Showing posts with label சிந்து தேச அரசன். Show all posts
Showing posts with label சிந்து தேச அரசன். Show all posts

Saturday, March 29, 2014

துற்பலை


துரியோதனன் தங்கை 'துற்பலை'. இவளைத் திருமணம் செய்து கொண்டவன் சைந்தவன். ஜயத்திரதன் என்றும் பெயர். இவன் சிந்து தேசத்து அரசன். இவனின் தந்தை விருத்தக்ஷத்திரன்.

பாண்டவர்கள் வனவாசத்தில் காட்டில் இருந்தபோது, இந்த சைந்தவன் திரௌபதியை பலவந்தமாக கவர்ந்து போனான். உடனே பாண்டவர்கள் அவனை தொடர்ந்து விரட்டிச் சென்று இடையிலேயே தடுத்து திரௌபதியை மீட்டு வந்தனர்.

பின்னர், பாரத யுத்தத்தில் இந்த சைந்தவனை அர்ச்சுனன் கொன்றான்.