Friday, October 30, 2020

நாராயணன்

 நாராயணன்

விஷ்ணுவின் பெயர். நாரம் என்றால் நீர் என்று பொருள். நீரில் தோன்றியதால் நாராயணன் என்று பெயர். 

இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் இருந்த பிரபஞ்சமானது முழுவதும் அப்பு உருவமாக (முழுதும் நீராக) மகா பிரளயம் வந்து சூழ்ந்து விட்டது. அவ்வாறு பிரபஞ்சம் முழுவதும் நீரால் ஒடுங்கி விட்டது (குறைந்து ஒற்றைப் புள்ளியாகி விட்டது). அந்த நீரில் இருந்து, விஷ்ணு இந்த இப்போதுள்ள பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தார் என்பதால், அந்த விஷ்ணுவை நாராயணன் என்று அழைக்கிறார்கள்.

நாரம் என்பது இந்த பிரபஞ்சத்தின் மூலப்பகுதி. அது சுற்றி ஆடும் தன்மை கொண்டது. அது எப்படி என்றால், சர்ப்பம் (பாம்பு) வடிவினை ஒத்து இருக்கும். அதன் சக்தி பாகமானது சங்கின் வடிவத்தை ஒத்து இருக்கும். எனவேதான், இந்த பிரபஞ்சத்தை பாம்பின் வடிவாக (சுற்றிச் சுழன்று ஆடும் தன்மை கொண்டதால்)  கொண்டு, ஆதிசேஷன் என்னும் பாம்பை உவமை ஆக்கி, அதில் சக்தி வடிவாக உள்ள சங்கின் வடிவம் கொண்ட நாராயணன் அதில் துயில் கொள்வதாகச் சொல்வர். 

இந்தப் பிரபஞ்சம் ஒடுங்கும் போது (முழுவதும் இல்லாமல் போகும்போது) அது அந்த சங்கின் வடிவுக்கும் ஒடுங்கி விடும். இந்த பிரபஞ்சம் மீண்டும் விரியும் போது, சங்கு வடிவில் சுற்றிச் சுழன்று விரிவடையும். (இந்தக் பௌதீகக் கொள்கையை இன்றுள்ள ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்). 

இவ்வாறு ஒடுங்கி எஞ்சி இருந்தது மீண்டும் விரிவடைவது என்ற நிலைக்கு ஆதி காரணமாக இருப்பது அந்த சங்கின் மூலப்பகுதிபோல இருப்பதுவே. எனவே அதை ஆதிசேஷன் என்று சொல்வர். அணுவானது, ஸ்தூல நிலையை விட்டு (இயல்பான உருவத்தை விட்டு) சூக்கும வடிவம் குறைந்து கொண்டே வரும் (வடிவம் இல்லா நிலை). அவ்வாறு சூக்கும வடிவம் ஏழாவது நிலையை அடையும்போது, இந்த மூல வடிவத்தைப் பெறுமாம். ஆறாவது நிலையில் கமல வடிவம் என்னும் தாமரை வடிவைப் பெறும். அங்கு சிருஷ்டி புருஷன் (பிறவி ஏற்படுத்துபவன்) பிரம்மா தோன்றுவான். இவ்வாறு நமது பூர்வ வேதாந்த சித்தாந்த அறிஞர்கள் கூறுகிறார்கள்.


No comments:

Post a Comment