Tuesday, December 8, 2015

ரயிலே... ரயிலே...

ரயில்வேக்கு ஒரு சிறிய வேண்டுகோள்

மழைக்கு ரயிலை ரத்து செய்து நிறுத்துவது என்பது சின்னக் குழந்தைகளின் விளையாட்டுப்போல இருப்பது வருத்தமாக உள்ளது; ரயில் தண்டவாளத்தில்தான் ஓடுகிறது; அதற்கு ஒன்றும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை; ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் என்ற ஒரு காரணத்தால் மட்டுமே ரயில் ஓடுவதில்லை; மற்றொரு காரணம் பாலங்கள் உடைந்து விட்டது;

ரயில் நிலையங்களை கட்டுவது, ரயிலில் உணவை கொடுக்க மொபைல் போனில் முன்பதிவு செய்வது, ரயில் நிலையங்களில் வை-பை வசதி செய்வது எல்லாம் தேவைதான்; ஆனால் ரயிலும் ஓடவேண்டுமே?

ரயில்வே முதலாளியே, இனி போடும் ரயில் தண்டவாளங்களை ஐந்தடி உயரத்துக்கு மேல் போடுங்கள்; குட்டி குட்டி பாலங்களை ஸ்டிராங்காக கட்டுங்கள்; பெரிய ஆற்றைக் கடக்கும் பாலங்களை மிக மிக மிக உயரமான பாலங்களாக கட்டுங்கள்; குறைந்த பட்சம், ஒரு ரயில் பாதையாவது, "எப்போதும் ரயில் ஓடும்" என்ற நிலையை ஏற்படுத்தினால், உலகிலேயே இந்திய ரயில்வேதான் மிகப்பெரிய நிறுவனம் என்ற பெயரை சொல்லிக் கொள்வதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்;

மேகம் கருக்கும்போதே, ரயிலை நிறுத்துவது அபத்தம்; அவமானமும் கூட; இனி வரும் காலங்களில் ரயிலை பறக்க விடுவோம்!

_____________ 

No comments:

Post a Comment