் பெயர் துரைச்சாமி தேவர். மகளைத் திருமணம் செய்து கொடுத்து அவளுக்கு குழந்தைகள் உள்ளன. அவள் இறந்து விடுகிறாள்.

 

ஜமீனில் மூலம், இறந்த சிவசாமித் தேவருக்கு கிடைத்து வந்த மாத அலவன்ஸ் ரூ.200ஐ இராமநாதபுரம் ஜமின்தார் நிறுத்தி விட்டார். அது சிவசாமித் தேவருக்கு தனிபட்ட முறையில் கொடுக்கபட்ட அலவன்ஸ் என்றும், அவர் இறந்த பின்னர் அவரின் வாரிசுகளுக்கு அந்த பணத்தை தொடரந்து பெற்றுக் கொள்ள எந்த உரிமை இல்லை என்றும் ஜமின்தார் சொல்லிவிட்டார். ஆனாலும் மூத்த மனைவி குழந்தை நாச்சியார் வழக்குப் போட்டு அதை பெறும் உரிமையைப் கோர்ட் மூலம் பெற்று விட்டார். அந்த வழக்கு லண்டன் பிரைவி கவுன்சில் வரை சென்றது.

 

இதற்கிடையில், இறந்த சிவசாமித் தேவர் சொத்திலும், ஜமீன் மூலம் கிடைக்கும் மாத அலவன்ஸ் ரூ.200 இவைகளில் இரண்டாவது மனைவியும் அவர் மகன் துரைசாமியும் பங்கு இருப்பதாக வழக்குப் போடுகிறார்கள்.

 

ஆனால் முதல் மனைவி குழந்தை நாச்சியார்,  இறந்த சிவசாமித் தேவருக்கு தான் மட்டுமே மனைவி என்றும், ரமாமணி அவரின் மனைவி இல்லை என்றும், ரமாமணி திருச்சுழி கோயிலில் நாட்டியக்காரியாக இருந்தவர் என்றும், அவளை திருமணம் செய்யவில்லை என்றும், அப்படி ஏதேனும் திருமணம் செய்திருந்தாலும் அவள் நாட்டியக்காரி என்பதால் அந்த திருமணம் செல்லாது என்றும், எனவே அவருக்கு பிறந்த மகனான துரைச்சாமிக்கும் எந்த பங்கும் இல்லை என்றும் மறுத்து விட்டார்.

 

வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. பல சாட்சிகள் விசாரிக்கப்படுகிறார்கள். அதில், ரமாமணியை சிவசாமித் தேவர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார் என்றும், அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர் என்றும் சாட்சி சொன்னார்கள். மேலும், சிவசாமித் தேவர் இறந்தபோது, ரமாமணியும் வந்திருந்தார் என்றும், அவரும் மனைவியாக எல்லா சடங்குகளும் செய்தார் என்றும், இறந்த சிவசாமித் தேவரின் தாயார் முன்னிலையில், ரமாமணியின் கழுத்தில் இருந்த தாலியை இந்து முறைப்படி அறுத்துவிட்டு, அவளுக்கு ஒரு தங்க சங்கிலியை மாமியார் போட்டார் என்றும் சாட்சிகள் சொல்கிறார்கள். மேலும், இரண்டாம் மனைவி ரமாமணியின் மகளை, முதல் மனைவி குழந்தை நாச்சியார் சொந்தக்காரருக்கே திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள் என்றும் சாட்சிகள் சொல்கிறார்கள்.

 

சாட்சியங்களை வைத்து கோர்ட்டு, ரமாமணியும் ஒரு மனைவிதான் என்றும், அவளுக்கு பிறந்த மகன் துரைசாமி, இறந்த சிவசாமித் தேவரின் மகன் தான் என்றும், எனவே ஜமீன்தார் கொடுக்கும் மாத அலவன்ஸ் பணத்திலும், சிவசாமித் தேவரின் சொத்துக்களிலும் இரண்டாம் மனைவிக்கும், அவளின் மகனுக்கும் பங்கு உண்டு என்று சென்னை ஐகோர்ட் 1881-ல் இந்த தீர்ப்பை கூறியுள்ளது.

**