Showing posts with label King Richard II. Show all posts
Showing posts with label King Richard II. Show all posts

Friday, April 15, 2016

Prison and World


Shakespeare's King Richard II (Act V. Sc.V. 1-9)

 I have been studying how I may compare
This prison where I live into to the world;
And for because the world is populous
And here is not a creature but myself,
I cannot do it; yet I'll hammer it out,
My brain I'll prove the female to my soul,
My soul the father; and these two beget
A generation of still-breeding thoughts
And these same thoughts people this little world.

ஷேக்ஸ்பியரின் "கிங் ரிச்சர்டு-2" என்ற நாடகக் கதையில் வரும் வார்த்தைகள் இது;

இதன் பொருளை, அவ்வளவு சீக்கிரத்தில் புரிந்து கொள்ள முடியாதாம்;

இதன் தத்துவார்த்த கருத்தை புரிந்து கொள்ள வேண்டுமானல், "ஜீவாத்மா அல்லது பிண்டம்" "பரமாத்மா அல்லது அண்டம்" என்ற இரண்டு ஆத்மாக்களை அல்லது இயல்புகளை நினைவில் கொள்ள வேண்டுமாம்; மனிதனிடம் இருப்பது ஜீவாத்மா; அது இறைவனை அடையும் போது, இறைவனிடம் இருப்பது பரமாத்மா;


இங்கு ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில் 'Prison' என்று சொல்லப்பட்டுள்ளதை 'ஜீவாத்மா' அல்லது ‘பிண்டம்’ என்று கருதிக் கொள்ள வேண்டுமாம்; "World" என்று சொல்லப்பட்டுள்ளதை "பரமாத்மா" அல்லது ‘அண்டம்’ என்று கருதிக் கொள்ள வேண்டுமாம்; மற்ற வார்த்தைகளை இயல்பான பொருளிலேயே எடுத்துக் கொள்ள வேண்டுமாம்;
_______...________