Showing posts with label பில்லியன். Show all posts
Showing posts with label பில்லியன். Show all posts

Friday, October 3, 2014

மில்லியனும் அதியுகமும்


தமிழில்:
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்துலட்சம், கோடி, பத்துக்கோடி, நூறுகோடி...

அமெரிக்காவில்:
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், நூறாயிரம், மில்லியன் (ஆயிரம் ஆயிரம்), பத்துமில்லியன், நூறுமில்லியன், பில்லியன் (ஆயிரம் மில்லியன்)...

மில்லியன் = ஒன்றுக்கு அடுத்து 6 சைபர்கள். (இந்தியாவில் இது 10 லட்சம்).
பில்லியன் = ஒன்றுக்கு அடுத்து 9 சைபர்கள். (இந்தியாவில் இது 100 கோடி).
(1,000,000,000 பில்லியன் = 100,00,00,000 நூறுகோடி)

நூறுகோடி (100கோடி) கொண்டதை தமிழில் ‘கணகம்’ என்கிறோம்.
10கணகம் (1000 கோடி) கொண்டதை தமிழில் ‘கற்பம்’ என்கிறோம்.
10கற்பம் (10,000கோடி) கொண்டதை தமிழில் ‘நிகற்பம்’ என்கிறோம்.
10நிகற்பம் (லட்சம்கோடி) கொண்டதை தமிழில் ‘சங்கம்’ என்கிறோம்.
10சங்கம் (10லட்சம்கோடி) கொண்டதை தமிழில் ‘சமுத்திரம்’ என்கிறோம்.

பத்துலட்சம் (அதியுகம்) = மில்லியன்
நூறுகோடி (கணகம்) = பில்லியன்
லட்சம்கோடி (சங்கம்) = டிரில்லியன் (1,000,000,000,000) 12 சைபர்கள்.

(Milli) மில்லி என்பது இத்தாலி வார்த்தையாம். ஆயிரம் என்று பெயர்.
மில்லியும் மில்லியும் சேர்ந்தால் மில்லியன். (1000 x1000) =அதியுகம்.
மில்லி மில்லியன் சேர்ந்தால் ‘பில்லி’ (1000 x1000 x1000) =கணகம்.
மில்லி பில்லியன் சேர்ந்தால் ‘ட்ரில்லி’ (1000 x1000 x1000 x1000)=சங்கம்.