கோகர்ணம்
இராவணன், கைலாசம் சென்று சிவனிடமிருந்து ஒரு சிவலிங்கம் பெற்று வந்தான். அதை எங்கும் கீழே வைக்கக் கூடாது. வைத்தால் அங்கேயே நிலை பெற்று விடுவார் அந்த சிவலிங்கம்.
வழியில் ஒரு நதிக்கரையில் நீராட நினைத்தான் இராவணன். அப்போது, அங்கு ஒரு பிராமணனாக வந்த விநாயகர் கையில் கொடுத்து விட்டு ஆற்றில் நீராடச் சென்றான் இராவணன். விநாயகர், அந்த சிவலிங்கத்தை தரையில் வைத்து விட்டார்.
இராவணன் வந்து அதை எடுக்க முனைந்த போது, அது பசுவின் காதுபோல (கோ-வின் கர்ணம் போல) வேர் விட்டு தரையில் புதைந்து விட்டது. எனவே முயற்சி தோற்று, இராவணன் அந்த சிவலிங்கத்தை அங்கேயே விட்டு விட்டுச் சென்றான். எனவே அந்த இடத்துக்கு கோகர்ணம் என்ற பெயர் ஏற்பட்டது. இது துளுவ நாட்டில் உள்ளது. (தற்போதைய கர்நாடகாவில் ஒரு பகுதி).
No comments:
Post a Comment