Showing posts with label Belva Lockwood. Show all posts
Showing posts with label Belva Lockwood. Show all posts

Sunday, December 18, 2016

இதோபதேசம்—9

இதோபதேசம்—9
பெல்வா லாக்உட்  Belva Lockwood
இவரைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது; இவர் 1830ல் பிறந்த பெண்மணி; அமெரிக்க சுப்ரீம் கோர்ட் வரலாற்றிலேயே முதன் முதலாக அங்கு வக்கீல் ஆன பெண்மணி; மிகுந்த போராட்டத்துக்குப் பின்னரே அது சாத்தியம் ஆகி உள்ளது;
திருமணமாகி ஒரு குழந்தை பிறந்தவுடன் கணவர் இறந்து விட்டார்; அப்போது இவருக்கு  வயது 22; பள்ளிக்கூட டீச்சர் ஆகிறார்; காலேஜ் படிக்கிறார்; பின்னர் சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க மனு போடுகிறார்; ஆனால் இவரின் மனு நிராகரிக்கப்படுகிறது; காரணம் என்னவென்றால், “நீங்கள் ஒரு பெண்: இங்கு ஆண்கள் மட்டுமே படிக்கிறார்கள்; உங்களை அனுமதித்தால், இங்குள்ள ஆண்களின் மனது படிப்பில் கவனம் செல்லாது; எனவே அனுமதி மறுக்கப்படுகிறது” என்று கடிதம் வருகிறது; ஆனால் சளைக்காமல் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு விடாமல் கடிதம் எழுதுகிறார்; வேறு வழியின்றி இவரை சட்டம் படிக்க அனுமதிக்கின்றனர்;
ஒருவழியாக சட்டம் படித்து, பெண்வக்கீல் ஆகி, முதன் முதலில் 9 நீதிபதிகள் கொண்ட அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய முதல் பெண்மணி இவரே தான்!
பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்காதுதான்; நாம் தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்; சரிநிகர் சமானமும் கிடைக்காதுதான்; நாம் தான் அதை அதிகாரத்துடன் நிலைநிறுத்த வேண்டும்” என்கிறார்;
“WE shall never have equal rights until we take them, nor equal respect until we command it.”
**